தாமோதர் ஆற்றை ஒட்டிய அம்தா நகரில் வேளாண்மையும், மீன்பிடித்தலுமே முதன்மையான தொழில்கள். இங்குள்ள பெண்கள் சிஃப்பான், ஜார்ஜெட் புடவைகளில் சிறு கற்களை பதித்து, சாதாரண புடவைகளை கலை படைப்பாக மாற்றுகின்றனர்.
மேற்குவங்கத்தின் பல வீடுகளில் பெண்கள் இப்பணியில் ஈடுபடுகின்றனர். இதில் கிடைக்கும் வருவாய், குடும்பச் செலவுகளை தீர்ப்பதோடு, சுதந்திர உணர்வையும் அளிக்கிறது.
மேற்குவங்க கடைகளில் கல் பதித்த புடவைகள் ரூ.2000 வரை விற்கின்றன. ஆனால் அவற்றை தயார் செய்யும் பெண்களுக்கு ஒரு புடவைக்கு ரூ.20 மட்டுமே கிடைக்கிறது.
2015-16 பாரி நல்கையின் ஒரு பகுதியாக சிஞ்சிதா மாஜியின் இந்த காணொளியும், கதையும் உருவாக்கப்பட்டது
தமிழில்: சவிதா