ஒடிஷாவின் கோராபுட் மாவட்டத்தைச் சேர்ந்த கோண்ட் பழங்குடிகள், ஜகந்நாத் ரத யாத்திரையின் இறுதி விழாவைக் கொண்டாடுவதற்காக குன்றுகளில் இருந்து இறங்கி நாராயண்பட்னா நகருக்கு வந்திருக்கிறார்கள். இறுதிநாள் விழாவை பஹுட யாத்ரா என்று அழைக்கிறார்கள். இறைவன் ஜகந்நாதர் ரதத்தில் (தேர்) தனது கோவிலுக்குத் திரும்புவதைக் குறிக்கும் நிகழ்வுதான் பஹுட யாத்ரா. 14 முதல் 16 வயதுக்கு இடையிலான வயதுடைய இந்த மூன்று தோழிகளும், திருவிழாக் கொண்டாட்டம் நடக்கும் பகுதியில் உலவிக் கொண்டிருக்கிறார்கள்.
புகைப்படம்: பி.சாய்நாத், ஜூலை 2, 2009, Nikon D 300.
குணவதி