பன்வாரி தேவியின் 13 வயது மகள் பஜ்ரா வயல்களில் உயர்சாதியினரால் வல்லுறவு செய்யப்பட்டபோது, அவர் ஒரு லத்தியை எடுத்துக்கொண்டு வல்லுறவு செய்தவனை பின் தொடர்ந்து சென்றார். அவருக்கு காவல்துறை மற்றும் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இல்லை. அவர் அஹிரான் கா ராம்புராவின் ஆதிக்க சாதியினரிடமிருந்து எந்தவித நிவாரணமும் கேட்க முடியாமல் தடுக்கப்பட்டார். “கிராம சாதி பஞ்சாயத்து எனக்கு நீதி வழங்குவதாக வாக்குறுதி அளித்தது” என்கிறார். “ஆனால் அவர்கள் என்னையும் என் குடும்பத்தையும் ராம்புராவிலிருந்து வெளியேற்றினர்.” வல்லுறவு சம்பவம் நடைபெற்று சுமார் பத்தாண்டுகள் கழித்தும், அஜ்மர் கிராமத்திலிருந்து ஒருவரும் தண்டிக்கப்படவில்லை.
ராஜஸ்தானிலும் இது ஒரு பெரிய விஷயம் அல்ல. இம்மாநிலத்தில் சராசரியாக 60 மணி நேரத்திற்கும் ஒரு தலித் பெண் வல்லுறவுக்கு ஆளாகிறார்.
பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கான தேசிய ஆணையத்தின் ஆய்வு முடிவுகளின் படி 1991 முதல் 1996 வரை பட்டியல் சாதி பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடைபெற்றதாக சுமார் 900 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது வருடத்திற்கு 150 வழக்குகள் – அல்லது ஒவ்வொரு அறுபது மணி நேரத்திற்கும் ஒரு வழக்கு. (ஜனாதிபதி ஆட்சியில் இருந்த ஒரு சில மாதங்களை தவிர்த்து, பாரதீய ஜனதா கட்சியே அம்மாநிலத்தை முழுவதும் ஆட்சி செய்தது.) எண்ணிக்கைகள் உண்மை நிலையை பிரதிபலிப்பதில்லை. இத்தகைய குற்றச் சம்பவங்களை குறைவாக பதிவாவது நாட்டிலேயே இம்மாநிலத்தில்தான் மிகவும் மோசமாக உள்ளது.
தொல்பூர் மாவட்டத்தில் உள்ள நக்சோடாவில், மிக மோசமான ஒரு அட்டூழியத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் கிராமத்தை விட்டே வெளியே சென்றுவிட்டார். 1998 ஏப்ரலில், ராமேஸ்வர் ஜாதவ் என்ற தலித் சமுதாயத்தை சேர்ந்தவர், குஜ்ஜர் என்ற உயர் சாதியினரிடம் தான் கடனாக வழங்கிய 150 ரூபாய் பணத்தை திரும்பக் கேட்டார். பிரச்சினை உருவானது. அவருடைய ஆணவத்தால் ஆத்திரமடைந்த சில குஜ்ஜர்கள் அவரது மூக்கை துளையிட்டு அதில் இரண்டு கயிற்று வளையங்களை மாட்டியதோடு, ஒரு மீட்டர் நீளம் மற்றும் 2 மிமீ கனமுடைய அதை மூக்கில் மாட்டி விட்டனர். பிறகு கிராமத்தை சுற்றி அவரை கூட்டிச் சென்றனர்.
இச்சம்பவம் தலைப்பு செய்திகளில் இடம்பெற்றதோடு தேசிய அளவில் சீற்றம் பெற்றது. வெளிநாடுகளிலும் அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் பரவலாக அறிவிக்கப்பட்டது. அனைத்து செய்திகளும் நீதியை உறுதிபடுத்துவதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. கிராமத்திற்குள்ளிருந்த அச்சமும் களத்தில் இருந்த அதிகாரத்துவமும் அதை அப்படியிருக்கும் வகையில் பார்த்துக் கொண்டன. பரபரப்பும் கவர்ச்சியும் இல்லாமல் போகவே, ஊடகமும் வழக்கின் மீது இருந்த ஆர்வத்தை இழந்தது. அதே போலவே மனித உரிமை அமைப்புகளும் ஆர்வத்தை இழந்தன. பாதிப்புக்குள்ளானவர்கள் பிந்தைய இசையை எதிர்கொண்டனர். ராமேஷ்வர் தனது நீதிமன்ற வாதத்தை முழுவதுமாக மாற்றிக்கொண்டார். ஆம், அராஜகம் நடந்தது. எனினும், புகாரில் கொடுக்கப்பட்டுள்ள அந்த ஆறு பேர் குற்றத்தை செய்யவில்லை. அவரால் குற்றவாளிகளை அடையாளம் காணமுடியவில்லை.
காயங்களை பதிவு செய்த மூத்த மருத்துவ அலுவலர் தற்போது எல்லாவற்றையும் மறந்துவிட்டதாக கூறினார். ஆம், ராமேஷ்வர் அவரை காயங்களுடன் அணுகினார். அவரால் அதை நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை, பாதிக்கப்பட்டவர் அந்த அசாதாரண காயங்களை எவ்வாறு கடந்து வந்தார் என்று கூறிய போதும் கூட.






