குஜ் கெஹா டான் ஹனேரா ஜாரேகா கிவென்
சுப் ரெஹா டான் ஷமாதான் கி கெஹங்கே

நான் ஏதேனும் சொன்னால், இருளால் தாங்க முடியாது,
நான் அமைதியாக இருந்தால், மெழுகுவர்த்தி என்ன சொல்லும்?

சுர்ஜித் படார் (1945-2024) அமைதியாக இருப்பவர் அல்ல. சொல்லப்போனால், உயிருடன் இருக்கும்போதே அவருக்குள் இருக்கும் பாடல் மரித்துப் போவதுதான் அவருக்கு கெட்டக் கனவாக இருந்த விஷயமே. எனவே அவர் பேசினார். அவரின் நடவடிக்கைகள் மிகவும் சத்தமாகவே (இந்தியாவில் மதவாதம் அதிகரித்து வருவதை குறித்து அரசாங்கம் கண்டுகொள்ளாததை கண்டித்து பத்மஸ்ரீ விருதை 2015-ல் திருப்பி அளித்தது உள்ளிட்ட செயல்பாடுகள்) பேசின. அவரின் கவிதைகளோ சற்றே நிதானமாக கூரான வார்த்தைகளை பாய்ச்சின. பஞ்சாப் பிரிவினை, அதிகரிக்கும் தீவிரவாதம், முதலாளித்துவ வணிகமயமாக்கல், விவசாயப் போராட்டங்கள் என அவரின் கவிதைகள் பஞ்சாபின் பல யதார்த்தங்களை படம்பிடித்துக் காட்டியது.

ஜலந்தர் மாவட்டத்தின் படார் கலான் கிராமத்தை சேர்ந்த இந்தக் கவிஞரின் கவிதைகள், விளிம்பு நிலை மக்கள், புலம்பெயர்ந்தவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பற்றி பாடியிருக்கின்றன. காலம் தாண்டி அக்கவிதைகள் வாழ்ந்திருக்கின்றன.

இங்கு இடம்பெற்றிருக்கும் ‘விழா’ என்கிற கவிதை, மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது ஜனநாயகத்தின் போராட்ட உணர்வையும் தொடர் ஊக்கத்தையும் கொண்டாடி எழுதப்பட்டது.

கவிதையை பஞ்சாபியில் வாசிக்கிறார் ஜீனா சிங்

கவிதையை ஆங்கிலத்தில் வாசிக்கிறார் ஜோஷுவா போதிநெத்ரா

ਇਹ ਮੇਲਾ ਹੈ

ਕਵਿਤਾ
ਇਹ ਮੇਲਾ ਹੈ
ਹੈ ਜਿੱਥੋਂ ਤੱਕ ਨਜ਼ਰ ਜਾਂਦੀ
ਤੇ ਜਿੱਥੋਂ ਤੱਕ ਨਹੀਂ ਜਾਂਦੀ
ਇਹਦੇ ਵਿਚ ਲੋਕ ਸ਼ਾਮਲ ਨੇ
ਇਹਦੇ ਵਿਚ ਲੋਕ ਤੇ ਸੁਰਲੋਕ ਤੇ ਤ੍ਰੈਲੋਕ ਸ਼ਾਮਲ ਨੇ
ਇਹ ਮੇਲਾ ਹੈ

ਇਹਦੇ ਵਿਚ ਧਰਤ ਸ਼ਾਮਲ, ਬਿਰਖ, ਪਾਣੀ, ਪੌਣ ਸ਼ਾਮਲ ਨੇ
ਇਹਦੇ ਵਿਚ ਸਾਡੇ ਹਾਸੇ, ਹੰਝੂ, ਸਾਡੇ ਗੌਣ ਸ਼ਾਮਲ ਨੇ
ਤੇ ਤੈਨੂੰ ਕੁਝ ਪਤਾ ਹੀ ਨਈਂ ਇਹਦੇ ਵਿਚ ਕੌਣ ਸ਼ਾਮਲ ਨੇ

ਇਹਦੇ ਵਿਚ ਪੁਰਖਿਆਂ ਦਾ ਰਾਂਗਲਾ ਇਤਿਹਾਸ ਸ਼ਾਮਲ ਹੈ
ਇਹਦੇ ਵਿਚ ਲੋਕ—ਮਨ ਦਾ ਸਿਰਜਿਆ ਮਿਥਹਾਸ ਸ਼ਾਮਲ ਹੈ
ਇਹਦੇ ਵਿਚ ਸਿਦਕ ਸਾਡਾ, ਸਬਰ, ਸਾਡੀ ਆਸ ਸ਼ਾਮਲ ਹੈ
ਇਹਦੇ ਵਿਚ ਸ਼ਬਦ, ਸੁਰਤੀ , ਧੁਨ ਅਤੇ ਅਰਦਾਸ ਸ਼ਾਮਲ ਹੈ
ਤੇ ਤੈਨੂੰ ਕੁਝ ਪਤਾ ਹੀ ਨਈਂ ਇਹਦੇ ਵਿੱਚ ਕੌਣ ਸ਼ਾਮਲ ਨੇ

ਜੋ ਵਿਛੜੇ ਸਨ ਬਹੁਤ ਚਿਰਾ ਦੇ
ਤੇ ਸਾਰੇ ਸੋਚਦੇ ਸਨ
ਉਹ ਗਏ ਕਿੱਥੇ
ਉਹ ਸਾਡਾ ਹੌਂਸਲਾ, ਅਪਣੱਤ,
ਉਹ ਜ਼ਿੰਦਾਦਿਲੀ, ਪੌਰਖ, ਗੁਰਾਂ ਦੀ ਓਟ ਦਾ ਵਿਸ਼ਵਾਸ

ਭਲ਼ਾ ਮੋਏ ਤੇ ਵਿਛੜੇ ਕੌਣ ਮੇਲੇ
ਕਰੇ ਰਾਜ਼ੀ ਅਸਾਡਾ ਜੀਅ ਤੇ ਜਾਮਾ

ਗੁਰਾਂ ਦੀ ਮਿਹਰ ਹੋਈ
ਮੋਅਜਜ਼ਾ ਹੋਇਆ
ਉਹ ਸਾਰੇ ਮਿਲ਼ ਪਏ ਆ ਕੇ

ਸੀ ਬਿਰਥਾ ਜਾ ਰਿਹਾ ਜੀਵਨ
ਕਿ ਅੱਜ ਲੱਗਦਾ, ਜਨਮ ਹੋਇਆ ਸੁਹੇਲਾ ਹੈ
ਇਹ ਮੇਲਾ ਹੈ

ਇਹਦੇ ਵਿਚ ਵਰਤਮਾਨ, ਅਤੀਤ ਨਾਲ ਭਵਿੱਖ ਸ਼ਾਮਲ ਹੈ
ਇਹਦੇ ਵਿਚ ਹਿੰਦੂ ਮੁਸਲਮ, ਬੁੱਧ, ਜੈਨ ਤੇ ਸਿੱਖ ਸ਼ਾਮਲ ਹੈ
ਬੜਾ ਕੁਝ ਦਿਸ ਰਿਹਾ ਤੇ ਕਿੰਨਾ ਹੋਰ ਅਦਿੱਖ ਸ਼ਾਮਿਲ ਹੈ
ਇਹ ਮੇਲਾ ਹੈ

ਇਹ ਹੈ ਇੱਕ ਲਹਿਰ ਵੀ , ਸੰਘਰਸ਼ ਵੀ ਪਰ ਜਸ਼ਨ ਵੀ ਤਾਂ ਹੈ
ਇਹਦੇ ਵਿਚ ਰੋਹ ਹੈ ਸਾਡਾ, ਦਰਦ ਸਾਡਾ, ਟਸ਼ਨ ਵੀ ਤਾਂ ਹੈ
ਜੋ ਪੁੱਛੇਗਾ ਕਦੀ ਇਤਿਹਾਸ ਤੈਥੋਂ, ਪ੍ਰਸ਼ਨ ਵੀ ਤਾਂ ਹੈ
ਤੇ ਤੈਨੂੰ ਕੁਝ ਪਤਾ ਹੀ ਨਈ
ਇਹਦੇ ਵਿਚ ਕੌਣ ਸ਼ਾਮਿਲ ਨੇ

ਨਹੀਂ ਇਹ ਭੀੜ ਨਈਂ ਕੋਈ, ਇਹ ਰੂਹਦਾਰਾਂ ਦੀ ਸੰਗਤ ਹੈ
ਇਹ ਤੁਰਦੇ ਵਾਕ ਦੇ ਵਿਚ ਅਰਥ ਨੇ, ਸ਼ਬਦਾਂ ਦੀ ਪੰਗਤ ਹੈ
ਇਹ ਸ਼ੋਭਾ—ਯਾਤਰਾ ਤੋ ਵੱਖਰੀ ਹੈ ਯਾਤਰਾ ਕੋਈ
ਗੁਰਾਂ ਦੀ ਦੀਖਿਆ 'ਤੇ ਚੱਲ ਰਿਹਾ ਹੈ ਕਾਫ਼ਿਲਾ ਕੋਈ
ਇਹ ਮੈਂ ਨੂੰ ਛੋੜ ਆਪਾਂ ਤੇ ਅਸੀ ਵੱਲ ਜਾ ਰਿਹਾ ਕੋਈ

ਇਹਦੇ ਵਿਚ ਮੁੱਦਤਾਂ ਦੇ ਸਿੱਖੇ ਹੋਏ ਸਬਕ ਸ਼ਾਮਲ ਨੇ
ਇਹਦੇ ਵਿਚ ਸੂਫ਼ੀਆਂ ਫੱਕਰਾਂ ਦੇ ਚੌਦਾਂ ਤਬਕ ਸ਼ਾਮਲ ਨੇ

ਤੁਹਾਨੂੰ ਗੱਲ ਸੁਣਾਉਨਾਂ ਇਕ, ਬੜੀ ਭੋਲੀ ਤੇ ਮਨਮੋਹਣੀ
ਅਸਾਨੂੰ ਕਹਿਣ ਲੱਗੀ ਕੱਲ੍ਹ ਇਕ ਦਿੱਲੀ ਦੀ ਧੀ ਸੁਹਣੀ
ਤੁਸੀਂ ਜਦ ਮੁੜ ਗਏ ਏਥੋਂ, ਬੜੀ ਬੇਰੌਣਕੀ ਹੋਣੀ

ਬਹੁਤ ਹੋਣੀ ਏ ਟ੍ਰੈਫ਼ਿਕ ਪਰ, ਕੋਈ ਸੰਗਤ ਨਹੀਂ ਹੋਣੀ
ਇਹ ਲੰਗਰ ਛਕ ਰਹੀ ਤੇ ਵੰਡ ਰਹੀ ਪੰਗਤ ਨਹੀਂ ਹੋਣੀ
ਘਰਾਂ ਨੂੰ ਦੌੜਦੇ ਲੋਕਾਂ 'ਚ ਇਹ ਰੰਗਤ ਨਹੀਂ ਹੋਣੀ
ਅਸੀਂ ਫਿਰ ਕੀ ਕਰਾਂਗੇ

ਤਾਂ ਸਾਡੇ ਨੈਣ ਨਮ ਹੋ ਗਏ
ਇਹ ਕੈਸਾ ਨਿਹੁੰ ਨਵੇਲਾ ਹੈ
ਇਹ ਮੇਲਾ ਹੈ

ਤੁਸੀਂ ਪਰਤੋ ਘਰੀਂ, ਰਾਜ਼ੀ ਖੁਸ਼ੀ ,ਹੈ ਇਹ ਦੁਆ ਮੇਰੀ
ਤੁਸੀਂ ਜਿੱਤੋ ਇਹ ਬਾਜ਼ੀ ਸੱਚ ਦੀ, ਹੈ ਇਹ ਦੁਆ ਮੇਰੀ
ਤੁਸੀ ਪਰਤੋ ਤਾਂ ਧਰਤੀ ਲਈ ਨਵੀਂ ਤਕਦੀਰ ਹੋ ਕੇ ਹੁਣ
ਨਵੇਂ ਅਹਿਸਾਸ, ਸੱਜਰੀ ਸੋਚ ਤੇ ਤਦਬੀਰ ਹੋ ਕੇ ਹੁਣ
ਮੁਹੱਬਤ, ਸਾਦਗੀ, ਅਪਣੱਤ ਦੀ ਤਾਸੀਰ ਹੋ ਕੇ ਹੁਣ

ਇਹ ਇੱਛਰਾਂ ਮਾਂ
ਤੇ ਪੁੱਤ ਪੂਰਨ ਦੇ ਮੁੜ ਮਿਲਣੇ ਦਾ ਵੇਲਾ ਹੈ
ਇਹ ਮੇਲਾ ਹੈ

ਹੈ ਜਿੱਥੋਂ ਤੱਕ ਨਜ਼ਰ ਜਾਂਦੀ
ਤੇ ਜਿੱਥੋਂ ਤੱਕ ਨਹੀਂ ਜਾਂਦੀ
ਇਹਦੇ ਵਿਚ ਲੋਕ ਸ਼ਾਮਲ ਨੇ
ਇਹਦੇ ਵਿਚ ਲੋਕ ਤੇ ਸੁਰਲੋਕ ਤੇ ਤ੍ਰੈਲੋਕ ਸ਼ਾਮਿਲ ਨੇ
ਇਹ ਮੇਲਾ ਹੈ

ਇਹਦੇ ਵਿਚ ਧਰਤ ਸ਼ਾਮਿਲ, ਬਿਰਖ, ਪਾਣੀ, ਪੌਣ ਸ਼ਾਮਲ ਨੇ
ਇਹਦੇ ਵਿਚ ਸਾਡੇ ਹਾਸੇ, ਹੰਝੂ, ਸਾਡੇ ਗੌਣ ਸ਼ਾਮਲ ਨੇ
ਤੇ ਤੈਨੂੰ ਕੁਝ ਪਤਾ ਹੀ ਨਈਂ ਇਹਦੇ ਵਿਚ ਕੌਣ ਸ਼ਾਮਲ ਨੇ।

விழா

கண்ணுக்கெட்டிய தூரம் வரையும் அதற்கு அப்பாலும்
இதில் பங்கேற்கும் மக்களின் எழுச்சி தெரிகிறது.
இந்த பூமியை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல
பிரபஞ்சத்தின் எல்லா பகுதிகளை சேர்ந்தவர்களும்
இதில் இருக்கின்றனர்.
இது ஒரு விழா.
மண், மரங்கள், காற்று மற்றும் நீர்
எங்களின் சிரிப்பும், கண்ணீரும்
எல்லா பாடல்களும் கூட அதில் இருக்கிறது.
ஆனால் நீங்கள் சொல்கிறீர்கள்
யாரெல்லாம் பங்கேற்றிருக்கிறார்கள் என்பது தெரியாதென!
நம் முன்னோரின் பளபளக்கும் வரலாறு,
நாட்டுப்புறக் கதை, மக்களின் தொன்மம்,
எங்களின் பாடல், பொறுமை மற்றும் நம்பிக்கை,
தெய்வ வாக்கு, பிற பாடல்கள்,
எங்களின் ஞானம், எங்களின் பிரார்த்தனை எல்லாம் இருக்கிறது.
ஆனாலும் எதுவும் தெரியவில்லை என்கிறீர்கள்!
அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள்
நாங்கள் தொலைத்தவை எங்கு சென்றதென.
எங்களின் வீரம், அரவணைப்பு, சந்தோஷம், உறுதி,
குரு போதனைகள் மீதான நம்பிக்கையும் இருக்கிறது.
தொலைந்தவற்றையும் இருப்போரையும் இணைப்பது யார்?
உடலுக்கும் மனதுக்கும் மீட்சி அளிப்பது யார்?
ஆனால் குருவின் கருணையால்
அதிசயத்தைப் பாருங்கள்!
மதிப்பும் பயனுமில்லாமல் இதுவரை இருந்த வாழ்க்கை,
மதிப்பு கொண்டு அழகானதாக மாறியிருக்கிறது.
இது ஒரு விழா
எங்களின் கடந்தகாலமும் நிகழ்காலமும் எதிர்காலமும் இங்கு இருக்கிறது.
இந்துக்களும், இஸ்லாமியரும், பெளத்தரும், சமணர்களும் சீக்கியர்களும் இருக்கின்றனர்.
இதில் நீங்கள் பார்க்கும் விஷயங்களும் உண்டு
உங்கள் பார்வையை தாண்டிய விஷயமும் உண்டு.
இது ஒரு விழா,
ஒரு அலை, ஒரு போராட்டம், ஒரு கொண்டாட்டம்.
இங்கு கோபமும், வலியும், மோதலும் இருக்கின்றன
வரலாறு விரைவில் உங்களை கேட்கவிருக்கிறதே
அந்தக் கேள்வியும் இருக்கிறது.
ஆனாலும் உங்களுக்கு இதில் ஈடுபட்டுள்ளவர் யார் எனத் தெரியவில்லை!
இது கூட்டம் அல்ல, ஆன்மாக்களின் சபை இது
இது அசையும் ஒரு வாக்கியத்தின் அர்த்தம்
இதுதான் வார்த்தைகளின் வரிசை. ஆமாம், இது ஒருவகை யாத்திரை,
ஒரு ஊர்வலம், ஆனால் கொண்டாட்டம் அல்ல.
இது குருவை பின்பற்றுபவர்களின் பேரணி
‘நான்’ ‘என்’ ஆகியவற்றை உதறி
‘மக்களாகிய நாம்’ நோக்கி அவர்கல் செல்கிறார்கள்.
பல காலமாக நாம் கற்ற பாடம் இதில் இருக்கிறது.
சூஃபி துறவிகளின் பதினான்கு கட்டளைகள் இருக்கின்றன.
நெகிழ வைக்கும் ஒரு கதை சொல்கிறேன்.
நேற்று, டெல்லியிலிருந்து இளம்பெண் அழைத்து சொன்னார்
நீங்கள் வீடு சென்ற பிறகு
இந்த இடம் வெறிச்சோடும்.
தோழமை இன்றி போக்குவரத்து நெரிசல் நேரும்.
சமையல் செய்யும் மக்களின் வரிசை இருக்காது.
வீட்டை அடைய விரும்பி ஓடுபவர்களின்
முகங்களில் வசீகரம் இருக்காது.
அப்போது நாங்கள் என்ன செய்வது?
எங்களின் கண்கள் ஈரமாகும்
என்ன வகை அன்பு இது! எத்தகைய ஒரு விழா!
சந்தோஷமாக நீங்கள் வீடு திரும்புங்கள்.
உண்மையும் வெற்றியும் உங்களின் பக்கம் இருக்கும்.
பூமிக்கு நல்ல விதியை கொண்டு வாருங்கள்.
நல்ல உணர்வையும் புதிய பார்வையையும் புதிய தீர்வையும்
அன்பின் அடையாளத்தையும் எளிமையையும் ஒற்றுமையையும் கொண்டு வாருங்கள்.
தாயும் மகனும் மீண்டும்
ஒன்றுசேரட்டும். இங்கு நடப்பது ஒரு விழா.
கண்ணுக்கெட்டிய தூரம் வரையும் அதற்கு அப்பாலும்
இதில் பங்கேற்கும் மக்களின் எழுச்சி தெரிகிறது.
இந்த பூமியை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல
பிரபஞ்சத்தின் எல்லா பகுதிகளை சேர்ந்தவர்களும்
இதில் இருக்கின்றனர்.
இது ஒரு விழா.

இதை பிரசுரிக்க பெரும்பங்காற்றிய டாக்டர் சுர்ஜித் சிங்குக்கும் ஆய்வறிஞர் ஆமீன் அமிடோஜுக்கும் எங்களின் நன்றி

தமிழில்: ராஜசங்கீதன்

Editor : PARIBhasha Team

ಪರಿಭಾಷಾ ಎನ್ನುವುದು ನಮ್ಮ ವಿಶಿಷ್ಟ ಭಾರತೀಯ ಭಾಷೆಗಳ ಕಾರ್ಯಕ್ರಮವಾಗಿದ್ದು, ಇದು ಅನೇಕ ಭಾರತೀಯ ಭಾಷೆಗಳಲ್ಲಿ ಪರಿ ಕಥೆಗಳನ್ನು ವರದಿ ಮಾಡಲು ಮತ್ತು ಅನುವಾದಿಸಲು ಸಹಾಯ ಮಾಡುತ್ತದೆ. ಪರಿಯ ಪ್ರತಿಯೊಂದು ಕಥೆಯ ಪ್ರಯಾಣದಲ್ಲಿ ಅನುವಾದವು ಪ್ರಮುಖ ಪಾತ್ರ ವಹಿಸುತ್ತದೆ. ನಮ್ಮ ಸಂಪಾದಕರು, ಅನುವಾದಕರು ಮತ್ತು ಸ್ವಯಂಸೇವಕರ ತಂಡವು ದೇಶದ ವೈವಿಧ್ಯಮಯ ಭಾಷಾ ಮತ್ತು ಸಾಂಸ್ಕೃತಿಕ ವೈಭವವನ್ನು ಪ್ರತಿನಿಧಿಸುತ್ತದೆ ಮತ್ತು ಜನಸಾಮಾನ್ಯರ ಕತೆಗಳನ್ನು ಜನಸಾಮಾನ್ಯರ ಭಾಷೆಯಲ್ಲೇ ಅವರಿಗೆ ತಲುಪಿಸುತ್ತದೆ.

Other stories by PARIBhasha Team
Illustration : Labani Jangi

ಲಬಾನಿ ಜಂಗಿ 2020ರ ಪರಿ ಫೆಲೋ ಆಗಿದ್ದು, ಅವರು ಪಶ್ಚಿಮ ಬಂಗಾಳದ ನಾಡಿಯಾ ಜಿಲ್ಲೆ ಮೂಲದ ಅಭಿಜಾತ ಚಿತ್ರಕಲಾವಿದರು. ಅವರು ಕೋಲ್ಕತ್ತಾದ ಸಾಮಾಜಿಕ ವಿಜ್ಞಾನಗಳ ಅಧ್ಯಯನ ಕೇಂದ್ರದಲ್ಲಿ ಕಾರ್ಮಿಕ ವಲಸೆಯ ಕುರಿತು ಸಂಶೋಧನಾ ಅಧ್ಯಯನ ಮಾಡುತ್ತಿದ್ದಾರೆ.

Other stories by Labani Jangi
Translator : Rajasangeethan

ರಾಜಸಂಗೀತನ್ ಚೆನ್ನೈ ಮೂಲದ ಬರಹಗಾರ. ಅವರು ಪ್ರಮುಖ ತಮಿಳು ಸುದ್ದಿ ವಾಹಿನಿಯಲ್ಲಿ ಪತ್ರಕರ್ತರಾಗಿ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಾರೆ.

Other stories by Rajasangeethan