எல்லா தக்காளிகளையும் நீங்கள் உண்ணலாம். இலவசம். அதுவும் இந்த பருவத்தில் ஒரு பசுவாக இருந்தால் உங்களுக்கு நல்லது. பிற பருவங்களில் ஆடாக இருந்தால் உண்டு கொள்ளலாம்.

அனந்தபூரின் தக்காளி சந்தைக்கு அருகே இருக்கும் இப்பகுதியில்தான் விலை குறைந்த பழங்களும் காய்கறிகளும் கொட்டி வைக்கப்படுகின்றன. (தகவல் களஞ்சியத்தை பொறுத்தவரை பழங்களான தக்காளிகள் காய்கறியாகவும் கருதப்படுகிறது).  பக்கத்து கிராமங்களிலிருந்து விளைச்சலை கொண்டு வரும் விவசாயிகள் விற்கப்படாத தக்காளிகளை இங்கே கொட்டி விடுகின்றனர். இந்த பகுதியில் எப்போதும் ஆடுகள் மேயும். “ஆனால் மழைக்காலத்தில் ஆடுகள் தக்காளிகளை உண்டால், நோய் வந்துவிடும்,” என்கிறார் பி.கடிரப்பா. ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் புக்குராயசமுத்ரம் கிராமத்திலிருந்து ஆடுகளை இங்கு கொண்டு வரும் மேய்ப்பர் அவர்.

இங்கு ஓர் உண்மை வெளிப்படுகிறது. மாடுகளை காட்டிலும் ஆடுகள் மிகவும் மென்மையான உடல் கொண்டவை. நோய் வந்துவிடக் கூடும்.அனந்தபூரில் கடந்த சில தினங்களாக மழை பெய்து கொண்டிருப்பதால் ஆடுகளுக்கு மிகவும் பிடித்த தக்காளிப் பழங்களை உண்பதிலிருந்து அவை தடுக்கப்பட்டன. அவை அருகே இருக்கும் புற்கள் மற்றும் களைகளை மென்று கொண்டிருந்தன. அவ்வப்போது அவற்றுக்கு போட்டியாக இருக்கும் விலங்குகளை பொறாமையுடன் பார்த்துக் கொண்டன. தங்களின் ஆடுகள் உண்ணும் தக்காளிகளுக்கென மேய்ப்பர்கள் விவசாயிகளுக்கு பணம் எதுவும் கொடுப்பதில்லை. சில நேரங்களில் ஆயிரக்கணக்கான தக்காளிகள் ஒரு நாளில் கொட்டப்படுகின்றன.

அனந்தபூர் சந்தையில் தக்காளியின் விலை வழக்கமாக 20லிருந்து 30 ரூபாய்க்குள் இருக்கும். டவுனில் இருக்கும் ரிலையன்ஸ் கடையில் இன்னும் மலிவாக அவை கிடைக்கிறது. “ஒருமுறை கிலோ 12 ரூபாய் என்ற அளவுக்கு அவற்றை விற்றோம்,” என்கிறார் ரிலையன்ஸ் மார்ட்டில் வேலை பார்க்கும் ஒருவர். “அவர்களுக்கென தனி விற்பனையாளர்கள் இருக்கின்றனர்,” என ரிலையன்ஸ்ஸை பற்றி சொல்கிறார் ஒரு காய்கறி வியாபாரி. “ஆனால் நாங்கள் காய்கறி சந்தையில்தான் வாங்குவோம். அழுகிப்போய் மிஞ்சுவதை கடைசியில் தூக்கிப் போட்டுவிடுவோம்.”

This field near the Anantapur tomato market yard serves as a dumping ground when prices dip
PHOTO • Rahul M.

அனந்தபூர் தக்காளி சந்தைக்கு அருகே இருக்கும் இந்த இடத்தில்தான் விலை சரியும்போது  தக்காளிகள் கொட்டபப்டுகின்றன

அந்த விலையில்தான் வாடிக்கையாளர்கள் சந்தையில் தக்காளியை வாங்குகின்றனர். விவசாயிகளுக்கோ அடிமாட்டு விலைதான் கிடைக்கும். வந்து சேரும் நேரம் மற்றும் வகை சார்ந்து ஒரு கிலோ தக்காளிக்கு 6 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரை கிடைக்கும். அதிக விலை கிடைப்பது மிகவும் அரிது. அந்த விலையும் ஒன்றிரண்டு நாளுக்கு கூட தாக்குப்பிடிக்காது. விவசாயிடமிருந்து இருக்கும் தூரத்தை பொறுத்து விற்பனையாளர்களின் விலை மாறுகிறது. அதிக அபாயம் விவசாயிக்குதான். அப்பகுதியில் இருக்கும் தக்காளிகளை பல்வேறு வழிகளில் கையகப்படுத்தும் கார்ப்பரெட்களுக்கும் அபாயம் மிகக் குறைவு.

ஒரு வணிகர் ஒரு முறை ஒரு ட்ரக் தக்காளிகளை 600 ரூபாய்க்கு வாங்கினார். விலை சரிந்ததும் சந்தைக்கருகேயே விற்றார். “பத்து ரூபாய் கொடுத்து எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்,” என வாங்கியவர் கூவிக் கொண்டிருந்தார். உங்களிடம் இருக்கும் பை சிறியதாக இருந்தால்தான் அவருக்கு நல்லது. பெரியதாக இருந்தால் 20 ரூபாயை கொடுத்து நிரப்ப முடிந்த அளவுக்கு நிரப்பிக் கொள்ளலாம். அவருக்கு அன்று நல்ல வியாபாரம் ஆகி இருக்கும் என நம்புகிறேன்.

இந்த புகைப்படத்தை நான் எடுத்த நாளன்று அனந்தபூர் நகரத்தில் இருந்த வியாபாரிகள் அவர்களின் தக்காளிகளை கிலோவுக்கு 20லிருந்து 25 ரூபாய் வரை விற்றுக் கொண்டிருந்தனர். ரிலையன்ஸ் மார்ட் ஒரு கிலோவின் விலையை 19 ரூபாய் என நிர்ணயித்தது. இங்குள்ள கடை அலமாரிகளில் நெஸ்ட்லே, இந்துஸ்தான் லிவர் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் தக்காளி குழம்பு பாக்கெட்டுகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. அனந்தபூரில் தக்காளி சார்ந்த பொருட்களை லாபகரமாக விற்பவர்கள் இத்தகைய பன்னாட்டு நிறுவனங்களாகத்தான் இருக்கும். இத்தகைய குழம்பு மற்றும் சாறு வகைகள் அநேகமாக (அரசின் ஆதரவு கொண்ட) சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தயாரிக்கப்பட்டிருக்கலாம்.

களத்தில் இருக்கும் தக்காளி விவசாயிகளுக்கு ஆதரவு கிடைத்தால் நன்றாக இருக்கும். ஆனால் கிடைப்பதில்லை. இவற்றுக்கிடையில் விலைகள் சரிந்தால், ருசியான உணவு கிடைப்பதில் மாடுகளுக்கு கொண்டாட்டம்தான்.

தமிழில் : ராஜசங்கீதன்

Rahul M.

রাহুল এম. অন্ধ্র প্রদেশের অনন্তপুর জেলায় স্বাধীনভাবে কর্মরত একজন সাংবাদিক। তিনি ২০১৭ সালের পারি ফেলো।

Other stories by Rahul M.
Translator : Rajasangeethan

রাজাসংগীতন চেন্নাইবাসী লেখক। এক প্রখ্যাত তামিল খবরের চ্যানেলে সাংবাদিক হিসেবে কাজ করেন।

Other stories by Rajasangeethan