சரி. இந்தப் பாடல் எப்படியோ தவற விடப்பட்டிருக்கிறது. பாரி வாசகர்களும் பார்வையாளர்களும் மன்னிக்கவும். அனைத்து பாரி வாசகர்களுக்கும் இப்போது இந்த தளத்தில் மிக பிரபலமான உருளைக்கிழங்கு பாடலை  நன்றாக தெரிந்திருக்கும். இடுக்கி மலையில் அமைந்திருக்கும் எடமலக்குடி என்னும் குக்கிராமத்தில் இருக்கும் ஒரே பழங்குடி பஞ்சாயத்துப் பகுதியில் பழங்குடிகள் முன்னேற்றத் திட்டப்பள்ளி ஒன்று அமைந்திருக்கிறது. 1 முதல் 4-ஆம் வகுப்புகள் வரை நடத்தப்படும் இத்திட்டப் பள்ளியில் 8 முதல் 11 வயதிற்கு இடையிலான பெண் குழந்தைகள் குழுவால் உருளைக்கிழங்கு பாடல் பாடப்படுகிறது.

அங்கு நாங்கள் மொத்தம் எட்டு பேர் சென்றிருந்தோம். மாணவர்களைப் பார்த்து உங்களுக்கு விருப்பமான பாடம் எது என்று கேட்டோம். எந்த ஒரு இடத்திலும் ஆங்கில வார்த்தைகளே தென்படாத அப்பகுதியின் பள்ளிக்குழந்தைகள் ‘ஆங்கிலம்’ தான் விருப்பப்பாடம் என்றார்கள். ஆங்கில மொழி மீது அவர்களுக்கு உள்ள திறமையை வெளிப்படுத்த   இந்தப் பாடலைப் பாடத் தொடங்கினார்கள்.

பாரியின் மிக விருப்பமான பாடலாக இது மாறிவிட்டது. அப்போது நாங்கள் தவற விட்ட ஒன்றை இப்போது உங்களது பார்வைக்கு அளிக்கிறோம். மாணவிகள் உருளைக்கிழங்கு பாடலை மிகச்சிறப்பான சந்தத்துடன் பாடி முடித்ததும், எங்களின் கவனத்தை மாணவர்கள் பக்கம் திருப்பினோம். மாணவிகள் ஜெயித்துவிட்டார்கள் என்று சிலேடையாக சொல்லிக் காட்ட, எங்கள் வேண்டுகோளை ஏற்று, மாணவிகளை விஞ்சும் முனைப்பில் அவர்களும் பாடத் தொடங்கினார்கள்.

ஐந்து பேர் கொண்ட மாணவிகள் குழுவைத் தொடர்ந்து போட்டிப் பாடலை பாடுவது கடினமானது எனத் தெரிந்தாலும், ஊக்கத்துடன் முயற்சி செய்தார்கள். பாடல் தரத்திலும், பாடலைப் பாடும் விதத்திலும் மாணவிகளுக்கு நிகராக இல்லையென்றாலும், மிகுந்த உற்சாகத்துடன் பாடப்பட்ட அவர்களின் பாடல் வரிகள் தனித்து நின்றது.

உருளைக்கிழங்குக்காக சிறு பாடலைப் பாடிய மாணவிகள், அப்பாடலின் மூலமாக ஆங்கிலம் பேசப்படாத அந்த கிராமத்தில் உருளைக்கிழங்கை உண்பதில்லை என்பதை பாடலின் வழி தெரியப்படுத்தினர். மாணவர்கள் அப்பாடலை மருத்துவருக்காக பாடினர். (பத்தாண்டுகளாக அப்பகுதியின் ஆரம்ப சுகாதார மையத்தில் முழு நேர மருத்துவர்களே இல்லை) இந்தியாவின் பல இடங்களில், கிராமங்களிலும் நகரப் பகுதிகளிலும், மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆகிய இருவருக்கும் மாற்றி மாற்றி பயன்படுத்தப்படும் வார்த்தை ’டாக்டர்’. இருவரும் ஒரே நபராகவே பார்க்கப்படுகிறார்கள். அந்தப் பாடலில் வெளிப்பட்ட மற்றொரு நெருக்கமான விஷயம் என்ன தெரியுமா? ஆங்கில மருத்துவ அறிவியலின் மீதான நம்பிக்கையும்தான்.

வீடியோவைப் பார்க்கவும்: மருத்துவருக்கான சிறு பாடலைப் பாடும், இளைய எடமலைக்குடி தொடக்கப் பள்ளி மாணவர்கள்.

காலை வணக்கம், டாக்டர்,

எனக்கு வயிற்றில் வலி, டாக்டர்

எனக்கு வயிற்றில் வலி, டாக்டர்

என்னைப் பிடித்துக்கொள்ளுங்கள், டாக்டர்

என்னைப் பிடித்துக்கொள்ளுங்கள், டாக்டர்

என்னைப் பிடித்துக்கொள்ளுங்கள், டாக்டர்

ஆப்பரேஷன்

ஆப்பரேஷன்

ஆப்பரேஷன், டாக்டர்

நன்றி டாக்டர்

நன்றி டாக்டர்

நன்றி டாக்டர்

நன்றி டாக்டர்

பை பை, டாக்டர்

பை பை, டாக்டர்

பை பை, டாக்டர்

பை பை, டாக்டர்

பிரபலமான ‘ உருளைக்கிழங்குப் பாடலைப்’ போலவே, இந்த சிறு பாடலின் வீடியோவையும், பாரியின்-இன் தொழில்நுட்பப் பிரிவு ஆசிரியர் சித்தார்த் அடேல்கர் தான் பதிவு செய்தார். நெட்வொர்க் இல்லாத இடத்தில் செல்ஃபோன் மூலமாக பதிவு செய்யப்பட்ட வீடியோ இது. உருளைக்கிழங்கு விளையாத இந்தக் கிராமத்தில், உருளைக்கிழங்கை சாப்பிடாத இந்த கிராமத்தில், எங்கும் ஆங்கிலம் இல்லாத இந்தக் கிராமத்தில், மருத்துவர்களே இல்லாத இந்த பஞ்சாயத்தில்தான் இப்பாடலும் பாடப்பட்டு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த விதத்தில்தான் நாட்டின் பல பகுதிகளில் ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. இந்த தீபகற்ப இந்தியாவின் மிகச் சிறிய தனித்த பஞ்சாயத்துப் பகுதியில் இருக்கும் இந்த மாணவர்களுக்கு இப்படியான பாடல் வரிகள் எங்கிருந்து கிடைத்தது என்பதுதான் நமக்கு இருக்கும் தீராத ஆச்சரியம்.

தமிழில்: குணவதி

ಪಿ. ಸಾಯಿನಾಥ್ ಅವರು ಪೀಪಲ್ಸ್ ಆರ್ಕೈವ್ ಆಫ್ ರೂರಲ್ ಇಂಡಿಯಾದ ಸ್ಥಾಪಕ ಸಂಪಾದಕರು. ದಶಕಗಳಿಂದ ಗ್ರಾಮೀಣ ವರದಿಗಾರರಾಗಿರುವ ಅವರು 'ಎವೆರಿಬಡಿ ಲವ್ಸ್ ಎ ಗುಡ್ ಡ್ರಾಟ್' ಮತ್ತು 'ದಿ ಲಾಸ್ಟ್ ಹೀರೋಸ್: ಫೂಟ್ ಸೋಲ್ಜರ್ಸ್ ಆಫ್ ಇಂಡಿಯನ್ ಫ್ರೀಡಂ' ಎನ್ನುವ ಕೃತಿಗಳನ್ನು ರಚಿಸಿದ್ದಾರೆ.

Other stories by P. Sainath
Translator : Gunavathi

Gunavathi is a Chennai based journalist with special interest in women empowerment, rural issues and caste.

Other stories by Gunavathi