தண்ணீர் குழாய் அடியில், பள்ளியில், கோயில்களில், நியாய விலை கடையில், பேருந்து நிறுத்தத்தில், அரசு அலுவலகங்களுக்கு வெளியே என்று அவள் குழந்தையாக இருந்த காலத்திலிருந்தே நீண்ட வரிசையில் காத்திருக்க பழகி இருந்தாள். பெரும்பாலும் அவள் சாதாரண வரிசையில் இருந்து சற்று தள்ளி தனியாக ஒரு வரிசையில் நிற்க வைக்கப்படுவாள். இறுதியாக அவளது முறை வரும்போது அவளை ஏமாற்றமே வரவேற்கும் அதற்கும் அவள் பழக்கப்பட்டே இருந்தாள். ஆனால் இன்று சுடுகாட்டிற்கு வெளியே அவளால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளது பக்கத்து வீட்டுக்காரரான நிஜாம் பாயின் ஆட்டோவில் அவரது சடலத்தை விட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பி செல்ல அவள் விரும்பினாள்.

சில நாட்களுக்கு முன்பு பிக்கு தனது வயதான தாயின் சடலத்தை கொண்டுவந்தபோது வரிசை எவ்வளவு தூரம் இருந்தது என்று எண்ணி அவள் வியப்படைந்தாள். ஆனால் அவரை உடைத்தது அவரது தாயின் மரணம் மட்டும் அல்ல அதற்கு முன்பே அவரது ஆன்மா நொறுங்கிப் போய் இருந்தது பணம் இல்லாமல், உணவு இல்லாமல், வேலை இல்லாமல், அவரைப் போன்ற மக்கள் தங்களது நிலுவை ஊதியத்தை வாங்குவதற்குக் கூட போராட்டம் செய்ய வேண்டிய நிலை, போதுமான அளவு பணம் சம்பாதிப்பதற்கு ஒரு வேலையை கண்டுபிடிப்பதற்கு ஒரு போராட்டம் நடத்த வேண்டிய நிலை, நோய்  அவர்களை முழுங்குவதற்கு முன்பே கடன் அவர்களை நசுக்குகிறது, இதற்கு முன்னர் இரக்கமற்ற இந்த நோய் அவர்களின் வரப்பிரசாதம் என்று அவள் எண்ணியிருந்தாள் எதுவரையெனில்..

அந்த சிறப்பான ஊசி அவரை காப்பாற்றி இருக்குமா? காலனிக்கு அருகில் உள்ள தனியார் கிளினிக் மருத்துவர் அவர்கள் அதற்கான ஏற்பாடை செய்தால் அதைத் தருவதற்கு தயாராக இருந்தார். அவள் இன்னும் கடுமையாக முயற்சித்திருக்க வேண்டும் என்று அவளுக்கு தெரியும். ஆனால் நீண்ட வரிசையில் காத்திருந்துவிட்டு பின்னர் அதிர்ஷ்டம் இல்லாமல் போனால் என்ன செய்வது? மருத்துவமனைகள் உபகரணங்கள் இல்லாமல் இருக்கின்றன. மீண்டும் அடுத்த நாள் முயற்சிக்கும் படி அவர்கள் கூறினார்கள். நிச்சயம் அவளுக்கு கிடைக்குமா? "ஐம்பதாயிரம் ரூபாய் கொடுக்க தயாராக இருந்தால் அதை பெறக்கூடிய சில இடங்கள் எனக்கு தெரியும்", என்று நிஜாம் பாய் பெருமூச்சுடன் கூறினார். அந்தப் பெரும் தொகையின் ஒரு பகுதியை கூட அவள் எங்கே போய் திரட்டுவாள்? அவள் வேலை செய்யாத நாட்களுக்கு சம்பளம் தருவதை நிறுத்திவிட்டார் முதலாளி அம்மா பிறகு எங்கிருந்து முன்பணம் வாங்குவது.

அவரது உடல் உலை போல அனலாக இருந்தது, இறுதியாக நள்ளிரவில் நிஜாம் பாயின் ஆட்டோவில் அவரை ஏற்றிய போது அவர் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் 108 அழைத்தபோது அவர்கள் வருவதற்கு இரண்டு மூன்று மணி நேரமாகும் என்றனர், மேலும் எங்குமே படுக்கை வசதி இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். அரசு மருத்துவமனைகளுக்கு வெளியே வரிசை இன்னும் நீளமாக இருந்தது. அவள் தனியார் ஆட்டோவில் வந்திருப்பதால் அவரது காத்திருப்பு இன்னும் நீண்ட நேரம் தொடரும் என்று அவளிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர் கண்களை திறக்கவில்லை. அவள் அவரது கையைப் பிடித்துக் கொண்டே இருந்தாள், அவரது முதுகு மற்றும் மார்பை  தேய்த்து விட்டபடி இருந்தாள், அவ்வப்போது ஒரு மிடர் தண்ணீர் பருகும் படி செய்தாள், கொஞ்சம் பொறுத்துக் கொள்ளும்படி கூறினாள், உறக்கம் இல்லாமல், உணவு இல்லாமல் அவர்கள் 3 பேரும் காத்திருந்தனர் - அவரது முறைக்கு முன்னால் இருவர் இருந்த நிலையில் அவர் இறந்துவிட்டார்.

சுடுகாட்டில் மீண்டும் ஒரு வரிசை காத்திருந்தது...

இந்த கவிதையை சுதனவா தேஷ்பாண்டே வாசிப்பதை கேட்க

மோட்சம்

இரவல் காற்றை எடுத்து
வாழ்க்கை மீதான மோகத்தில் மூழ்குங்கள்
மூடிய கண்களுக்குப் பின்னால் இருக்கும் இருட்டு பள்ளதாக்கில் தொலைந்து போங்கல், வெளிச்சத்தை தேடாதீர்கள்.
இந்த வாழ்க்கையின் ஆசை  தொண்டையில் சிக்கிக்ககொண்ட இரவு காற்றில் கிரீச்சிடும் ஆம்புலன்ஸ் ஒலி இறங்கி மந்திரமாய் ஒலிக்கும் எங்களது ஓலமாய் உருகட்டும்.

தெருக்களில் தன்னை பரப்பிக்ககொள்ளும் இந்த கனத்த, பாழடைந்த, எரியும் தனிமையை வைத்து காதுகளை இறுக மூடிக்கொள்ளுக்கள்.
துளசியும் வறண்டுவிட்டது.
அந்த மருந்திற்கு பதிலாக உங்களது அன்பிற்குயவர்களின் பெயரை நாவில் வைத்து நினைவுகளை முழுங்குங்கள்.

கண்ணீரால் உங்கள் உடலை கழுவுங்கள் சந்தனக்கனவுகளால் மூடுங்கள் மூடிய உள்ளகையினை மார்பில் வையுங்கள் அடர்த்தியான வெள்ளை துயரில் மூடி உறங்கும் அந்த கண்களில் சிறிது அன்பு மினுமினுக்கட்டும் நீங்கள் விடும் கடைசி பெருமூச்சு இவ்வெற்றுடலின் அடியில் இருக்கும் வாழ்விற்கு ஒளியூட்டட்டும் அனைத்தும் வைக்கோலைப்போல எரிந்து சாம்பலாக காத்திருக்கிறது வாருங்கள் இன்றிறவு எறியும் உங்களின் சிதை உங்களை தீப்பிலம்பால் தீண்ட காத்திருக்கிறது.

ஒலி: சுதன்வா தேஷ்பாண்டே ஜனநாடியமஞ்சின் நடிகர் மற்றும் இயக்குனர் மற்றும் லெப்ட் வர்ட் புக்ஸின் ஆசிரியருமாவார்.


தமிழில்: சோனியா போஸ்

Pratishtha Pandya

Pratishtha Pandya is a Senior Editor at PARI where she leads PARI's creative writing section. She is also a member of the PARIBhasha team and translates and edits stories in Gujarati. Pratishtha is a published poet working in Gujarati and English.

Other stories by Pratishtha Pandya
Illustration : Labani Jangi

Labani Jangi is a 2020 PARI Fellow, and a self-taught painter based in West Bengal's Nadia district. She is working towards a PhD on labour migrations at the Centre for Studies in Social Sciences, Kolkata.

Other stories by Labani Jangi
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose