ஜெய்ஷின்டா பண்டா, கிலாபந்தர் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தபடியே மீன்பிடி வலைகளை பின்னுகிறார். மும்பை நகரின் வடக்கில் உள்ள 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த வசை கோட்டையின் எல்லைகளில் இந்த கிராமம் உள்ளது. அவர் மீன்பிடித்தொழிலை செய்துவரும் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர்களுக்கு தேவையான வலைகளை அவரே தயாரிக்கிறார். “ஒரு வலை தயாரிப்பதற்கு ஒரு மாதமாகும்“ என்று அவர் கூறுகிறார். ஜெய்ஷின்டாவின் கணவர் மற்றும் இரு மகன்களும் மீன்பிடி படகில் மீன்பிடிக்கச் சென்றுவிடுவார்கள். அவர்களின் இரண்டு மகள்களும் மும்பைக்கு வேலைக்கு சென்றுவிடுவார்கள். அவர்கள் சென்றபின் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு இவர் அமர்ந்து வலைகளை பின்ன துவங்கிவிடுவார்.
தமிழில்: பிரியதர்சினி. R.