முப்பது வயதுகளின் தொடக்கத்தில் இருக்கும் கணேஷ் பண்டிட், புது டெல்லியில் பழைய யமுனா பாலத்தருகே இருக்கும் லோஹா புல் பகுதியில் வசிக்கும் இளையவர் ஆவார். அவரின் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள், நீச்சல் பயிற்சியாளர் மற்றும் கடைப் பணியாளர் போன்ற பிரதான வேலைகளுக்கு செல்லவே விரும்புவதாக சொல்கிறார் அவர்.

டெல்லியில் ஓடும் யமுனா, கங்கையின் நீளமான துணை ஆறு ஆகும். (காகராவுக்கு பின்னான) இரண்டாவது பெரிய ஆறு அது.

யமுனையில் புகைப்படம் எடுக்க விரும்புபவர்களுக்கு புகைப்பட பதிவுகளை ஒருங்கிணைத்துக் கொடுக்கும் பண்டிட், ஆற்றின் நடுவே சடங்குகள் செய்ய விரும்புபவரை படகில் கொண்டு செல்லும் வேலையையும் செய்கிறார். “அறிவியல் தோற்கும் இடத்தில், நம்பிக்கை செயலாற்றுகிறது,” என்கிறார். அவரின் தந்தை இங்கு புரோகிதராக இருக்கிறார். அவரும் இரு சகோதரர்களும் யமுனையில்தான் நீச்சல் கற்றிருக்கின்றனர். பண்டிட்டின் சகோதரர்கள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலில் லைஃப் கார்டுகளாக வேலை பார்க்கின்றனர்.

PHOTO • Shalini Singh
PHOTO • Shalini Singh

இடது: 33 வயது கணேஷ் பண்டிட், யமுனையில் படகோட்டியாக இருக்கிறார். டெல்லியின் லோஹா புல் பால பகுதியில் வசிக்கிறார். வலது: பாலத்தில் இருக்கும் எழுத்துப் பலகை வரலாற்றை நினைவுறுத்துகிறது

PHOTO • Shalini Singh
PHOTO • Shalini Singh

இடது: கணேஷ் பண்டிட்டின் படகு பூட்டப்பட்டிருக்கும் யமுனைப் பகுதியில் செடிகளும் கழிவுகளும் கிடைக்கின்றன. வலது: ஆற்றுக்கு அருகே உள்ள மலையில் மந்திர தந்திரங்கள் செய்யவென மக்கள் கொண்டு வரும் பொருட்களின் கவர்கள் கிடக்கின்றன. கணேஷ் பண்டிட் போன்ற படகோட்டிகள், இம்மக்களை ஒரு கட்டணம் பெற்று படகில் கொண்டு செல்கின்றனர்

படகோட்டுதல், நல்ல வருமானம் கொண்ட தொழிலாகவும் மதிப்புமிக்க வேலையாகவும் இல்லாது இருப்பதால், யாரும் தங்களின் மகளை படகோட்டிக்கு மணம் முடித்து தர விரும்புவதில்லை என்கிறார் அந்த இளைஞர். அவருக்கு புரியவில்லை. “நாளொன்றுக்கு 300-500 ரூபாயை படகோட்டி சம்பாதிக்கிறேன்.” ஆற்றில் ஃபோட்டோ மற்றும் வீடியோ ஷூட் ஒருங்கிணைத்துக் கொடுத்தும் கணிசமான வருமானம் ஈட்டுகிறார் பண்டிட்.

பத்தாண்டு காலமாக படகோட்டி வரும் அவர், ஆறு மாசுபடுவதை பற்றி புலம்புகிறார். செப்டம்பர் மாத மழை வந்து அழுக்கை அடித்து செல்லும்போது மட்டும்தான் ஆறு சுத்தமாகிறது என்கிறார் அவர்.

தலைநகரிலிருந்து 22 கிலோமீட்டர் (1.6 சதவிகிதத்துக்கு) தூரத்துக்கு யமுனா ஓடுகிறது. ஆனால் இந்த சிறு தூரத்தில் கொட்டப்படும் கழிவுகள், 1,376 கிமீ நீள ஆற்றின் 80 சதவிகித மாசுபாடுக்குக் காரணமாக இருக்கிறது. வாசிக்க: யமுனையில் 'இறந்த மீன்களும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்'

தமிழில் : ராஜசங்கீதன்

Shalini Singh

শালিনী সিং পারি-র পরিচালনের দায়িত্বে থাকা কাউন্টারমিডিয়া ট্রাস্টের প্রতিষ্ঠাতা অছি-সদস্য। দিল্লি-ভিত্তিক এই সাংবাদিক ২০১৭-২০১৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে নিম্যান ফেলো ফর জার্নালিজম ছিলেন। তিনি পরিবেশ, লিঙ্গ এবং সংস্কৃতি নিয়ে লেখালিখি করেন।

Other stories by শালিনী সিং
Editor : PARI Desk

আমাদের সম্পাদকীয় বিভাগের প্রাণকেন্দ্র পারি ডেস্ক। দেশের নানান প্রান্তে কর্মরত লেখক, প্ৰতিবেদক, গবেষক, আলোকচিত্ৰী, ফিল্ম নিৰ্মাতা তথা তর্জমা কর্মীদের সঙ্গে কাজ করে পারি ডেস্ক। টেক্সক্ট, ভিডিও, অডিও এবং গবেষণামূলক রিপোর্ট ইত্যাদির নির্মাণ তথা প্রকাশনার ব্যবস্থাপনার দায়িত্ব সামলায় পারি'র এই বিভাগ।

Other stories by PARI Desk
Translator : Rajasangeethan

রাজাসংগীতন চেন্নাইবাসী লেখক। এক প্রখ্যাত তামিল খবরের চ্যানেলে সাংবাদিক হিসেবে কাজ করেন।

Other stories by Rajasangeethan