வயது 80களில் இருக்கும் ஷெரிங் டோர்ஜீ பூடியா ஐந்து தசாப்தங்களாக வில் தயாரித்து வருகிறார். வருமானத்திற்கு மரச் சாமான்களை சரி செய்யும் தச்சுத் தொழிலை அவர் செய்து வருகிறார். ஆனால் அவரது சொந்த மாநிலமான சிக்கிமின் கலாச்சாரத்தில் ஆழமாக பதிந்துள்ள வில்வித்தையிலிருந்து இதற்கான உத்வேகத்தை பெறுகிறார்.
சிக்கிமின் பக்யாங் மாவட்டத்தில் இருக்கும் கர்தோக் கிராமத்தில் ஒருகாலத்தில் ஏராளமான வில் செய்யும் கலைஞர்கள் இருந்தனர் என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். இப்போது ஷெரிங் மட்டுமே எஞ்சியுள்ளார். மூங்கிலில் வில் செய்யும் அவர் லோசூங் எனும் பவுத்த பண்டிகையின் போது அவற்றை விற்கிறார்.
நீங்கள் அவரைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள படிக்கவும்: பாக்யோங்கின் வில் அம்புகளைத் தயாரிப்பவர்
தமிழில்: சவிதா