பாரியில் இனி முன்னெப்போதும் இல்லாத வகையில் மகாராஷ்டிராவின் கிராமங்களில் பெண்கள் பாடிய 100,000 மேற்பட்ட நாட்டுப்புற திருகைதிரிப்பு பாடல்களை கேளுங்கள். இவற்றில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் மராத்தியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 3302 கலைஞர்கள் கவிதை இசைமரபான இந்த அற்புதப் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மகாராஷ்டிராவின் பெண்கள் பல தலைமுறைகளாக இயற்றி பாடிய 100,000 க்கும் மேற்பட்ட நாட்டுப்புற பாடல்களின் தொகுப்பான திருகைதிரிப்பு பாடல்கள் திட்டத்திற்கு வரவேற்கிறோம், வீட்டில பிற வேலைகளையும் பார்த்துக்கொண்டே திருகை திரித்தபடி பாடல்கள் பாடுகின்றனர்.

இந்த தரவு தளம் பல மானுடவியலாளர்கள் மற்றும் இனவியல் இசை வல்லுநர்கள் பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளின் விளைவு. இந்தத் திட்டத்திற்கான உந்துதல் திருகை திரிக்கும் நேரத்தில் பெண்களால் பாடப்படும் பாடல்களின் நீண்ட கால பாதுகாப்பு மொழிபெயர்ப்பு ஆவணப்படுத்துதல் மற்றும் சீரமைத்தல் ஆகும். இந்த நடைமுறை கடந்த ஒரு தசாப்தத்தில் கிட்டத்தட்ட மறைந்து விட்டது கையால் திரிகை பிரிப்பது மறைந்து மோட்டாரில் அறைப்பது வழக்கம் ஆகிவிட்டது.

இப்பாடல்கள் கிராம வாழ்க்கை மற்றும் கலாச்சாரம், பாலினம், வர்க்கம், ஜாதி, மதப் பிரச்சனைகள், பெண்களுக்கும் அவர்களது குழந்தைகள், கணவன்மார்கள், உடன்பிறந்தோர்கள், மற்றும் பெருஞ் சமூகத்துடனான உறவு பற்றியும், பல்வேறு சமகால சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகள் ஆகியவற்றினைப் பற்றிய தனித்துவமான வேலை இப்பதிவு.

மகாராஷ்டிரா பெண்களின் உறுதித்தன்மை மற்றும் கலை திறனுக்கான இந்த சான்றை எங்களது இணையதளத்தில் வெளியிட்டதில் பாரி பெருமிதம் கொள்கிறது. இது சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8 2017 அன்று வெளியிடப்பட்டது.

திருகைப்பாடல்கள் தரவுதளத்தை சமூக ஆர்வலர்கள் மற்றும் புகழ்பெற்ற அறிஞர்களான புனேவின் சமூக அறிவியல் கூட்டுறவு ஆராய்ச்சி மையத்தை இணைந்து நிறுவிய மறைந்த ஹேமா ரெய்கர் மற்றும் கை பொய்டிவின் ஆகியோர் துவங்கினர். அவர்கள் ஒன்றாக மகாராஷ்டிராவின் 110,000க்கும் மேற்பட்ட நாட்டுப்புற பாடல்களை கடந்த 20 ஆண்டுகளாக பதிவு செய்து வருகின்றனர்.

1990களின் பிற்பகுதியில் இசைக்கலைஞரும் முன்னால் பிரான்சு தேசிய அறிவியல் ஆராய்ச்சியாளருமான பெர்னார்ட் பெல் இந்த திட்டத்தில் இணைந்து தரவுதளத்திற்கான எழுத்து மற்றும் இசைக்குறிப்புகள் மேலும் 120 மணி நேரம் பதிவு செய்திருக்கிறார். இவை ஹரியானாவின் குர்காவுனில் உள்ள இசைக்கான காப்பகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தால் பராமரிக்கப்பட்டு, பின்னர் பிரான்சின் ஆக்ஸ் என் ப்ராவின்ஸில் உள்ள பேச்சு மற்றும் மொழித்தரவு களஞ்சியத்திற்கு அனுப்பப்பட்டு பேராசிரியர் பெல் அவர்களால் நிர்வகிக்கப்பட்டது. அங்கு திருகைப் பாடல்களுக்கான தறவுதளம் பின்னர் திறந்த காப்பக தகவல் அமைப்புகளுக்கான முன்மாதிரியாக மாறியது.

1993 - 1998க்கு இடையில் திருகைப்பாடல்கள் திட்டத்திற்கு யுனெஸ்கோ, நெதர்லாந்தின் வளர்ச்சி குழு அமைச்சகம் மற்றும் சுவிட்சர்லாந்தின் மனிதகுல முன்னேற்றத்துக்கான சார்லஸ் லியோபோல்ட் மேயர் அறக்கட்டளை ஆகியவை நிதி உதவி வழங்கின.

"ஹேமா ரைக்கர் மற்றும் கை பொய்டேவின் ஆகியோருடன் திருகை பாடல்களை ஆவணப்படுத்துதல்/ பதிப்பித்து மொழிபெயர்த்து திறந்த அணுகலில் வெளியிட தனிப்பட்ட அர்ப்பணிப்பு என்னிடம் இருந்தது என்று பேராசிரியர் பெல் கூறினார். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நான் பூனேவில் பணியாற்றி வரும் திருகைப் பாடல் நிபுணர் குழுவுக்கு உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய தான் மூலம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இந்த முழுதொகுப்பிற்கான ஆரம்ப வெளியீட்டு வடிவமைப்பில் நாங்கள் ஒன்றாக பணி செய்தோம். தரவுதளத்தை மறுவடிவமைப்பு செய்வதற்கும், தேவநாகரி குறியீட்டிலிருந்து உரைகளை மொழியாக்கம் செய்வதற்கும் ஒரு தீவிர முதலீடு தேவைப்பட்டது".

பாரியின் தலையீட்டுடன் இத்திட்டம் பழைய மற்றும் புதிய ஒத்துழைப்பாளர்களுடன் சேர்ந்து புதுப்பிக்கப்பட்டது. மொழிபெயர்க்கப்படாத 70,000 பாடல்களை புனேவின் கோகலே அரசியல் மற்றும் பொருளாதார நிறுவனத்தின் முன்னாள் ஆவண அலுவலரான ஆஷா ஓகலே மற்றும் அவரது சகாக்களான ரஜனி கலத்கர் மற்றும் ஜிதேந்திர மெயிட் ஆகியோர் கையாண்டு வருகின்றனர்.  மராத்தி மொழி மற்றும் கிராமப்புற வாழ்க்கை குறித்த அவர்களின் அறிவு மொழிபெயர்ப்பு முயற்சிக்கு விலைமதிப்பற்றதாக இருக்கிறது.

ஹரியானாவின் சோனேபட்டில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்துடன் 2016 ஆம் ஆண்டு ஒரு கூட்டு, அந்நிறுவனத்தில் அரசியல் அறிவியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வரும் கில்லீஸ் வெர்னியர்ஸ் இன் தலைமையில் உருவானது. 2016 - 17 ஆம் ஆண்டிற்கான யங் இந்தியா பெல்லோஷிப் பெற்ற மூன்று உறுப்பினர்களான மெஹரிஷ் தேவகி, சினேகா மாதுரி மற்றும் பூர்ணபிரஜன் குல்கர்னி ஆகியோர் மொழிபெயர்ப்புகளை மதிப்பாய்வு செய்து கூடுதல் காப்பக உதவிகளை வழங்கி வருகின்றனர். பாரியின் நிர்வாக ஆசிரியரான நமீதா வைகர் பாரியின் திருகை பாடல் திட்டத்திற்கு தலைமை தாங்குகிறார், அதே வேளையில் அமெரிக்க இந்திய அரக்கட்டளையின் கிள்ண்டன் ஃபெலோவான ஒலிவியா வேரிங் தரவுதளத்தை இயங்கச் செய்வதற்கு பங்களிப்பு வழங்கினார்.

இத்திட்டத்திற்கு கணிசமான பங்களித்த பலரில் பீம்சன் நானேகர் (நேர்காணல் செய்பவர்), தத்தா ஷிண்டே (ஆராய்ச்சியாளர்), மாளவிகா தலூத்கர் (புகைப்பட கலைஞர்), லதா போரே (தரவு உள்ளீட்டாளர்) கஜராபாய் தாரேக்கர் (படியெடுப்பவர்) ஆகியோரும் அடங்குவர்.

இந்நிகழ்ச்சியில் முக்கியமானவரும் திட்டத்தில் பங்குபெற்றிருப்பவருமான கங்குபாய் அம்போரின் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து காணொலிகளும் படங்களும் ஆண்டரின் பெலின் பணி.

பாரியில் புதியதாக சேர்க்கப்பட்டிருக்கும் இதை பற்றி ஆராய உங்களை நாங்கள் அழைக்கிறோம், இதேபோல வரும் மாதங்கள் மற்றும் ஆண்டுகளில் அதிக அளவில் வெளியிடப்படும். பாரி இந்த திருகைபாடல்களை வெளியிடுவதற்கு உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவிக்கிறது குறிப்பாக கிராமப்புற மகாராஷ்டிராவின் பெண்களின் வாழ்வையும் சாதனையையும் போற்றுகிறது, ஆனால் அவர்களுக்கு இப்பாடலோ தரவோ கிடைப்பதில்லை.


பாடுபவர்: கங்குபாய் அம்போர்

கிராமம்: தட்கலாஸ்

தாலுகா: பூர்ணா

மாவட்டம்: பர்பானி

பாலினம்: பெண்

ஜாதி: மராத்தா

வயது: 56

கல்வி: இல்லை

குழந்தை: 1 பெண்

வேலை: 14 ஏக்கர் நிலம் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அனைத்தையும் விட்டுவிட்டு கோவிலில் வசித்துவருகிறார்.

நாள்: அவரது நேர்காணல் மற்றும் பாடல் ஏப்ரல் 7,1996 & பிப்ரவரி 5,1997 ஆகிய தேதிகளில் பதிவு செய்யப்பட்டது.

காட்டில் அந்த மரங்களினுடே, அழுவது யார்? கேளுங்கள்!
அந்த இலந்தையும் கருவேலமும் (மரங்கள்) தான் சீதையின் அழுகை கேட்டு ஆற்றுப்படுத்தும் பெண்கள்.


குறிப்பு: இந்த ஓவியில், சீதா அழுது கொண்டிருக்கிறாள். அவள் ராமனால் தண்டணையாக காட்டிற்கு அனுப்பப்பட்டு காட்டில் இருக்கிறாள் என்கிறது ராமாயணம். அவள் தனிமையில் இருக்கிறாள் அவளுக்கு துணையாக அவளுடைய சோகத்தை அவள் பகிர்வது இந்த இலந்தை கருவேல மரங்களிடம் தான். இவை பிளவுபட்ட பட்டைகள் கொண்ட முள் மரங்கள், இந்நிலை பெண்களுக்கும் சமுதாயத்தில் சமமற்ற நிலை நிலவுவதைப் பற்றி இந்த ஓவி பாடுகிறது. இப்பாடலில், இந்த மரங்களும் தங்களது நிலையும் சீதையைப் போல தனித்து ஒதுக்கப்பட்டது தான் என்று கூறி தேற்றுகின்றன. இந்த ஓவியைப் பாடும் கங்குபாய் அம்போர், அழுகின்ற சீதையில் தன்னை காண்கிறார்.


பர்பானி மாவட்டத்தின் தட்கலாஸ் கிராமத்தைச் சேர்ந்த கங்குபாய் அம்போர் துக்கம் நிறைந்த பாடல்களைப் பாடினார், அவரது குரல் நீண்ட காலமாக தனிமையைப் பாடியது இது கேட்பவர்களைக் கவர்ந்தது.

வாசிக்கவும் : ஜிதேந்திர மெய்ட் எழுதிய கங்குபாய்: கிராமக்குரல் மராத்தி ஆன்மா

படங்கள்: ஆதித்யா தீபாங்கர், ஸ்ரேயா காத்யாயினி, சின்சிதா மாஜி.

தமிழில்: சோனியா போஸ்

PARI GSP Team

पारी ग्राइंडमिल सॉन्ग्स प्रोजेक्ट टीम: आशा ओगाले (ट्रांसलेशन); बर्नार्ड बेल (डिजीटाइज़ेशन, डेटाबेस डिज़ाइन, डेवलपमेंट ऐंड मेंटेनेंस); जितेंद्र मैड (ट्रांसक्रिप्शन, ट्रांसलेशन असिस्टेंस); नमिता वाईकर (प्रोजेक्ट लीड ऐंड क्यूरेशन); रजनी खलदकर (डेटा एंट्री)

की अन्य स्टोरी PARI GSP Team
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

की अन्य स्टोरी Soniya Bose