மயூர் விகார் முதல் தொகுதிக்கு அருகில் உள்ள ஒரு நகர்ப்புற கிராமம்தான், சில்லா காதர். இங்கிருக்கும் ஏராளமான குடும்பங்கள் ரிக்சா ஓட்டுதல், வீட்டுவேலை, சாலைத்துப்புரவு, மண்டியில் காய்கறிவிற்பனை ஆகிய தொழில்களைச் செய்கின்றனர். மின்னாக்கி எந்திரங்கள், குழாய்க் கிணறுகளின் தயவால் வண்டியோட்டுகின்றனர். அரசாங்கம் இன்னும் அவர்களுக்கு மின்சாரத்தையும் குடிநீரையும் வழங்கவில்லை என அப்பகுதியினர் கூறுகின்றனர். அவர்களின் பிள்ளைகள் திறந்தவெளிப் பள்ளிகளிலோ அல்லது அரைகுறைக் கூரை கொண்ட குடிசைகளில்தான் படிக்கின்றனர்; காரணம், அரசாங்கப் பள்ளியானது அதிக தொலைவிலும் அந்த அளவுக்குப் போவதற்கு சரியான சாலைவசதிகூட இல்லை என்பதுதான்!
அவர்களுக்கு தனிப்பட்டவகையில் இடர்பாடு இருந்தபோதும் நாடு முழுவதுமிருந்து வரும் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒன்றிணைந்தனர். விவசாய நெருக்கடியைப் பற்றி விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தில் 21 நாள் சிறப்புக்கூட்டத்தை நடத்தவேண்டும் என வலியுறுத்தி இன்றும் நாளையும் டெல்லியில் பேரணி நடைபெறவுள்ளது. சில்லா காதர் பகுதி மக்களின் குரலை உற்றுநோக்குவோம்!