பிரபல கார்பா பாடலின் ராகத்தில் பாடப்படும் இப்பாடல் விடுதலை, எதிர்ப்பு மற்றும் உறுதி ஆகியவற்றுக்கான பாடல். வம்சாவளியாக வரும் அமைப்புகளையும் கேள்வியின்றி கட்டுபடச் சொல்லும் பண்பாட்டு உத்தரவுகளையும் ஏற்க மறுக்கும் கிராமப்புற பெண்களின் உண்மையான குரலை இப்பாடல் எதிரொலிக்கிறது.

கட்ச்சில் பேசப்படும் பல மொழிகளில் ஒன்றான குஜராத்தியில் எழுதப்பட்டிருக்கும் இப்பாடல், பெண்ணுரிமை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த கட்ச் மகிளா விகாஸ் சங்காதன் (KMVS) ஒருங்கிணைத்த பயிற்சிப் பட்டறையில் கிராமப் பெண்கள் சேர்ந்து எழுதியப் பாடல் ஆகும்.

இப்பாடல் எந்த வருடம் எழுதப்பட்டது என்பதையும் யார் எழுதினார்கள் என்பதையும் அறுதியிட்டு சொல்வது கஷ்டம். ஆனால் சம சொத்துரிமை கோரும் ஒரு பெண்ணின் உறுதியான குரலை சந்தேகமே இல்லாமல் பாடலில் கேட்க முடியும்.

பாடல் தயாரிக்கப்பட்ட பின்னணி நமக்கு சரியாக தெரியவில்லை என்றாலும் நிலவுரிமை மற்றும் பெண்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து குஜராத் முழுக்க நடத்தப்பட்ட, குறிப்பாக கட்ச்சில் 2003ம் ஆண்டையொட்டி நடத்தப்பட்ட பயிற்சிகள் மற்றும் உரையாடல்கள் பற்றிய ஆவணங்கள் இருக்கின்றன. பெண்களின் உரிமைக்கான விழிப்புணர்வு பிரசாரம், விவசாய உற்பத்தியில் இருக்கும் பெண்களின் பங்களிப்புக்கும் நிலத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் உரிமைக்கும் இடையே உள்ள இடைவெளியைப் பேசின.

ஆனால் அப்பாடல் அதற்குப் பிறகு, அப்பகுதி முழுக்க பயணித்து பின் தாண்டியும் சென்றது. பயணத்தினூடாக எல்லா நாட்டுப்புற பாட்டுக்கும் நேர்வதுபோல வரிகள் சேர்க்கப்பட்டன. குறைக்கப்பட்டது. பார்வையாளர்களுக்கு ஏற்ப பாடகர்களால் மாற்றப்பட்டன. இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் பாடலை நகத்ரா தாலுகாவை சேர்ந்த நந்துபா ஜடேஜா வழங்கியிருக்கிறார்.

குழு நடத்தும் ரேடியோவான சூர்வாணியால் பதிவு செய்யப்பட்ட 341 பாடல்களில் இதுவும் ஒன்று. KMVS-ன் மூலமாக பாரிக்கு கிடைத்த இப்பாடல் தொகுப்பு, அப்பகுதியில் இருக்கும் பலதரப்பட்ட பண்பாடு மற்றும் இசை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. இத்தொகுப்பு, கட்ச்சின் சரிந்து வரும் இசை பாரம்பரியத்தை பாதுகாக்க உதவுகிறது. அதன் ஒலிகள் பாலை மணலில் தொலைந்து கொண்டிருக்கின்றன.

நகத்ராவை சேர்ந்த நந்துபா ஜடேஜா பாடிய பாடலை கேளுங்கள்


Gujarati

સાયબા એકલી હું વૈતરું નહી કરું
સાયબા મુને સરખાપણાની ઘણી હામ રે ઓ સાયબા
સાયબા એકલી હું વૈતરું નહી કરું
સાયબા તારી સાથે ખેતીનું કામ હું કરું
સાયબા જમીન તમારે નામે ઓ સાયબા
જમીન બધીજ તમારે નામે ઓ સાયબા
સાયબા એકલી હું વૈતરું નહી કરું
સાયબા મુને સરખાપણાની ઘણી હામ રે ઓ સાયબા
સાયબા એકલી હું વૈતરું નહી કરું
સાયબા હવે ઘરમાં ચૂપ નહી રહું
સાયબા હવે ઘરમાં ચૂપ નહી રહું
સાયબા જમીન કરાવું મારે નામે રે ઓ સાયબા
સાયબાહવે મિલકતમા લઈશ મારો ભાગ રે ઓ સાયબા
સાયબા હવે હું શોષણ હું નહી સહુ
સાયબા હવે હું શોષણ હું નહી સહુ
સાયબા મુને આગળ વધવાની ઘણી હામ રે ઓ સાયબા
સાયબા એકલી હું વૈતરું નહી કરું
સાયબા મુને સરખાપણાની ઘણી હામ રે ઓ સાયબા
સાયબા એકલી હું વૈતરું નહી કરું

தமிழ்

இனி தனியாக கடுமையாக உழைக்க மாட்டேன், அன்பே.
எப்போதைக் காட்டிலும் உனக்கு சமமாக நானிருக்க விரும்புகிறேன், அன்பே
இனி தனியாக கடுமையாக உழைக்க மாட்டேன்
உன்னை போல் நானும் நிலத்தில் உழைக்கிறேன்
ஆனால் நிலங்கள் உன் பெயரில் இருக்கின்றன.
ஓ நிலம் உன் பெயரில் இருக்கிறது அன்பே
இனி தனியாக கடுமையாக உழைக்க மாட்டேன், அன்பே.
எப்போதைக் காட்டிலும் உனக்கு சமமாக நானிருக்க விரும்புகிறேன், அன்பே
இனி தனியாக கடுமையாக உழைக்க மாட்டேன்
இனி வீட்டில் நான் அடங்கியிருக்க மாட்டேன்
இனி என் வார்த்தையை கட்டுப்படுத்த மாட்டேன்
ஒவ்வொரு ஏக்கரிலும் என் பெயர் இருக்க வேண்டும்
சொத்துப் பத்திரங்களில் என் பங்கை நான் கேட்பேன்
சொத்துப் பத்திரங்களில் என் பங்கு வேண்டும், அன்பே
இனி என்னை சுரண்ட விட மாட்டேன், என் அன்பே
சகிப்புத்தன்மை கொண்டிருக்க மாட்டேன், இனி இருக்க மாட்டேன்
நான் வளர விரும்புகிறேன். அதிகம் செய்ய விரும்புகிறேன்.
இனி தனியாக கடுமையாக உழைக்க மாட்டேன்
எப்போதைக் காட்டிலும் உனக்கு சமமாக நானிருக்க விரும்புகிறேன், அன்பே
இனி தனியாக கடுமையாக உழைக்க மாட்டேன்


PHOTO • Priyanka Borar

பாடல் வகை : முற்போக்கு

தொகுப்பு : விடுதலைப் பாடல்கள்

பாடல் : 3

பாடல் தலைப்பு : சாயபா, எக்லி ஹுன் வைதாரு நகி காருன்

இசையமைப்பாளர் : தேவல் மேத்தா

பாடகர் : நகத்ரா தாலுகாவை சேர்ந்த நந்துபா ஜடேஜா

பயன்படுத்தப்பட்ட கருவிகள் : ஹார்மோனியம், மேளம், காஞ்சிரா

பதிவு செய்யப்பட்ட வருடம் : 2016, KMVS ஸ்டுடியோ

ப்ரீத்தி சோனி, KMVS-ன் செயலாளர் அருணா தொலாகியா, திட்ட ஒருங்கிணைப்பாளர் அமத் சமேஜா ஆகியோருக்கும் குஜராத்தி மொழிபெயர்ப்பு செய்த பார்தி பென் கோருக்கும் நன்றி

தமிழில்: ராஜசங்கீதன்

Pratishtha Pandya

কবি এবং অনুবাদক প্রতিষ্ঠা পান্ডিয়া গুজরাতি ও ইংরেজি ভাষায় লেখালেখি করেন। বর্তমানে তিনি লেখক এবং অনুবাদক হিসেবে পারি-র সঙ্গে যুক্ত।

Other stories by Pratishtha Pandya
Illustration : Priyanka Borar

নিউ-মিডিয়া শিল্পী প্রিয়াঙ্কা বোরার নতুন প্রযুক্তির সাহায্যে ভাব এবং অভিব্যক্তিকে নতুন রূপে আবিষ্কার করার কাজে নিয়োজিত আছেন । তিনি শেখা তথা খেলার জন্য নতুন নতুন অভিজ্ঞতা তৈরি করছেন; ইন্টারেক্টিভ মিডিয়ায় তাঁর সমান বিচরণ এবং সেই সঙ্গে কলম আর কাগজের চিরাচরিত মাধ্যমেও তিনি একই রকম দক্ষ ।

Other stories by Priyanka Borar
Translator : Rajasangeethan

রাজাসংগীতন চেন্নাইবাসী লেখক। এক প্রখ্যাত তামিল খবরের চ্যানেলে সাংবাদিক হিসেবে কাজ করেন।

Other stories by Rajasangeethan