“30 வருடங்களுக்கு முன் கடும்பனி ஸ்பிதியில் பொழியும். பச்சைப்பசேலென இருக்கும். புற்களும் நன்றாக இருக்கும்,” என்கிறார் செர்ரிங் அங்துய். இமாச்சலப் பிரதேசத்தின் லஹால் ஸ்பிதி மாவட்டத்தைச் சேர்ந்த அவர் விவசாயியும் மேய்ப்பரும் ஆவார்.
43 வயதான அவர், கடல் மட்டத்திலிருந்து 14,500 அடி உயரத்தில் 158 பேர் (கணக்கெடுப்பு 2011) . அவர்களின் பெரும்பான்மையானோர் பட்டியல் பழங்குடியாக பட்டியலிடப்பட்டிருக்கும் போத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கிராமத்தைச் சேர்ந்தவர்களில் அதிகம் விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் ஸ்பிதிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவனிப்பது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர்.
2021ம் ஆண்டின் ஜூலை மாத பிற்பகுதியில் லங்க்சாவில் கால்நடைகளை கவனித்துக் கொண்டிருந்த செரிங்கையும் சில மேய்ப்பர்களையும் சந்தித்தோம். விலங்குகளுக்கு புற்கள் தேடி நீண்ட தூரம் அவர்கள் செல்ல வேண்டியிருப்பதைப் பற்றி பேசினார்கள்.
“இப்போதெல்லாம் மலைகளில் பனிப்பொழிவு குறைவாகி விட்டது. அதிக மழையும் கிடையாது. எனவே புற்கள் அதிகமாக கிடைப்பதில்லை,” என்கிறார் செர்ரிங். “இதனால்தான் நாங்கள் விலங்குகளை இன்னும் அதிக உயரங்களுக்கு மேய்க்க அழைத்துச் செல்கிறோம்.”
ஸ்பிதி இமாச்சலப் பிரதேசத்தின் வடகிழக்குப் பகுதியில் இருக்கிறது. பல ஆறுகளின் உயரமான பள்ளத்தாக்குகளையும் கொண்டிருக்கிறது. இப்பகுதியில் இருக்கும் குளிர் பாலைவனம் போன்ற பகுதி இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது - குறிப்பாக கோடை மாதங்களில். வருபவர்கள் பால்வெளி மண்டலத்தை கூட இரவு வானங்களில் பார்க்க முடியும்.
இக்காணொளியில் சொல்லப்படும் மேய்ப்பரின் கதையில், மாறிக் கொண்டே இருக்கும் பனிப்பொழிவு, செர்ரிங் மற்றும் சக மேய்ப்பர்களின் வாழ்க்கைகளையும் வாழ்வாதாரங்களையும் பாதித்த விதங்களை தெரிந்து கொள்ளலாம்.
“வரும் வருடங்களில் ஏதோவொன்று நடக்குமென நாங்கள் (கிராமவாசிகள்) கருதுகிறோம். இங்குள்ள செம்மறிகளும் ஆடுகளும் புற்களின்றி அழிந்துவிடும். எங்கிருந்து நாங்கள் அவற்றைப் பெறுவது?,” என அவர் கேட்கிறார், முகத்தில் கவலை ரேகைகள் படர.
தமிழில் : ராஜசங்கீதன்