அவர்களில் தாதாத்ர சுர்வேயின் ஆறாம் வகுப்பு பயிலும் மகனான விவேக் என்பவரும் ஒருவர். "ஆசிரியர்கள் பெரும்பாலும் வகுப்பிலேயே இருப்பதில்லை", என்று சுர்வே கூறுகிறார். "மற்ற மாவட்டங்களில் உள்ள பல பள்ளிகள் பட்ஜெட் காரணமாக மின்சாரத்தை துண்டித்து உள்ளன. இது ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் உள்ள மாணவர்களை அரசு கண்டு கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது", என்று கூறுகிறார்.
சுர்வே ஒரு விவசாயி, தனது மகனுக்கு சிறந்த கல்வி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார். "விவசாயத்தில் எதிர்காலம் இல்லை", என்று அவர் கூறுகிறார் இப்போது ஆண்டுக்கு 3,000 ரூபாய் கட்டணமாக செலுத்துகிறார். "நான் அவனது எதிர்காலத்தை சமரசம் செய்ய விரும்பாததால் அவனை மாற்றினேன்", என்று கூறுகிறார்.
இதைத் தவிர அகமதுநகரை சேர்ந்த கல்வியாளர் ஹேராம்ப் குல்கர்னி, பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தை நன்கு அறிய வேண்டுமென்று விரும்புகிறார்கள் அதனால் தான் பெற்றோர்கள் ஒரு ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு, அங்கு மராத்தி மொழியில் பயிற்றுவிக்கப்படுகிறது, பதிலாக ஆங்கில வழி பள்ளிகளை விரும்புகின்றனர், என்று கூறுகிறார்.
ஆக மகாராஷ்டிராவின் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 2007- 08 ஆம் ஆண்டில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த 1.2 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களில் பத்தாண்டுகளுக்குப் பிறகு 2017 - 2018 ஆம் ஆண்டில் வெறும் 30,248 மாணவர்களே இப்பள்ளியில் இருந்து பத்தாம் வகுப்பிலிருந்து தேர்ச்சி பெற்றிருக்கின்றனர், இது வெறும் 2.5 சதவீதம் மட்டுமே என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட தரவுகள் கூறுகின்றன.
பெரும்பாலான ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் ஏழு அல்லது எட்டாம் வகுப்பு வரை மட்டுமே உள்ளன (மற்றும் பத்தாம் வகுப்பு வரை இல்லை) என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டாலும், இந்த எண்ணிக்கை மிகவும் குறைவானதே. 2009 - 10 ஆம் ஆண்டில் மாநிலத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களை கொண்டிருந்தது எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2017 - 18 ஆண்டில் எட்டாம் வகுப்பில் 1,23,739 மாணவர்கள் மட்டுமே இருந்தனர், அதாவது 89 சதவீதம் மாணவர்கள் இடையில் வெளியேறி இருக்கின்றனர்.
இருப்பினும், இடப்பெயர்வு காரணமாக ஊராட்சி ஒன்றிய பள்ளியில் இருந்து மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. விவசாயிகளும், தொழிலாளர்களும் பருவகால வேலைக்காக இடம்பெயரும் போது தங்களுடன் தங்களது பிள்ளைகளையும் அழைத்துச் செல்கின்றனர். மராத்வாடா விவசாய மாவட்டங்களிலிருந்து குடிபெயர்தல் அதிகரித்து வருகின்றது - மேலும் குறைந்தது 6 லட்சம் விவசாயிகள் இப்பகுதிக்குள் அல்லது மேற்கு மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவிற்கு நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் கரும்பு வெட்டிளாக வேலை செய்ய குடிபெயர்கிறார்கள் என்று மூத்த கம்யூனிஸ்ட் தலைவரான ராஜன் கிஷான் சாகர் தெரிவித்துள்ளார்.
கைலாஷ் மற்றும் சாரதா சால்வே ஆகியோர் ஒவ்வொரு ஆண்டும் பார்பானியின் தேவ்காவுன் கிராமத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தேல்காவுன் Kh., பீட் ஆகிய ஊர்களில் உள்ள சர்க்கரை ஆலைகளில் வேலைக்கு செல்கின்றனர். அவர்கள் தங்களது கைக்குழந்தையான ஹர்ஷவர்தன் மற்றும் சாரதாவின் மருமகளான 12 வயதாகும் ஐஸ்வர்யா வான்கடேயுடன் பயணிக்கின்றனர். "வறுமையால் அவள் கல்வியை இழந்துள்ளாள்", என்று கூறுகிறார் கைலாஷ். அவரும் சாரதாவும் தங்கள் 5 ஏக்கர் நிலத்தில் பருத்தி மற்றும் சோயாபீனை பயிரிடுகின்றனர், ஆனால் இதன் மூலம் ஆண்டு முழுவதுக்குமான லாபகரமான பணத்தை அவர்களால் சம்பாதிக்க முடிவதில்லை. நாங்கள் வயல்களில் வேலை செய்யும்போது ,எங்களது கைக்குழந்தையை கவனித்துக் கொள்வதற்கு அவள் தேவைப்படுகிறாள். (மேலும் காண்க: 2000 மணி நேரம் கரும்புகள் வெட்டப்படுகின்றன).