அல்லும் பகலும் அயராமல் உழைக்கின்றனர் தமாஷா சுற்றில்
உத்திரப் பிரதேச கிராமங்களில் இருந்து வந்திருக்கும் தொழிலாளர்களுக்கு கிராமப்புற மகாராஷ்டிராவில் தமாஷா குழுக்களுடன் பயணிக்கும் வேலை, நிலையானதாக இருந்தாலும் கடினமானதாக இருக்கிறது, உணவு மற்றும் ஓய்வு நேரங்களும் ஒழுங்கற்றவையாக இருக்கிறது. ஆனால் இந்த வேலையைச் செய்வதன் மூலம் அவர்கள் தங்கள் வீட்டுச் செலவிற்கு பணத்தை மிச்சம் செய்ய முடிகிறது