மக்கள் என் மாமனாரிடம், ‘உங்கள் வீட்டிலிருந்து ஒரு பெண் வெளியில் சென்று பணம் சம்பாதிக்கப் போகிறாளா?’ என்று கேட்பார்கள், நான் நகரத்தின் மகள் இல்லை. எனவே எனக்கு விதிகள் கடுமையானவை,” என்கிறார் பாத்திமா பீபி.
கறுப்பு நிற நிகாபை கழற்றி, முன் கதவின் அருகே ஒரு ஆணியில் தொங்கவிட்டு, பேசிக்கொண்டே தன் வீட்டிற்குள் நுழைகிறார் ஃபாத்திமா. "நான் ஒரு இளம்பெண்ணாக இருந்தபோது, எனது இயங்குவெளி சமையல் மற்றும் வீட்டை நிர்வகித்தல் என்று நினைத்தேன்," என்று அவர் நினைவுகூர்ந்து சிரிக்கிறார். "நான் ஏதாவது முயற்சி செய்ய முடிவு செய்தபோது, வெளியே சென்று என் வாழ்க்கையில் ஏதாவது செய்ய என் குடும்பத்தினர் எனக்கு எல்லா சுதந்திரத்தையும் கொடுத்தனர். நான் ஒரு இளம் முஸ்லீம் பெண்ணாக இருக்கலாம். ஆனால் நான் முயற்சித்துப் பார்க்கவென எந்த விஷயமும் இருக்கவில்லை,” என்கிறார் 28 வயது நிரம்பியவர். மதிய வெளிச்சத்தில் அவரது வெள்ளை துப்பட்டாவில் வெள்ளித் துணுக்குகள் மின்னுகின்றன.
பாத்திமா உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் (முன்னாள் அலகாபாத்) மாவட்டத்தில் உள்ள மஹேவா நகரில் வசிக்கிறார். அங்கு வாழ்க்கையின் வேகம் பெரும்பாலும் அருகிலுள்ள யமுனையின் அவசரமற்ற ஓட்டத்தை பிரதிபலிக்கிறது. கால்களுக்குக் கீழே ஒரு புல் வளர விடமாட்டார். இன்று அவர் ஒரு திறமையான கைவினைஞர் மற்றும் கைவினைத் தொழில்முனைவோராக இருக்கிறார். நாணல் புல்லின் நீண்ட வெளிப்புற இலைகளிலிருந்துத் தயாரிக்கப்பட்ட பல்வேறு வீட்டுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறார்.
ஒரு இளம் பெண்ணாக, பாத்திமாவுக்கு என்ன செய்வது என்று எப்போதும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் முகமது ஷகீலுடனான திருமணம் அவரை மஹேவாவிற்கும் அனுபவமிக்க நாணற்புல் கைவினைஞரான அவரது மாமியார் ஆயிஷா பேகத்தின் வீட்டிற்கும் கொண்டு வந்தது.














