1949 ஆம் ஆண்டு, ஜிபன் கிருஷ்ணா போதார், தனது பதினான்கு வயதில், அவரது பெற்றோர்கள் மற்றும் பாட்டியுடன் மேற்குவங்க மாநிலம் பரிசால் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறினார். கடந்த 1946 ஆம் ஆண்டு நடந்த நோக்ஹாலி கலவரம்தான் இடப்பெயர்வுக்கு வழிவகுத்தது. அது பல ஆண்டுகள் எதிரொலித்தது. இந்த கலவரம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், ஜிபன் குடும்பத்தினர் சுந்தர்பன் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
தற்போது சுமார் 80 வயதினை எட்டியிருக்கும் அவர், , பதர்பிரதிமா பிளாக் பகுதியின் கிருஷ்ணதாஸ்பூர் கிராமத்தில் அமைந்துள்ள, அவரது வீட்டின் வராண்டாவில் மழைப்பொழிந்த ஒரு மாலைப்பொழுதில் அமர்ந்திருந்தவாறு, இங்கு அவரை அழைத்து வந்த பயணத்தைக் குறித்து நினைவுகூர்ந்தார்: “அங்கு வன்முறை ஏற்பட்டது. எனவே,நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம்.என் அம்மா,உஷா ராணி போதார், எங்கள் உடமைகள் அனைத்தையும் 14 பைகளில் தயார்படுத்தினார். நாங்கள் கப்பலின் வழியாக (அப்போது கிழக்கு வங்காளப்பகுதியில் இருந்த) குல்னா பகுதியை அடைந்தோம். ஒரு ரயில் எங்களை பினாபோல் பகுதிக்கு கொண்டு சென்றது. எண்களின் நகை மற்றும் பணத்தை உடமைகளிலும் துணிகளிலும் மறைத்துக் கொண்டோம்” என்று குறிப்பிட்டார்.
இதனைத்தொடர்ந்து, மேற்குவங்க மாநிலத்தின் நடியா மாவட்டத்தில் இருந்த அகதிகள் மூகாமில் அவரது குடும்பம் தங்கவைக்கப்பட்டதாகவும், அங்கு 11 மாதங்கள் 20,000க்கும் மேற்பட்டவருடன் தங்கி இருந்ததாகவும் நினைவு கூர்ந்தார். இந்நிலையில், இந்த முகாமில் இருந்த அகதிகள் தண்டகாரண்யா பகுதி(மத்திய இந்தியாவின் பாஸ்டர் வனப்பகுதி), அந்தமான் பகுதி அல்லது மேற்கு வங்க மாநிலத்தின் சுந்தர்பன் பகுதியில் தங்குவதற்கு கோரப்பட்டனர்.
“என் தந்தை, சரத் சந்திர போதார், சுந்தர்பன் பகுதியைத் தேர்ந்தெடுத்தார்,” என ஜிபன் கூறினார். “இங்கு அவர் சொந்த நிலத்தைப் பெறவும். விவசாயம் செய்யவும் விரும்பினார். மாச் மற்றும் சாஷ்(பெங்காலியில் மீன் மற்றும் விவசாயம்) ஆகிய இரண்டும் அதற்கு கவர்ந்திழுத்ததில் மிகமுக்கியமானவை. தண்டகாரண்யம் மற்றும் அந்தமான் ஆகிய இரண்டும் மனிதர்கள் வசிக்காத காடுகளாக, வசிப்பதற்கு கடினமாக இருக்கும் என உணர்ந்தார்.




