வேகமாக ஒட்டுத்துணி தைத்து தன் கோபாவேசத்தை வெளியேற்றிக் கொண்டிருக்கிறார் அவர். பாட்டியிடமிருந்து ஒட்டுத்துணி தையலை கற்றார் அவர். வேட்டி, பருத்தி புடவை, கிழிந்த சல்வார் போன்றவற்றின் மிச்சத் துணிகளை சேர்த்து ஒட்டி சுருங்கிய விரல்களால் தைத்து பூத்தையலாக பாட்டி உருவாக்கும் மாயத்தை சிறுவயதில் பிரமிப்போடு பார்த்து வளர்ந்தவர். மணம் முடித்து வரும்போது கூட பாட்டியின் ஒரு பூத்தையல் துணியுடன்தான் அவர் வந்தார். குளிர் இரவுகளில் இறுக்கிப் பிடித்துக் கொள்ளும் போர்வை அதுதான். அவரே ஒட்டுத்துணி தைத்து போர்வை உருவாக்கத் தொடங்கியபோதுதான் பாட்டியின் அன்பை உணரத் தொடங்கினார். பாட்டியின் மொழியை பேசுவதை போல் அவர் உணர்ந்தார். அவர் தைக்கத் துவங்கியதற்கு காரணம் கற்பனையோ நிந்தனையோ எதிர்ப்புணர்வோ அல்ல. ஊசியின் நுனியில் அவர் உயிர் கொண்டு, நூலாக பேசுவதை விரும்புகிறார். அது உருவாக்கிய வடிவங்களில் அவர் வாழ்கிறார். அந்தத் தையல்களுக்கு நடுவே அவர் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார். கனவு கண்டார். வெள்ளை நிற துணியில் கிளிகள் பறந்தன. கொடிகள் வரையப்பட்ட சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிறங்கள் கிளிகளின் இறக்கைகளுக்கு அழகூட்டின. அவரின் கோபம் இலைகளின் மெலிந்த கூர் நுனிகளில் மின்னுகின்றன. அடர்த்தியாக தைக்கப்பட்ட பூக்களில் மனக்கசப்பு வெளிப்படுகிறது. மீன்களும் குதிரைகளும் யானைகளும் தேனீக்களும் அவர் சொல்லாத கதைகளின் ராகத்தில் அணிவகுக்கின்றன.

உருது மொழியில் சபிகா அப்பாஸ் கவிதை பாடுகிறார்

கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பை பிரதிஷ்தா பாண்டியா வாசிக்கிறார்

مادری زبانیں

شاید نہ میری
اور نہ  ہماری ماں کی کوئی زبان تھی
زبان تو مردوں کوملتی ہے
مردانیت کی وراثت میں
جس کو وہ جیسے چاہیں استعمال کر سکتے ہیں،
گالیاں ایجاد کرکے
غصہ کر،
قانون بنا کر،
چلاّ کر
کھوکھلے عشق کے خطوں میں،
دیواریں گود کر،
تاریخیں گڑھ کر

مردوں کی زبانیں ملتی ہیں
دفتی کی لغتوں میں
اس کو چھاپنے کے لیے
مشینوں کا ایجاد ہوا ہے
ماں کی زبانوں میں لکھی
کویتاؤں کےنیچے
خود کا نام گُدا ہے
بڑے بڑے کتاب گھروں میں
ان کی زبانوں کی ہی کتابیں اور میگزینوں کی
لمبی دھول بھری، جالا لگی الماریاں موجود ہیں
پارلیامنٹوں میں، ریلیوں میں
مردوں کی زبانیں ہی
بولی گئی ہیں
سنی گئی ہیں
لکھی گئی ہیں
سمجھی گئی ہیں
اشتہاروں میں چھاپی گئی ہیں

ہماری ماؤں کی زبانوں کی
تصویر و تاثیر الگ
انداز الگ
تاریخ الگ
بھاؤ الگ
باریک الگ

ڈبو کے عشق میں
بھگو کے لوبان کی دھونیوں میں
جہد کے دریا میں نہلا کر
مٹی کے قلم تیار کیے گئے ہیں
پھر چھپا کر انہیں رکھا گیا ہے
ساڑیوں کی پرتوں میں
ٹرنک میں دبا کر
انوکول موقعوں پر نکال کر
خون کی سیاہی سے ہتھیلیوں پر
مٹی کے قلم نے لکھی ہیں
ہماری مادری زبانیں

جب جب قلم بنا نہ سکیں
تو، بند کمروں کے کونوں میں
رانیوں نے، داسیوں نے
پھسپھسائی ہیں ہماری مادری زبانیں

جنہیں کمرے اور محل نہیں ملے
انہوں نے کھیتوں
اور جھونپڑیوں کی کچی زمینوں پر
ہنسیے اور کھرپیوں سے گودی ہیں
ہماری مادری زبانیں

جن کے ہاتھوں میں فن تھا انہوں نے
برقعوں اور ساڑیوں پر  کاڑھی ہیں
آری، زردوزی و مقیش کی
مادری زبانیں

قبروں کی اینٹوں پر گدی
مادری زبانیں
چتاؤں کی راکھ میں بجھی
مادری زبانیں
خوابیدہ پلکوں سےکھلے لال آسمان پر لکھی
مادری زبانیں
آندولنوں کی گلابی پکار
مادری زبانیں
دلوں کی دھڑک، عشق کی جھنکار
مادری زبانیں
تمنا کی طلب گار
مادری زبانیں

مردوں کی زبانوں کا
رنگ ایک
طریقہ ایک
آواز ایک
مگر رنگ برنگی اٹھلاتی
رس دار، نانا پرکار
مادری زبانیں
اختری کے حلق سے گرے الفاظ
فاطمہ کا انداز
عشق میں سرفراز
مادری زبانیں

ان ساری زبانوں کو چن کر
لفظوں کو سمیٹ کر
ہم لکھ رہے ہیں
نئے سرے سے
ہماری خود کی
مزیدار، جرار، تیز طرار، لمبی
مادری زبانیں

தாய்களின் மொழிகள்

என் தாய்க்கோ எனக்கோ ஒருவேளை
மொழிகளே இல்லாமல் கூட இருந்திருக்கலாம்
ஆண்களுக்குதான் மொழிகள் பரிசளிக்கப்பட்டன
ஆண்மைக்கான பாரம்பரியமாக
அவர்கள் அவற்றை
கெட்டவார்த்தைகள் கண்டுபிடிக்க
கோபத்தை கொட்ட
சட்டங்கள் பிரகடனம் செய்ய
அலற
ஆழமற்ற காதல் கடிதங்கள் எழுத
சுவர்களில் எழுத
வரலாறுகளை திரிக்க
பயன்படுத்திக் கொண்டனர்

ஆண்களின் மொழிகள்
கடின அட்டை அகராதிகளில் மூடப்பட்டன.
அவற்றை அச்சடிக்க
இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன
அவர்களின் பெயர்கள்
எங்களின் தாய்கள் எழுதிய
கவிதைகளுக்கு கீழ் பொறிக்கப்பட்டன.
அவர்களின் மொழிகளில் எழுதப்பட்ட புத்தகங்கள்
பெரிய நூலகங்களின் தூசு படிந்த
சிலந்தி வலை அலமாரிகளில் கிடக்கின்றன
நாடாளுமன்றங்களோ ஊர்வலங்களோ
அவர்களின் மொழிகள்தாம்
பேசப்படுகின்றன
கேட்கப்படுகின்றன
ஆவணப்படுத்தப்படுகின்றன
எழுதப்படுகின்றன
புரிந்துகொள்ளப்படுகின்றன
விளம்பரப்படுத்தப்படுகின்றன.

எங்களின் தாய்மொழிகளும்
அவற்றின் தாக்கமும்
பதிவும்
நடையும்
வரலாறும்
செயல்பாடும்
யாவும் வித்தியாசமானவை.

பூமிக்குள்ளிருந்து வெட்டியெடுத்த பேனாக்களில்
காதலை தொட்டெடுத்து
சுண்ணாம்பின் மாயப் புகையில் முக்கியெடுத்து
வியர்வை பெருங்கடல்களில் அலசியெடுத்து
பழைய புடவைகளின் மடிப்புகளுக்குள் ஒளித்து வைத்து
மரத்துக்கடியில் பாதுகாத்து வைக்கப்படுகின்றன.
மண்ணிலிருந்து பெறப்பட்ட இந்த பேனாக்கள்தான்
சரியான தருணங்களின்போது
எங்களின் உள்ளங்கைகளில், ரத்தமசியில்
எங்களின் தாய்மொழிகளை எழுதின.

பேனாக்களை செய்திருக்காதபோது அவர்கள்
அறையின் மூடிய கதவுகளுக்கு பின்னால்
ராணிகளும் அடிமைப்பெண்களும்
எங்களின் தாய்மொழிகளை முணுமுணுத்தனர்

அரிவாள் மற்றும் வறண்டிகள் செதுக்கப்படாத
அறைகளும் கோட்டைகளும்
மண் மூடிய அவர்களின் நிலத்திலும்
குடிசைகளின் தரைகளில் இல்லாதவர்களும்
முணுமுணுத்தனர் எங்கள் தாய்மொழிகளை.

விரல்நுனிகளில் திறன் கொண்டவர்கள்
முழு அங்கியிலும் புடவைகளிலும்
பூப்பின்னலாக, ஜரிகைத் தையல்களாக
தைத்தனர் எங்களின் தாய்மொழிகளை

எங்கள் தாய்மொழிகள்
நடுகற்களிலும்
சிதைகளின் தீயில் எரிந்து மிஞ்சிய சாம்பலிலும்
கனவுகளும் தூக்கமும் நிறைந்த
கண்களுக்குள் திறக்கும்
செவ்வானிலும் எழுதப்பட்டவை.
எங்கள் தாய்மொழிகள்
புரட்சிக்கான கருஞ்சிவப்பு அழைப்புகள்
எங்கள் இதயங்களின் துடிப்புகள்
அன்புக்கான இசை
ஓய்வற்ற ஆசைகள்
எங்களின் தாய்மொழிகள்

ஆண்களின் மொழிகள் யாவும் ஒன்றுதான்
ஒரே நிறங்கள்
ஒரே வடிவங்கள்
ஒரே சத்தங்கள்
பல நிறங்களில் வேறுபடும்
இவற்றை போலல்ல
எங்கள் தாய்களின் மெல்லிசை மொழிகள் போலல்ல
எங்களின் தாய்மொழிகள்
அக்தாரியின் தொண்டையிலிருந்து வந்த வார்த்தைகள் போன்றவை
ஃபாத்திமாவிடம் கற்றுக் கொண்ட வழிகள் போன்றவை
அன்பின் உச்சம் போன்றது.

அவற்றை ஒவ்வொன்றாக பிடுங்கி
எல்லா வார்த்தைகளையும் சேர்த்து
இப்போது நாங்கள் ஒரு
புது தொடக்கத்தை எழுதுகிறோம்
எங்களுக்கே உரிய பரவசமான, வீரம் நிறைந்த
அறிவுக்கூர்மைகொண்ட, நகைச்சுவை ததும்பும்
நீண்ட தாய்மொழிகளில்


தமிழில் : ராஜசங்கீதன்

Poem : Sabika Abbas

সাবিকা আব্বাস একজন কবি, সংগঠক ও কথক। এসএএজি অ্যান্থোলজিতে তিনি সিনিয়র সম্পাদক রূপে কর্মরত এবং ফিয়ারলেস কালেক্টিভে তিনি মুভমেন্ট ও কমিউনিটি কর্মের কর্ণধার।

Other stories by Sabika Abbas
Editor : Pratishtha Pandya

কবি এবং অনুবাদক প্রতিষ্ঠা পান্ডিয়া গুজরাতি ও ইংরেজি ভাষায় লেখালেখি করেন। বর্তমানে তিনি লেখক এবং অনুবাদক হিসেবে পারি-র সঙ্গে যুক্ত।

Other stories by Pratishtha Pandya
Painting : Labani Jangi

২০২০ সালের পারি ফেলোশিপ প্রাপক স্ব-শিক্ষিত চিত্রশিল্পী লাবনী জঙ্গীর নিবাস পশ্চিমবঙ্গের নদিয়া জেলায়। তিনি বর্তমানে কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেসে বাঙালি শ্রমিকদের পরিযান বিষয়ে গবেষণা করছেন।

Other stories by Labani Jangi
Translator : Rajasangeethan

রাজাসংগীতন চেন্নাইবাসী লেখক। এক প্রখ্যাত তামিল খবরের চ্যানেলে সাংবাদিক হিসেবে কাজ করেন।

Other stories by Rajasangeethan