அவர் ஒரு ‘மழை தொப்பி’யை வெறும் 60 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார். ‘இல்லை, இதை நான் செய்யவில்லை“ என்று அவர் கூறுகிறார். அவர் ஒரு சிறு வணிகர். அவர் மலைமேல் வசிக்கும் ஆதிவாசி மக்களிடம் இருந்து இதுபோன்ற தொப்பி போன்ற மற்ற பொருட்களை வாங்கி வந்து விற்கிறார். இந்த மலைப்பகுதி ஒடிஷாவின் கஞ்சம் மற்றும் காந்தமால் மாவட்டத்தின் எல்லைகளில் அமைந்துள்ளது. 2009ம் ஆண்டு ஜீன் மாதத்தில், மழை பொழிய துவங்கியபோது, நாம் அவரை ஓடிச்சென்று பிடித்தோம். ஒவ்வொரு தொப்பியும் மிக நுட்பமாக மூங்கில் மற்றும் இலைகளால் செய்யப்பட்டிருந்தது. மிகுந்த கலை நுட்பத்துடன் இருந்தது. அவர் சைக்கிளில் நீண்ட தொலைவு பயணம் செய்து வந்து தொப்பிகளை ஒன்று ரூ.60க்கு விற்பனை செய்கிறார். அவர், ஆதிவாசிகளிடம் இருந்து அவற்றை அதைவிட குறைந்த விலைக்கு வாங்கி வந்திருக்க வேண்டும்.
இந்த தொப்பிகளில் உள்ள மாறுதல்களை நீங்கள் காணலாம். கஞ்சத்தில் பளரி என்றும் (காளாஹந்தியில் சாட்டூர்) என்றும் அழைக்கப்படுகிறது. இது கிழக்கிந்தியா மற்றும் சில கிழக்காசிய நாடுகளிலும் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இந்த வகை தொப்பிகளை ஒடிஷாவில் மக்கள் மழைப்பொழிய துவங்கிய காலங்களில் அணிவதை காண முடிகிறது. மற்ற காலங்களிலும் இவற்றை அணிகிறார்கள். பெரும்பாலும் வயல்களில் விவசாயிகள், தொழிலாளர்கள், கால் நடைகள் மேய்ப்பவர்கள் பணியின்போது இவற்றை அணிந்துகொள்கிறார்கள். எனது நண்பரும், என்னுடன் பயணிப்பவருமான புருஷோத்தம் தாக்கூர் இவற்றை “ஏழைகளின் குடை“ என்று கூறுகிறார். இது பைகோன் காலத்தில் உள்ள குடைகளின் வடிவத்தை ஒத்ததாக உள்ளது. அவை எந்த தேவைக்காக செய்யப்பட்டிருந்தாலும், அவை மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
தமிழில்: பிரியதர்சினி. R.