உமேஷ் கேதர், தன்  அரிவாளை எடுத்து,  கரும்புச் செடியின் அடியை  வெட்டுக்கிறார்.  உடனே, அடுத்த செடிக்கு செல்கிறார்; பின்னர் மற்றொன்றுக்கு; பின்பு அடுத்தொன்றுக்கு! கரும்புகளை வெட்ட உடல்பலமும், ஆற்றலும் அவசியம்.  அவர் நான்கு ஏக்கர் நிலத்தில் கடும்  வெயிலில்  இப்பணியைச் செய்துக்கொண்டிருக்கிறார். “நாங்கள் காலை 5:30 மணிக்கு ஆரம்பித்தோம், இந்த வேலை மாலை 7 மணி வரை இழுக்கும்.”, பணியில் இருந்து சற்றும் கண் எடுக்காமல் அவர் கூறுகிறார். “கடந்த இரண்டரை மாதங்களாக (நவம்பர் மாதம் முதல்) இப்படிதான் என் நாட்கள்  இருக்கின்றன.  அடுத்த இரண்டரை மாதங்களுக்கும் இப்படித்தான் இருக்கும்”.

அவரின் மனைவி முக்தா, கரும்பு தண்டுகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கிறார். பத்து பத்தாக அடுக்கி,  கரும்பு தழையைப் பயன்படுத்தி சேர்த்து கட்டி வைக்கிறார். பின்னர், அதனை  கொத்தாக  எடுத்து, தன் தலையில் சரியாக வைத்துக்கொண்டு,  வயலில் நின்றுக்கொண்டிருக்கும் சரக்கு வண்டியை நோக்கி செல்கிறார். அந்த பாதை துண்டாகப்பட்ட கரும்புகளுடன் வழுக்கும் நிலையில் உள்ளது. “சிறிது நேரம் கழித்து, நாங்கள் பணிகளை மாற்றிக்கொள்வோம்.  இந்த சமயத்தில் எங்களின் தோல்பட்டையும் கைகளும் மிகவும் வலிக்கும். சில நேரங்களில் தொடர்ந்து வேலை செய்ய நாங்கள் வலிநிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொள்வோம்.”, என்று அவர் கூறுகிறார்.

மகராஷ்டிராவில் பீட் மாவட்டத்தில் வட்வானி  தாலுகாவிலுள்ள சன்னகோடா கிராமத்தின் வயல்களில் கிட்டதட்ட 10 தம்பதியர்கள்  பணி செய்துக்கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து கரும்புகளை வெட்டும் அரிவாளின் சத்ததில் வயல்கள் அதிர்த்துக்கொண்டிருந்தன. உமேஷ்  மற்றும் முக்தா போன்று சிலர் அங்கு  விவசாயிகளே; மற்றவர்களுக்கு தங்களுக்கென நிலங்கள் இல்லை.  பஞ்சு விவசாயத்தில் சுமாரான வருவாய்கூட இல்லாமல், மூன்று  ஏக்கர் நிலத்தில், கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு  மேலாக,  கரும்புகள் வெட்டுபவர்களாக இருக்கும்  நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். “இந்த கரும்பு வெட்டும் வேலையில் எங்களுக்கு கிடைக்கும் பணம் போதுமானதாக இல்லை. ஆனால், குறைந்தப்பட்சம் எங்களுக்கு வருமானம் வருகிறது”, என்கிறார் உமேஷ்.

பார்க்க வீடியோ: உமேஷும் முக்தாவும் அவர்களது பணியை பற்றி விவரிக்கிறார்கள்

உமேஷ் மற்றும் மூக்தா கேதர் தங்களின் பணிகளை விவரிக்கும்  காணொளியை பார்க்கவும்!

”கூட்டுறவு தொழிற்சாலைகளும், சர்க்கரை கூடமும் முன்பும், இப்போது மிகவும் நெருக்கமாக இருப்பவை. இதனால்தான், மற்ற பயிர்களை விட கரும்பு தோட்டங்களுக்கு அதிக தண்ணீர் கிடைக்கின்றது.” என்று ராஜன் க்‌ஷிர்சாகர் கூறுகிறார்

தொடர்ந்து தீவிரமடைந்துவரும் விவசாய நெருக்கடி காரணமாக, மராத்வாடாவில் உள்ள விவசாயிகள் பலரும் விவசாயம் சார்ந்த கூலிவேலைகளுக்கு  பார்க்க தொடங்கியுள்ளனர். வானிலை மாற்றங்கள் மிகவும் ஒழுக்கற்ற முறையில் மாறிக்கொண்டே இருக்கின்றன; நீர்பாசனமும் குறைவாகவே இருக்கின்றது. ஆனால், இந்த வறட்சி நிலையிலும் மராத்வாடாவில்,  தண்ணீர் குடிக்கும்  கரும்புகள் தொடர்ந்து வளர்ந்துக்கொண்டே இருக்கின்றன. வேளாண் செலவுகள் மற்றும் விலைகளுக்கான மாநில ஆணையத்தின் தலைவரின் செயலாளரும், வேளாண் அதிகாரியுமான  உதய் தோலன்கர் கூறுகையில், “மராத்வாடாவில் ஏறக்குறைய  ஒரு வருடத்திற்கு 700 மி.மீ மழை பொழிகிறது. ஆனால், கரும்புகளுக்கு 2,000 to 4,000 மி.மீ மழை பொழிவு தேவை. இதுவே பஞ்சுக்கு 700 மி.மீரும்,  சோயாபீன்ஸூக்கு 450 மி.மீரும் தான் தேவை”. என்கிறார்.

ஆனால், இந்த சமயத்திலும், மற்ற பயிர்களைவிட கரும்புகளுக்குதான் நீர்பாசனத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. பர்பானியைச் சேர்ந்த வேளாண்ஆர்வலரும், சிபிஐ கட்சித் தலைவருமான ராஜன் க்‌ஷிர்சாகர் பேசுகையில், ”கரும்பு ஒர் அரசியல் ரீதியாக பயிர். செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள் தங்கள் சொந்த  ஆர்வம் காரணமாக கரும்பு  விவசாயம் செய்கின்றனர். கூட்டுறவு தொழிற்சாலைகளும், சர்க்கரை கூடமும் முன்பும், இப்போது மிகவும் நெருக்கமாக இருப்பவை. இதனால்தான், மற்ற பயிர்களை விட கரும்பு தோட்டங்களுக்கு அதிக தண்ணீர் கிடைக்கின்றது” என்கிறார்.

PHOTO • Parth M.N.
Workers in the sugarcane fields taking a break for lunch
PHOTO • Parth M.N.

இடது: சறுக்கு வண்டியில் மூக்தாவும் மற்றவர்களும் வெட்டிய கரும்புகளை ஏற்றுக்கின்றனர்;  வலது: நீண்ட நேரம் கடுமையாக உழைத்தபின்னர், தொழிலாளர்கள் அரிதாக சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொள்கின்றனர்

பருவமழை  போதுமானதாக இருந்தாலும்கூட, உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருகின்றது. இதன்காரணமாக,  சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கமான  பயிர் விலைகள் பெரிய லாபத்தை கொடுக்கும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. வேளாண் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின்படி,  காரீப் பயிர்களுக்கான விலை அறிக்கைக் கொள்கை (2017-18) , ஜோவர் (சோள வகை) உற்பத்தி செலவு  ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,089, அதே நேரத்தில் அரசு நிர்ணயத்த குறைந்தபட்ச  விலை (எம்.எஸ்.பி) ரூ. 1,700. இதுவே, பருத்திக்கு எம்.எஸ்.பி  ரூ. 4,320, மற்றும் உற்பத்தி செலவு ரூ. 4,376.

இதனிடையே, தொழிற்சாலை உரிமையாளர்கள் கரும்பு வயல்கள் மூலம் நல்ல வருமானம் ஈடுகின்றனர்; இவர்கள் அங்கு வேலை செய்யும் தம்பதியர்களுக்கு,  அவர்கள் வெட்டும் ஒரு  டன் கரும்புக்கு,  தினக்கூலியாக ரூ.228  என நிர்ணயத்துள்ளனர்.  இதுப்பற்றி முக்தா கூறுகையில், ஒரு நாளுக்கு அவர்களால் இரண்டு டன்கள் மேல் வெட்டமுடியாது. ஐந்து மாதங்களின் இறுதியில், நாங்கள் 55 முதல் 60,000 வரை ஈட்டுவோம்”, சுமார் மதியம் 2 மணிக்கு ரொட்டியை மிளகாய்-பூண்டு சட்னியுடன் உண்டவாறே அவர் கூறுகிறார்.

கடந்த 2015ம் ஆண்டு, மாநில் அரசு இவர்களுக்கான தினக்கூலியை ரூ.199 இருந்து அதிகரித்தது. இதுகுறித்து க்‌ஷிர்சாகர் கூறுகையில், “அவர்கள் குறைந்த பட்ச தினக்கூலி வழங்கும் முறையைக்கூட பின்பற்ற மாட்டார்கள்.  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின்படி, ஏழு மணி நேர வேலைக்கு ஒருவருக்கு ரூ.202 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இங்கு கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து 28 மணிநேரம்  (ஒருவர் 14 மணிநேரம்) கரும்பு நிலங்களில் வேலை செய்கின்றனர். ஆனால், அவர்களுக்கு  ஒரு டனிற்கு ரூ.228 மட்டுமே கிடைக்கிறது.  28 மணிநேரத்தில், அவர்களால்  ரூ.456 ஈட்டுக்கின்றனர்.”, என்கிறார்.

காணொளியை பார்க்க:  “எங்களின் நாள்  காலை 4 மணிக்கு தொடங்கும்..”, சொல்கிறார் உஷா பவார்

பெண்கள் வயல்களுக்கு வருவதற்கு முன்னரே வேலை செய்ய தொடங்கிவிடுகின்றனர்; மேலும், இந்த விவசாய வேலைகள் செய்த பின்னரும் வீட்டுவேலையைத்  தொடரவேண்டியுள்ளது.  “நான் எங்களுக்கும் எங்கள் குழந்தைகளுக்கும் (6, 8 மற்றும் 13 வயதுடையவர்கள்) மதிய உணவை சமைக்க அதிகாலை 4 மணிக்கு எழுவேன். வயல்களில் உழைத்துவிட்டு திரும்பிய பின்னர், இரவு உணவு தயாரிக்க வேண்டும். இந்த கரும்பு வெட்டும் காலத்தில், என்னால் 3 முதல் 4  மணிநேரம் மட்டுமே தூங்க முடியும்”.

முக்தாவுக்கும் உமேஷிற்கும்,  கடந்த 2012 முதல் 2015ம் ஆண்டு வரை மராத்வாடாவில் நிலவிய நான்கு வருட வறட்சி காலக்கட்டத்தில், வங்கியில் ரூ.60,000 கடனும், தனியார் கந்துவட்டிக்காரிடம் ரூ.40,000 கடனும் உள்ளன. இந்த  நிலை, அவர்கள் எப்போதும் கடன் வாங்குவதும், திருப்பி செலுத்துவதுமாக இருக்கும்  சுழற்சியிலேயே சிக்கிக்கொண்டுள்ளனர். இருந்தாலும், மற்றவர்களை விட இவர்களின் நிலை சற்றே தேவலாம். கரும்பு தொழிற்சாலைகளுக்கான பணியாட்களை எடுக்கும் ஒப்பந்தகாரர், அவர்களுக்கு ஒதுக்கிய பணியிடமும், அவர்களின்சொந்த ஊரும் ஒன்றே. இதனால், அவர்களின் குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்கு செல்ல முடிகிறது.

ஆனால், மராத்வாடாவில் மற்றவர்கள்  இங்கிருந்து 75 கரும்பு தொழிற்சாலைகளில் இடம்பெயர்ந்துள்ளனர். பலரும் மேற்கு மகாராஷ்டிராவிலுள்ள கோல்ஹாபூர், சங்லி, சதரா ஆகிய மாவட்டங்களுக்கு அல்லது கர்நாடகாவிலுள்ள பெல்கம் மாவட்டத்தில் இருக்கும்  சர்க்கரை தொழிற்சாலைகளுக்காக பணிச் செய்ய கிட்டதட்ட 100 கிலோமீட்டர்கள் பயணிக்கவேண்டும்.

கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம்,  நான் பீட்டிலிருந்து பெல்கம் செல்லும் விவசாய தொழிலாளர்களின் குழுவுடன் டிராக்டரில் பயணிந்தேன். கிட்டதட்ட இரண்டு நாள்கள் இரவும் பகலும் பயணித்து, சுமார் 500 கிலோமீட்டர்களை 50 மணிநேரத்தில் கடந்தோம். (பார்க்க: கரும்பு நிலங்களுக்கு நீளமான  பாதை ).  இந்த கலைப்பான பயணத்திற்கு பின்னர்,  இடம் பெயர்ந்து வந்தவர்கள் மறுநாள் காலை முதலே பணிகளைத் தொடங்கிவிடுகின்றனர். அவர்கள் வைக்கோலில் தற்காலிமாகப் போடப்பட்ட குடிசையில் தூங்குகின்றனர்;  திறந்தவெளியில் சமைக்கின்றனர்; குளிக்கின்றனர் (பெண்கள் ஒரு கயிற்றில் தொங்கவிடப்பட்ட மெல்லிய  துணிப்போர்வைகளுக்கு பின்னால் குளிக்கின்றனர்). அவர்கள் அருகில் இருக்கும் அணை, கிணறு அல்லது கைப்பம்பு செட்களிலிருந்து தண்ணீர் நிரப்பிக்கொள்ளவேண்டும்.

பீட் மாவட்டத்தின் முன்னால் ஆட்சியர்  ஒருவரின் கணக்குப்படி, கிட்டதட்ட 1,25,000 விவசாயிகள் விவசாய கூலித்தொழிலாளர்களாக பணியாற்ற இடம்பெயர்த்துள்ளனர். ராஜன் க்‌ஷிர்சாகர் கூறுகையில், சிபிஐ தொழிற்சங்கம் நடத்திய ஆய்வின்படி, மராத்வாடாவில் கிட்டதட்ட 6,00,000 கரும்பு தொழிலாளர்கள் இருக்கின்றனர். இதில் மேற்கு மகாராஷ்டிராவுக்கும் கர்நாடகாவுக்கும்  இடம்பெயர்த்து வேலை செய்யபவர்களும் அடங்கும்.

அவர்களுள் பீட் மாவட்டத்திலுள்ள மைல்வாடி கிராமத்தில் 27 வயதான  லதாவும், 30 வயதான விஷ்ணு பவார், அவர்களின் இரண்டு குழந்தைகள், விஷ்ணுவின் இரண்டு சகோதர்கள், அவர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகள். இவர்கள் அனைவரும் கர்நாடகாவின் ஹுக்கேரி தாலுகாவிலுள்ள பெல்கம் நகரத்துக்கு வெளியில்  உள்ள சர்க்கரை தொழிற்சாலைக்கு வேலைக்கு வந்துள்ளனர். அவர்களின் குடிசையும், மற்றும் பலரின் குடிசைகளும், அந்த நிலத்தில் படர்ந்து தொழிற்சாலை வரை நீள்கின்றன.

A man sitting next to a makeshift hut made of yellow tarpaulin
PHOTO • Parth M.N.
Young girl sitting outside a makeshift tent  as a woman looks on in the background
PHOTO • Parth M.N.

பெல்கம் நகரத்தின் வெளிப்புறத்தில் இருக்கும் கரும்பு வயல்களில் வேலை செய்ய, தற்காலிகமாக  அமைக்கப்பட்ட  கூடாரத்திற்கு முன்னால் விஷ்ணு  பவார் (இடது) மற்றும் அவரின் குடும்பம்

விஷ்ணுவிற்கு, கரும்பு வயல்களில் இருக்கும் வாழ்க்கை மிகவும் இரக்கமற்றதாகத் தெரிகிறது. “நாங்கள் வேலை செய்யும்போது, எங்களுக்கு சிலநேரங்களில் அடிப்படும். ஆனாலும், எங்களால்  சற்றும் ஓய்வு எடுக்க முடியாது. அதற்காக மருத்துவச் செலவுகளும் நாங்களே தான் பார்த்துக்கொள்ளவேண்டும்.  முன் பணமாக எங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்குவார்கள். நாங்கள் வெட்டும் கரும்புகள் எண்ணிக்கையைக் கொண்டும் அதனை கணக்கிடுவார்கள். நாங்கள் காயம்  காரணமாக, கொஞ்சம் ஓய்வு எடுத்தாலும், நாங்கள் வேலையையும் பணத்தையும் இழப்போம்.”, என்கிறார்.

விஷ்ணு, லாதாவின் எட்டு வயது மகள் சுகன்யா, பெற்றோர்கள் வேலைசெய்யும் போது, தன் மூன்று மாத தம்பி அஜயை பார்த்துகொள்வதற்காக, அவர்களுடன் வந்திருக்கிறாள். இந்த கரும்பு வெட்டும் காலத்தில், அவள் பள்ளிக்கு செல்லமாட்டாள். ஒரு சிறிய குடிசைக்கு வெளியில் அமர்ந்தவாறு, லாதா பேசுகையில், “அவளை எங்களுடன் அழைத்து வர வேண்டி இருந்தது.  என்னுடைய பிறந்த குழந்தையை விட்டுவரவும் முடியாது. அவளின் படிப்பு பாதிக்கப்படும் என்று எங்களுக்கு தெரியும் (அவள் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள்), ஆனால், எங்களுக்கு வேறு வழி இல்லை”.

The migrant workers install temporary shacks on the fields, where they will spend six months at a stretch. They cook food in the open and use the fields as toilets. Social distancing is a luxury we cannot afford', says Balasaheb Khedkar
PHOTO • Parth M.N.

பர்பானியைச் சேர்ந்த ஷர்தா மற்றும் கைலாஸ் சால்வே, அவர்களின் 12 வயது அக்கா மகளுடனும்,  குழந்தையுடனும்!

பெரும்பாலும், இவர்களின் பணிநாட்களில், மூத்த குழந்தைகள் தங்களின் சகோதரனையோ சதோதரிகளையோ அல்லது உறவினரின் குழந்தைகளையோ பார்த்துக்கொள்வதற்காக  இவர்களுடனே பயணிக்கின்றனர்.  பர்பானி மாவட்டத்தில் அருகே இருக்கும் இடத்திலிருந்து தேல்கோன் பகுதியிலிருக்கும் சர்க்கரை தொழிற்சாலைக்கு வந்த கைலாஸூம் ஷ்ரத்தா சால்வேவும் தங்களின் ஒரு வயது குழந்தை ஹர்ஷவர்தனை தங்களுடன் அழைத்து வந்திருக்கின்றனர். அந்த குழந்தையைப் பார்த்துக்கொள்ள,  ஷ்ரத்தாவின் 12 வயது அக்கா மகள் ஐஸ்வர்யா வன்கடே அவர்களுடன் வந்திருக்கிறாள். “வறுமை அவளின் கல்வியை பாதித்துள்ளது. இங்கு மிகவும் கடினமான வாழ்க்கை. நான் ஒரு நாள் இங்கு அரிவாள் கொண்டு கரும்புகளை வெட்டும்போது, என் கைகளில் காயம்  ஏற்பட்டது. அதன் மருத்துவச் செலவுக்காக என் சொந்த பணத்தை செலவழித்தேன் - கிட்டதட்ட 500 ரூபாய். என்னால் ஒரு நாள்கூட விடுப்பு எடுக்க இயலவில்லை. ஏனென்றால் என் கூலியை அது குறைக்கும்”, என்கிறார் கைலாஸ். இவர், தேவேகோனில் உள்ள தனது ஐந்து ஏக்கர் விளைநிலத்தில் பஞ்சு மற்றும் சோயாபீன்ஸ் சாகுபடி செய்பவர்.

பிபிஷனுக்கும் ரஞ்சனா பாபருக்கும் நடந்ததைப்போல,  இந்த வேலையின் கொடூரமான சூழ்நிலை காரணமாக, தொழிலாளர்களுக்கு அவரின் ஆரோக்கியத்தின் மீது குறைந்தபட்ச அக்கறைத்தான் செலுத்தமுடிகிறது. இவர்கள் பீட்டிலிருக்கும் தங்களின் கிராமமான வட்கோனிலிருந்து 250 கிலோமீட்டர் தள்ளியிருக்கும்  சதரா மாவட்டத்தின் வகோலிக்கு  ஏழு வருடங்கள் முன்னர் இடம்பெயர்ந்தனர். “ஒரு நாள் அவருக்கு மிகவும் உடல்நலம் சரியில்லாமல் போனது. இருந்தும், அவர் தொடர்ந்து வேலை செய்துக்கொண்டிருந்தார்.  அவரால் நிற்கக்கூட முடியாத நிலை வந்தபோது, அவரை மருந்துவரிடம் காட்டினேன். அவருக்கு மஞ்சள் காமாலை என்றார். “. பின்னர், பிபிஷனை அவர் பீட்  மாவட்டத்திற்கு பேருந்தில் அழைத்துவந்தார். “நான் தனியாக வந்தேன். இங்கிருக்கும் பொது மருத்துவமனையில் அனுமதித்தேன். இரண்டு நாள்கள் கழித்து அவர் இறந்துவிட்டார்”, என்று கூறுகிறார்.

ஒரு மாதத்திற்குள்ளே, ரஞ்சனா  மீண்டும்  வகோலிக்கு பணிக்கு திரும்ப வேண்டிய நிலை - அவர்கள் முன் தொகையாகப் பெற்ற பணத்திற்காக கரும்புகளை வெட்டிவேண்டி இருந்ததால்! தற்போது அவர் பீட் நகரத்தில் வாழ்கிறார், ஒரு பள்ளியில் மாதம் ரூ.4500க்கு தூய்மையாளராக பணியாற்றுகிறார். அவர் இனி கரும்புகளை வெட்டமுடியாது; ஏனென்றால், சர்க்கரை தொழிற்சாலைகள் தம்பதியர்களை மட்டுமே வேலைக்கு எடுப்பார்கள்.

ஒவ்வொரு வருடமும், அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்த  கரும்பு வெட்டும் காலம் தொடங்கும். தொழிலாளர்கள் கூலித்தொகையை அதிகரித்து அளிக்குமாறும் கேட்கின்றனர். “ஆனால், எங்களின் இயலாமையைப் பற்றி அரசுக்கும் தொழிற்சாலைகளுக்கும் நன்றாகவே தெரியும்.  எங்களுக்கு வேறு வழியே இல்லை என்று அவர்களுக்கு தெரியும்”, என்கிறார் உமேஷ்.

தமிழில் : ஷோபனா ரூபகுமார்

Parth M.N.

पार्थ एम एन हे पारीचे २०१७ चे फेलो आहेत. ते अनेक ऑनलाइन वृत्तवाहिन्या व वेबसाइट्ससाठी वार्तांकन करणारे मुक्त पत्रकार आहेत. क्रिकेट आणि प्रवास या दोन्हींची त्यांना आवड आहे.

यांचे इतर लिखाण Parth M.N.
Translator : Shobana Rupakumar

Shobana Rupakumar is a Chennai based journalist and she has worked on women and environmental issues.

यांचे इतर लिखाण Shobana Rupakumar