பெயர்: வஜேசிங் பர்கி. பிறப்பு: 1963. கிராமம்: இதாவா. மாவட்டம்: தஹோத்,குஜராத். சமூகம்: பஞ்சமஹாலி பில் பழங்குடி. குடும்ப உறுப்பினர்கள்: தந்தை, சிஸ்கா பாய். தாய், சதுரா பென். மற்றும் ஐந்து சகோதரர்கள். வஜேசிங் மூத்த மகன். குடும்பத்தின் வாழ்வாதாரம்: விவசாய தினக்கூலி வேலை
வறிய பழங்குடி குடும்பத்தில் பிறந்ததை குறிக்கும் வஜேசிங்கின் வார்த்தைகள்: ‘தாயின் கருவிலிருந்தே இருள்’. ‘தனிமை நிறைந்த பாலைவனம்’. ‘வியர்வை ஊறும் கிணறு.’ ‘அடர் நீலப் பசி’ மற்றும் ‘மின்மினிகளின் வெளிச்சம்.’ வார்த்தைகள் மீதான காதலும் பிறப்பிலேயே உடன் பிறந்தது.
சண்டைக்கு நடுவே ஒருமுறை சிக்கி, ஒரு தோட்டா ஆதிவாசியின் கழுத்தையும் தாடையையும் பதம் பார்த்தது. அவரின் குரல் பாதிப்படைந்தது. ஏழு வருட சிகிச்சையும் 14 அறுவை சிகிச்சைகளும் பெருமளவு கடனும் கூட அவரது காயத்தை ஆற்றவில்லை. அது வலியை இரட்டிப்பாக்கியது. சமூகத்தில் குரலில்லாத பழங்குடியாக பிறந்தது முதல் அடி.சொந்தமாக இருக்கும் குரலும் சேதமடைந்தது இரண்டாம் அடி. கண்கள் மட்டும் துல்லியம் கொண்டிருக்கிறது. குஜராத்தி இலக்கியத்திலேயே திறன்பெற்ற எழுத்து பரிசோதகராக வஜேசிங் இருக்கிறார். ஆனால் அவரின் சொந்த எழுத்துகளுக்கு உரிய மரியாதை கிட்டவில்லை.
தன் ஊசலாட்டத்தை பிரதிபலித்து வஜேசிங், குஜராத்தி எழுத்துருக்களைக் கொண்டு பஞ்ச்மஹாலி பிலி மொழியில் எழுதிய கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு.


