தூரத்தில் இருக்கும் தன் காதலனை விட்டு பிரிந்திருக்கும் காதலி, தன்னவனுக்காக கடல்களைக் கடக்கவும் தயாராக இருக்கிறாள். அவன் அருகே இருக்க விரும்புகிறாள். இந்தப் பாடல் ஏக்கத்துடன் தவிக்கும் அவளின் கோரிக்கைகளின் வெளிப்பாடு:
કુંજલ ન માર વીરા કુંજલ ન માર , હી કુંજલ વેધી દરિયા પાર
குஞ்சல் கொக்கை கொன்றுவிடாதே. கேள்! அது கடலையும் கடக்கும் வலிமை கொண்டது!
அவன் தன்னை மறப்பதை இவள் விரும்பவில்லை. மறந்துவிட்டால் இறந்து விட்டதாக ஆகிவிடுமாம். ஒவ்வொரு குளிர்காலத்திலும் தொலைதூர சைபீரியாவிலிருந்து கட்ச்சில் உள்ள வறண்ட புல்வெளிகளுக்கு புலம்பெயரும் நெட்டை கொக்கை, உள்ளூரில் குஞ்சல் என்று அழைக்கின்றனர். தன்னோடு அவள் அடையாளப் படுத்தும் இந்த குஞ்சல் பறவை, கட்ச்சின் நாட்டுப்புறக் கலாச்சாரத்தில் மிகவும் பரிச்சயமான, விரும்பப்படும் மற்றும் மதிக்கப்படும் பறவையாகும். இது பெண் கதாபாத்திரங்களின் உலகில், ஒரு தோழியாக, நம்பிக்கைக்குரியதாக, ஆலோசகராக, அப்பெண்களின் அடையாளம் மற்றும் அபிலாஷைகளின் உருவகமாக கூட இழைகிறது.
அதற்குப் பதிலாக அவன், ஒரு மூக்குத்தி, ஒரு ஆரம், ஒரு ஜோடி கொலுசுகள், நெற்றி மற்றும் விரல்களுக்கான ஆபரணங்கள், என தனக்கு சில நகைகள் வாங்கித் தரலாம் என்கிறாள். மேலும் அவர்கள் இருவரும் இணைவதை குறிக்கும் விதமாக, அவை ஒவ்வொன்றின் மீதும், ஒரு ஜோடி குஞ்சல் கொக்குகளின் உருவம் பொறிக்கப்பட்டிருப்பதை இவள் விரும்புகிறாள். முந்த்ரா தாலுகாவைச் சேர்ந்த ஜூமா வாகர், மிக அழகாக பாடியுள்ள இந்தப் பாடல், இந்தத் தொடரின் 'பறவையியல் நாட்டுப்புறப் பாடல்களில்' மற்றொரு அழகான பாடலாகும்.
કરછી
કુંજલ ન માર વીરા કુંજલ ન માર, હી કુંજલ વેધી દરિયા પાર
કડલાર રે ઘડાય દે વીરા કડલા ઘડાય દે, કાભીયે જે જોડ તે કુંજ કે વીરાય
કુંજલ ન માર વીરા કુંજલ ન માર, હી કુંજલ વેધી દરિયા પાર
મુઠીયા રે ઘડાય દે વીરા મુઠીયા રે ઘડાય, બગલીયે જે જોડ તે કુંજ કે વીરાય
કુંજલ ન માર વીરા કુંજલ ન માર, હી કુંજલ વેધી દરિયા પાર
હારલો ઘડાય દે વીરા હારલો ઘડાય, દાણીએ જે જોડ તે કુંજ કે વીરાય
ન માર વીરા કુંજલ ન માર, હી કુંજલ વેધી દરિયા પાર
નથડી ઘડાય દે વીરા નથડી ઘડાય, ટીલડી જી જોડ તે કુંજ કે વીરાય
કુંજલ ન માર વીરા કુંજલ ન માર, હી કુંજલ વેધી દરિયા પાર
કુંજલ ન માર વીરા કુંજલ ન માર, હી કુંજલ વેધી દરિયા પાર
தமிழ்
குஞ்சல் கொக்கை கொன்றுவிடாதே. கேள்! அது கடலையும் கடக்கும் வலிமை கொண்டது!
ஜோடி கொலுசுகளை செய்து கொடு, என் பாதங்களுக்காக
அதில் ஜோடி குஞ்சல் கொக்குகளின் உருவத்தை பொறித்துக் கொடு!
குஞ்சல் கொக்கை கொன்றுவிடாதே. கேள்! அது கடலையும் கடக்கும் வலிமை கொண்டது!
ஒரு மோதிரத்தை செய்து கொடு, என் விரல்களுக்காக,
ஜோடி வளையல்களும் வேண்டும், அவை ஒவ்வொன்றிலும் ஜோடி குஞ்சல் கொக்குகளின் உருவத்தை
பொறித்துக் கொடு!
குஞ்சல் கொக்கை கொன்றுவிடாதே. கேள்! அது கடலையும் கடக்கும் வலிமை கொண்டது!
ஒரு ஆரத்தை செய்து கொடு, அது என் கழுத்தை அலங்கரிக்கட்டும்
அதில் ஜோடி குஞ்சல் கொக்குகளின் உருவத்தை பொறித்துக் கொடு!
குஞ்சல் கொக்கை கொன்றுவிடாதே. கேள்! அது கடலையும் கடக்கும் வலிமை கொண்டது!
ஒரு மூக்குத்தி செய்து கொடு, என் மூக்கிற்காக,
நெத்திச் சுட்டியும் வேண்டும், என் நெத்திக்காக, அவற்றில் ஜோடி குஞ்சல் கொக்குகளின் உருவத்தை பொறித்துக்
கொடு!
குஞ்சல் கொக்கை கொன்றுவிடாதே. கேள்! அது கடலையும் கடக்கும் வலிமை கொண்டது!
குஞ்சல் கொக்கை கொன்றுவிடாதே. கேள்! அது கடலையும் கடக்கும் வலிமை கொண்டது!
பாடல் வகை: பாரம்பரிய நாட்டுப்புற பாடல்
பிரிவு: காதல் மற்றும் ஏக்கம் குறித்த பாடல்கள்
பாடல்: 12
பாடலின் தலைப்பு: குஞ்சல் நா மார் வீர் குஞ்சல் நா மார் ( குஞ்சல் கொக்கை கொன்றுவிடாதே. கேள்!)
இசையமைப்பாளர்: தேவல் மேத்தா
பாடகர்: ஜுமா வாகர் - முந்த்ரா தாலுகா, பத்ரேசர் கிராமம்
பயன்படுத்தப்பட்ட கருவிகள்: டிரம், ஹார்மோனியம், பாஞ்சோ
பதிவு செய்யப்பட்ட ஆண்டு: 2012, KMVS ஸ்டுடியோ
சமூகத்தால் நடத்தப்படும் வானொலி, சூர்வாணியால், பதிவு செய்யப்பட்ட இந்த 341 பாடல்கள், கட்ச் மகிளா விகாஸ் சங்கதன் (KMVS) மூலம் பாரிக்கு வந்துள்ளன. இது போன்ற மற்ற பாடல்களுக்கு: சாங்க்ஸ் ஆஃப் தி ரண் : ஆர்கைவ்ஸ் ஆஃப் கட்சு ஃபோல்க் சாங்க்ஸ்
பிரீத்தி சோனி, KMVS செயலர் அருணா தோலக்கியா, KMVS திட்ட ஒருங்கிணைப்பாளர் அமத் சமேஜா, ஆகியோரின் ஆதரவிற்கும், மற்றும் மாபெரும் உதவிக்காக பார்திபென் கோருக்கும் சிறப்பு நன்றிகள்.
தமிழில் : அஹமத் ஷ்யாம்