ஊடகத்துறையில் தனித்துவமாக திகழ்ந்தமைக்காக பிரேம் பாட்டியா 2020 விருதினை வென்றுள்ளது பீப்பிள்’ஸ் ஆர்க்கைவ் ஆஃப் ரூரல் இந்தியா. பிரேம் பாடியா நினைவு அறக்கட்டளை பாரியின் பருவ நிலை தாக்கம், கிராமப்புற இந்தியாவில் தொற்றின் தாக்கம் குறித்து அளித்த பரவலான கள அறிக்கைகள், “களச் செய்தியாளர்கள் படை, தன்னார்வலர்கள், அர்ப்பணிப்புமிக்க குழுவினர் என பாரியின் கூட்டுப் பணிக்காக” இது கொடுக்கப்பட்டுள்ளது…

பருவநிலை மாற்றங்கள் குறித்த தொடர் கட்டுரைகளில் இதுவரை 11 மாநிலங்களின் பல்வேறு பிராந்தியங்களில் இருந்து சமூகங்கள், மக்களின் குரல்களில் கட்டுரைகள் வந்துள்ளன. பருவநிலை மாற்றம் குறித்து இதுவரை சொல்லப்படாத, கண்டறிந்த, அனுபவப்பட்ட, புரிந்துகொள்ள முடியாத பெரிய வழிகளையும் அறிந்து, அன்றாடம் மக்களிடம் இருந்து செய்திகளைப் பெறுகிறது பாரி.

நோய்த் தொற்று, பொது முடக்கம் குறித்து பாரியில் இதுவரை 100க்கும் மேற்பட்ட இணையற்ற கட்டுரைகளையும் , 20 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், 30க்கும் மேற்பட்ட பிராந்தியங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட முக்கியமான ஆவணப்படுத்தலையும் பாரி தயாரித்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி அதிகம் பேசினாலும், ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட  - விவசாயிகள், படகோட்டிகள், நகர்ப்புற – கிராமப்புற தொழிலாளர்கள், கரும்பு அறுப்பவர்கள், நெசவாளர்கள், பொம்மை செய்பவர்கள், பிற கைவினைஞர்கள், துப்புரவு பணியாளர்கள், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், மும்பையின் முக்கிய மருத்துவமனைகளின் வாசலில் காத்திருக்கும் கிராமப்புற புற்றுநோயாளிகள், நாடோடி ஆயர்கள், தினக்கூலிகள், நாட்டுப்புற கலைஞர்கள், மீனவர்கள், முடிதிருத்துநர்கள், செங்கல் சூலை பணியாளர்கள், ஹார்மோனியம் சரிசெய்பவர்கள், பல்வேறு தொழில்களில் உள்ள தலித்துகள், பழங்குடிகள்… போன்றவர்களின் கிராமப்புற இந்தியாவோடு பின்னிப்பிணைந்த பொருளாதாரப் பிரச்னைகளையும் பாரி பேசியுள்ளது.

புகழ்மிக்க ஊடகவியலாளர் பிரேம் பாடியா (1911-1995) நினைவாக பிரேம் பாடியா விருதுகள் 1995ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அவர் தன் வாழ்நாள் முழுவதும் உண்மையை அச்சமின்றி வெளிக்கொணர்தல், இந்திய ஊடகத்துறையின் தரத்தை உயர்த்துவதற்கான உறுதி, நோக்கமற்ற செய்தி சேகரிப்பு ஆகிய மதிப்பீடுகளைக் கொண்டிருந்தார். அவற்றைப் பரவலாக்கும் நோக்கில் இவ்விருது வழங்கப்படுகிறது.

அரசியல் விவகாரங்களுக்கான இந்தாண்டு விருது இந்தியன் எக்ஸ்பிரசின் திபாங்கர் கோஷூக்கு அளிக்கப்பட்டது. அவரை நாம் வாழ்த்துகிறோம்.

2014ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டது முதல், பாரி வென்றிருக்கும் 24ஆவது விருது இது. இதுவரையிலான முழு பட்டியல்:

பீப்பிள்’ஸ் ஆர்க்கைவ் ஆஃப் ரூரல் இந்தியா (பாரி) : 2015 முதல் 2020 வரை பெற்ற விருதுகள்

24. பிரேம் பாடியா நினைவு அறக்கட்டளை, புதுடெல்லி, 2020

சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி விவகாரங்களில் ஊடகத்தின் பங்கிற்காக பாரி குழு பிரேம் பாடியா விருதினை வென்றது. “பருவநிலை தாக்கம், கிராமப்புற இந்தியாவில் தொற்றின் தாக்கம் உள்ளிட்ட பரவலான கள செய்தி சேகரிப்பிற்காக” அளிக்கப்பட்டுள்ளது.

23. இந்திய மக்கள் தொடர்புக் குழு, பெங்களூரூ, 2020

தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதிகளில் கடல்பாசி எடுப்பவர்கள் குறித்து செய்தி சேகரித்த நமது பாரி செய்தியாளர் எம். பழனிக்குமார் ஆண்டின் சிறந்த செய்தித் தொடர்பாளர் விருதை வென்றார். புகைப்பட தொகுப்பாக வெளிவந்த இக்கட்டுரை படகில் இருப்பதைவிட நீரில் அதிகநேரம் மூழ்கும் தமிழ்நாட்டின் பாரதி நகர் மீனவப் பெண்களின் அசாதாரண செயல்களை பற்றிப் பேசுகிறது. பருவநிலை மாற்றமும், கடல் வளங்கள் அதிகளவில் சுரண்டப்படுவதும், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

22. இந்திய மக்கள் தொடர்பு குழு, பெங்களூரூ, 2020

நெடுஞ்சாலையை வளப்படுத்த பர்தி பள்ளி இடிக்கப்பட்டது குறித்து செய்தி அளித்த பாரி செய்தியாளர் ஜோதி ஷினோலி ஆண்டின் செய்தித் தொடர்பாளர் - ஆண்டின் சிறந்த கருத்துள்ள செய்திக்கான விருதை வென்றுள்ளார். மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் உள்ள இப்பள்ளி நீண்டகாலமாக ஒதுக்கப்பட்ட, வறுமையில் வாடும் சமூக குழந்தைகளுக்காக ஆசிரியர் பன்சே பர்தியால் தொடங்கப்பட்டது. இப்பள்ளி 2019, ஜூன் 6ஆம் தேதி இடிக்கப்பட்டது அவர்களை கவலை, நிச்சயமற்ற தன்மையில் விட்டுள்ளது.

21. இந்திய ஊடக நிறுவனம், சர்வதேச செஞ்சிலுவை சங்கம், புதுடெல்லி, 2019

பாரியின் ஊர்வஷி சர்கார் எழுதிய ‘ எங்கள் வீடுகள் மறைகின்றன. யாருக்கும் அக்கறையில்லை’ என்ற கட்டுரை, சிறந்த கட்டுரைப் பிரிவில் முதல் பரிசை வென்றது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இடப்பெயர்வு, மேற்குவங்கத்தின் சாகர், கோராமாரா தீவுகளுக்கு இடையேயான மக்களின் புலம்பெயர்வு, மூழ்கும் தீவுகள், வீடுகள் மற்றும் வாழ்வாதாரம் பற்றி இக்கட்டுரை பேசுகிறது.

20. ஜியோ மமி மும்பை திரைப்படத் திருவிழா 2019 (அக்டோபர் 17-24)

பாரியின் யாஷாஸ்வினி ரகுநந்தனின் ‘அந்த மேகம் ஒருபோதும் மறைவதில்லை’ (தட் க்ளவுட் நெவர் லெஃப்ட்) என்ற திரைப்படம் இவ்விழாவில் இந்தியா கோல்ட் பிரிவில் தேர்வு செய்யப்பட்டது.

19. FILAF திரைப்படத் திருவிழா, பெர்பிஞான், ஃபிரான்ஸ்: சர்வதேச கலை புத்தகம் மற்றும் திரைப்பட விழா

பாரியின் யாஷாஸ்வினி ரகுநந்தனின் ‘அந்த மேகம் ஒருபோதும் மறைவதில்லை’ (தட் க்ளவுட் நெவர் லெஃப்ட்) என்ற திரைப்படம் கோல்ட் ஃபிரான்சின் FILAF திரைப்பட திருவிழாவில் ( சர்வதேச கலை புத்தகம் மற்றும் திரைப்பட திருவிழா ) GOLD FILAF வென்றது.

18. டுட்டி பிரெமி டெல் பிசாரோ திரைப்படத் திருவிழா, பிசாரோ, இத்தாலி 2019

பாரியின் யாஷாஸ்வினி ரகுநந்தனின் ‘அந்த மேகம் ஒருபோதும் மறைவதில்லை’ என்ற திரைப்படம் இத்தாலியின் பிசாரோ திரைப்படத் விழாவில் சிறப்புப் பிரிவில் திரையிடப்பட்டது.

17. மும்பை பிரஸ் கிளப், 2019

பாரியில் 2018ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி வெளியான ‘ ஒரு நாளுக்கு 6000 இலைகளை சேகரிப்பது ’ எனும் கட்டுரைக்காக மகளிர் அதிகாரமளித்தல் மற்றும் பாலின சமத்துவப் பிரிவில், பாரி செய்தியாளர் ஜோதி ஷினோலி சிவப்பு மை விருதை வென்றார்.

16. இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், புதுடெல்லி, 2019

பாரியில் வெளியான மார்த்வாடா கட்டுரைத் தொடர்களுக்காக பாரியின் பார்த் எம்.என், ராம்நாத் கோயங்கா விருதை (மறைக்கப்படும் இந்தியாவை வெளிப்படுத்துவது என்ற பிரிவில்) வென்றார்.

15. தி ஸ்டேட்ஸ்மேன், கொல்கத்தா, 2018

பாரி எழுத்தாளர் பூஜா அவ்ஸ்தி எழுதி 2017ஆம் ஆண்டு ஜூலை 5 மற்றும் ஆகஸ்ட் 3ஆம் தேதிகளில் வெளிவந்த ‘ அடித்தாலும் தலைவணங்காத சுனந்தா சாஹூவின் அமைதி போராட்டம் ’ மற்றும் ‘ ஊறுகாய், அப்பளத்தைக் கடந்த டிரம்சும், கனவுகளும்’ ஆகிய இரு கட்டுரைகள் கிராமப்புற செய்தி சேகரிப்பில் ஸ்டேட்ஸ்மேன் விருதை வென்றது.

14. பாப்பூலேஷன் ஃபர்ஸ்ட், புதுடெல்லி, 2018

பாரியில் 2017ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி வெளியான ஊர்வஷி சர்கார் தனது புலிகளால் கைம்பெண் ஆனவர்கள், அரசால் கைவிடப்பட்டவர்கள் என்ற கட்டுரைக்காக கலைப் பிரிவில் 2017ஆம் ஆண்டு பாலின சமத்துவத்திற்கான லாட்லி மீடியா மற்றும் விளம்பர விருதை வென்றார்.

13. ஐரோப்பிய ஆணையம், புருஸல்ஸ், பெல்ஜியம், 2018

பாரியில் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி வெளியான 2000 மணி நேரங்கள் கரும்பு அறுத்தல் கட்டுரைக்காக பாரியின் பார்த் எம்.என், லாரன்சோ நடாலியா ஊடக விருதை வென்றார்.

12. தெற்காசிய குறும்பட விழா, கொல்கத்தா, 2018

SASFF-2018க்கு பாரியின் 15 வீடியோ திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஆவணப்படப் பிரிவில் 13 திரைப்படங்களும், அதிகாரப்பூர்வ பனோரமா பிரிவில் 2 திரைப்படங்களும் தேர்வு செய்யப்பட்டன. (திரைப்படங்களின் பட்டியலை கீழ் காணலாம்.)

11. பரிகி ஹனுமந்தா ராவ் அறக்கட்டளை, ஆந்திர பிரதேசம், 2018

பாரியில் வெளியான தனது கட்டுரைகளுக்காக பாரியின் ராகுல் எம், 2017-2018ஆம் ஆண்டிற்கான பரிகி ஹனுமந்தா ராவ் ஊடகவியலாளர் விருதை வென்றார்.

10. வசந்த் வியாகியன்மாலா, புனே, மகாராஷ்டிரா, 2018

புதிய ஊடகத் துறையின் தனித்துவமான இயல்பை அங்கீகரிக்கும் வகையில் “ பீப்பிள்’ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியா எனும் புது முயற்சிக்கு” நீதிபதி எம்.ஜி. ரனடே விருது முதன்முறையாக (அவ்விருதின் துவக்க ஆண்டு) பாரிக்கு வழங்கப்பட்டது.

9. ஸ்ரீ முருகாமடம், விஹ்த்ரதுர்கா, கர்நாடகா, 2017

“ஊடக இயக்கத்தின் வழியாக கிராமப்புறங்களில் பீப்பிள்’ஸ் ஆர்க்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் சேவைகளுக்காக” பசவாஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

8. அப்பன் மேனன் நினைவு குழு, புதுடெல்லி, 2017

“கிராமப்புற இந்தியாவை ஆவணப்படுத்துவதற்கு பீப்பிள்’ ஸ் ஆர்க்கைவ் ஆஃப் ரூரல் இந்தியா செய்துள்ள பணிகளுக்காக” அப்பன் மேனன் நினைவு விருது வழங்கப்பட்டது.

7. சி-ஷெல் ஊடகம் மற்றும் இலக்கிய விருதுகள், துபாய், 2017

“கிராமப்புற இந்தியா குறித்த அசாதாரண மற்றும் ஆழமான செய்திகளை அளித்து தனித்துவமான சாதனைப் படைத்த பாரிக்கு” சி-ஷெல் ஊடக பரிசு.

6. கேசரி மஹ்ரத்தா டிரஸ்ட் மற்றும் திலக் மகாராஷ்டிரா வித்யாபீடம், புனே, 2017

ஊடகத் துறையில் சிறப்பாக பணியாற்றுவதற்காக பி. சாய்நாத் / பாரி (பாரி தொடங்கியதை அங்கீகரிக்கும் வகையில்) லோகமானிய பால கங்காதர திலகர் விருது .

5. ஆனந்த் பலேராவ் ஸ்மிரிதி அறக்கட்டளை, அவுரங்காபாத், 2016

“கிராமப்புற இந்தியா குறித்த பீப்பிள்’ஸ் ஆர்க்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் துல்லியமான செய்தி சேகரிப்பிற்காகவும், இந்திய மொழிகளில் ஊடகத் துறையை மேம்படுத்தும் அவற்றின் அணுகுமுறைக்காகவும்” ஆனந்த் பலேராவ் ஸ்மிரிதி விருது.

4. கிராந்திசின்ஹ் நானா பாடில் அறக்கட்டளை, சங்கிலி, மகாராஷ்டிரா, 2016

பி. சாய்நாத்திற்கு (பாரியின் முக்கியத்துவம் மற்றும் அங்கீகரித்தல்) கிராந்திசின்ஹ் நானா பாடில் நினைவு விருது.

3. தேசிய திரைப்பட விருதுகள், இந்திய அரசு, புதுடெல்லி, 2016

பாரியில் 2016ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் தேதி வெளியான மகேஸ்வர் நெசவாளர்கள் குறித்த திரைப்படத்திற்காக, பாரியின் நிதி காமத் மற்றும் கேயா வாஸ்வானி ஆகியோர் 63ஆவது தேசிய திரைப்பட விருதுகள் 2016க்கான வெள்ளித் தாமரை (ரஜத் கமல்) பரிசை சிறந்த விளம்பரப் படப் பிரிவிற்காக பெற்றனர்.

2. பிரஃபுல் பித்வாய் நினைவு குழு, புதுடெல்லி, 2016

“விவசாயிகளின் துன்பம் குறித்த செய்தி சேகரிப்பு மற்றும் வர்ணனைக்காகவும், ஊக்கமளிப்பது, தகவல் ஆதாரமாகத் திகழ்வதற்காகவும்” பாரிக்கு முதல் பிரஃபுல் பித்வாய் நினைவு பரிசு .

1. பாப்புலேஷன் ஃபர்ஸ்ட், மும்பை, 2015

பாரியில் 2015ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி வெளிவந்த ‘ வரலாறு படைத்து, நூறை நோக்கி’ என்ற கட்டுரைக்கு பாலின சமத்துவத்திற்கான 2014-15ஆம் ஆண்டிற்கான லாட்லி ஊடகம் மற்றும் விளம்பர விருது சிறந்த புலனாய்வுக் கட்டுரைப் பிரிவில் பாரியின் புருஷோத்தம் தாகூர் பெற்றார்.

சிறப்புப் பிரிவு : பாரி இணைய தளத்தை தங்களின் இணைய சேமிப்புகளில் சேர்க்க தேர்வு செய்துள்ளதாக யுனைடெட் ஸ்டேட்ஸ் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ், எங்களுக்கு ஏப்ரல் 2020ல் தகவல் அளித்துள்ளது: "வரலாற்றின் பதிவாகவும், இத்தொகுப்பின் முக்கிய அங்கமாகவும் உங்களது என இந்த இணைய தளத்தை நாங்கள் கருதுகிறோம்.”

தெற்காசிய குறும்படத் திரை விழா, மார்ச் 2018: பாரியின் காணொளி / திரைப்படங்களின் பட்டியல்

போட்டி: ஆவணப்படம்

1. அர்ச்சனா பட்கே / கேப்டன் எல்டர் பிரதர்’ அன்ட் தி வெர்ல்வின்ட் ஆர்மி / இந்தியா / மராத்தி / 06 நிமி.

2. ஷ்ரேயா கத்யாயினி / துசார்: தி கிரம்பிளிங் குக்கூன் / இந்தியா / இந்தி / 12 நிமி.

3. சிஞ்ஜிதா மாஜி / ஹெவி லிஃப்டிங் இன் தி ஹில்ஸ் / இந்தியா / மராத்தி / 09 நிமி.

4. சயந்தோனி பல்சவுதுரி / ஜஹாங்கிர்'ஸ் ஸ்டோரி / இந்தியா / இந்தி /08 நிமி.

5. சயந்தோனி பச்சோதுரி / வோட் ஃபார் போட் / இந்தியா / இந்தி /08 நிமி.

6. ஸ்டான்சின் சால்டன் / தி லூம் இஸ் மை லவ், மை லெகசி / இந்தியா / லடாக்கி / 09 நிமி.

7. சிஞ்சிதா மாஜி / பாசுதேப் பவுல் / இந்தியா / வங்காளம் /12 நிமி.

8. அங்கன் ராய் / பஹூருபி: ஏ ஃபாமிலி ஆஃப் மெனி ஃபேசஸ் / இந்தியா / வங்காளம் / 10 நிமி.

9. ஷ்ரேயா காத்யாயினி / வென் தி குயின் ஸ்டிரைக்ஸ் / இந்தியா / இந்தி / 15 நிமி.

10. அனுபா போன்ஸ்லே & மற்றவர்கள் / இமா கெய்தல்: எவரி டே ஈஸ் வுமன்ஸ் டே / இந்தியா / மணிப்பூரி / 15 நிமி.

11. அபர்ணா கார்த்திகேயன் / தி டான்ஸ் ஆஃப் ஃபால்ஸ் லெக்டு ஹார்ஸ் / இந்தியா / தமிழ் / 18 நிமி.

12. வி. சசிகுமார் / மென்டிங் போட்ஸ் வித் மியூசிக் / இந்தியா / மலையாளம் / 15 நிமி.

13. புருஷோத்தம் தாகூர் / தி ஃபேடிங் வீவ்ஸ் ஆஃப் துவாஜார் / இந்தியா / ஒடியா / 16 நிமி.

அதிகாரப்பூர்வ பிரிவு: பனோரமா - ஆவணப்படம்

1. சிஞ்சிதா மாஜி / திரட்பேர் இன் சாந்திபூர் / இந்தியா / வங்காளம் / 13 நிமி.

2. சிஞ்சிதா மாஜி / தோல் ஆன் வீல்ஸ் / இந்தியா / வங்காளம் / 06 நிமி.

தெற்காசிய குறும்பட திரைப்பட திருவிழா, மார்ச் 2019: பாரியின் காணொளிகள் / திரைப்படங்களின் பட்டியல்

போட்டி: ஆவணப்படம்

1. சிஞ்சிதா மாஜி / கணபதி யாதவ்ஸ் கிரிப்பிங் லைஃப் சைக்கிள் / இந்தியா / மராத்தி /17 நிமி.

2. அங்கன் ராய் & மற்றவர்கள் / பொசஸ்ட் பை ஹிஸ் ஆர்ட், ஏ பஹ்ருபி டிரான்ஸ்பார்ம்ஸ் / இந்தியா / வங்காளம் / 05 நிமி.

3. விஷாகா ஜார்ஜ் & மற்றவர்கள் / ஐ ஃபீல் சோ ஹேப்பி டு சீ தி பாடி கிரோயிங் / இந்தியா / மலையாளம் / 05 நிமி.

4. அனுபா போன்ஸ்லே & மற்றவர்கள் / இன்டு தி சக்ஷாங்ஸ் ஆஃப் இம்பால் / இந்தியா / மணிப்பூரி / 05 நிமி.

5. சுபி ஜிவானி / ஃபார்மிங் டஸ்ன்ட் கிவ் அஸ் அவர் சஸ்டினஸ் / இந்தியா / இந்தி / 04 நிமி.

தமிழில்: சவிதா

PARI Team

ಪರಿ ತಂಡ

Other stories by PARI Team