ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியாவின் பிற பகுதிகள் சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, தெலெங்கானாவைச் சேர்ந்த மல்லு ஸ்வராஜ்யமும் அவரின் சகப் போராளிகளும் ஹைதராபாத் நிஜாமின் ராணுவத்தையும் காவல்துறையையும் எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தனர். பிடித்துக் கொடுத்தால் 10,000 ரூபாய் கொடுக்கப்படும் என 1946-ல், 16 வயதிலேயே அறிவிக்கப்பட்ட அச்சமில்லாப் போராளி பற்றியக் காணொளி இது. அந்தக் காலத்தில் 83,000 கிலோ அரிசியை அந்தத் தொகையில் வாங்கி விட முடியும்.

அவர் 84 வயதில் இருந்தபோது எடுக்கப்பட்ட சில காட்சிகளையும் பிறகு 92 வயதில் எடுக்கப்பட்ட சிலக் காட்சிகளையும் இக்காணொளி கொண்டிருக்கிறது. இந்த வருடத்தின் மார்ச் 19ம் தேதி இறந்துவிட்ட இந்த விடுதலைப் போராட்ட வீரருக்கு மரியாதை செலுத்தும்வகையில் இக்காணொளியை இன்று, ஆகஸ்ட் 15, 2022 வெளியிடுகிறோம். மல்லு ஸ்வராஜ்யம் பற்றிய முழுக் கட்டுரையை PARI-ன் நிறுவன ஆசிரியரான பி.சாய்நாத் எழுதி, நவம்பர் மாதத்தில் பெங்குவின் இந்தியாவால் பதிப்பிக்கப்பட இருக்கும் The Last Heroes: Footsoldiers of Indian Freedom என்ற புத்தகத்தில் காணலாம்.

காணொளி: சுதந்திரப் போராட்ட வீரர் மல்லு ஸ்வராஜ்யம்: 'காவலர்கள் பயத்தில் ஓடிவிட்டனர்'

தமிழில் : ராஜசங்கீதன்

Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

यांचे इतर लिखाण Rajasangeethan