நான் நர்மதா மாவட்டத்தில் உள்ள மஹுபதா கிராமத்தில் பில்ஸின் வாசவா குலத்தில் பிறந்தேன். மஹாகுஜராத் இயக்கத்திற்குப் பிறகு (1956-1960) தனி மொழிவாரி மாநிலமாக உருவானபோது, குஜராத்தின் பகுதியான மகாராஷ்டிரா எல்லையில் (அப்போது பம்பாய் மாநிலத்தின் ஒரு பகுதி) இருந்த 21 கிராமங்களில் எனது கிராமமும் ஒன்றாகும். அதனால் என் பெற்றோருக்கு மராத்தி தெரியும். பேசினார்கள். தபி மற்றும் நர்மதா நதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் தெஹ்வாலி பிலி மொழி பேசும் பில் சமூகத்தினர் வசிக்கின்றனர். “தபியின் மறுபுறம் மகாராஷ்டிராவின் ஜல்கான் வரை மக்கள் ஏதோ ஒரு வகையான தெஹ்வாலியைப் பேசுகிறார்கள். சத்புரா மலைகளில் உள்ள மோல்கி மற்றும் தாட்கான் கிராமங்கள் வரை குஜராத்தின் பக்கம் அவர்கள் இதைப் பேசுகிறார்கள். இது குஜராத் மற்றும் மகாராஷ்டிரா முழுவதும் பரந்திருக்கும் ஒரு பெரியப் பகுதி.
நான் தெஹ்வாலி பிலியில் எழுதுகிறேன். எங்களைப் பற்றி அதிகம் தெரியாதவர்கள் எங்களின் சமூகங்களை வைத்து எம் மொழியை அடையாளம் காணுகிறார்கள். எனவே, சில சமயங்களில் நான் வாசவியில் எழுதுகிறேன் என்று சொல்கிறார்கள் - என் குடும்பம் வாசவ குலத்தைச் சேர்ந்தது. குஜராத்தில் பழங்குடிகள் பேசும் மொழிகளில் நான் எழுதும் மொழியும் ஒன்று. குஜராத்தின் டாங்ஸில் உள்ள பில்கள் வார்லி பேசுகிறார்கள். இப்பகுதியைச் சேர்ந்த அசல் பில்கள் பிலி பேசுகிறார்கள். கொங்கனில் இருந்து வந்தவர்கள் கொக்னி பேசுகிறார்கள். வல்சாத்தில் அவர்கள் வார்லி மற்றும் தோடியா பேசுகிறார்கள். வியாரா மற்றும் சூரத்தில், கமிட்; உச்சல் பக்கத்தில் சௌதாரி; நிசாரில் அவர்கள் மவ்ச்சி பேசுகிறார்கள்; நிசார் மற்றும் சக்பரா இடையே, பில்கள் தெஹ்வாலி பேசுகிறார்கள். பிறகு அம்புடி, கதலி வாசவி, தத்வி, துங்க்ரா பிலி, ரத்வி, பஞ்சமஹாலி பிலி, துங்கரி கராசியா, துங்கரி பிலி...
விதையில் காடு போல ஒவ்வொரு மொழியிலும் மறைந்திருக்கும் பொக்கிஷங்களை கற்பனை செய்து பாருங்கள். அவை இலக்கியம், அறிவு, உலகக் கண்ணோட்டங்களைச் கொண்டிருக்கின்றன. எனது வேலையின் மூலம் இந்தப் பொக்கிஷத்தை வளர்க்கவும், பராமரிக்கவும், கொண்டாடவும் நான் போராடுகிறேன்.


