அமராவதியிலுள்ள அரசு மருத்துவமனையும், மேற்கு விதர்பாவின் மாவட்ட தலைநகரும் 2017 பிரச்சனையை சமாளித்து, அதிலிருந்து கோலினெஸ்டெரேஸ் சோதனையை செய்யத் தொடங்கினார்கள். அசிடைல் கொலைன் என்னும் நியூரோட்ரான்ஸ்மிட்டரை சரியாக செயற்பட உதவுவதுதான் கோலினெஸ்டெரேஸ். ஆர்கனோபாஸ்பேட் விஷத்தன்மை என்பது கோலினெஸ்டெரேசை முடக்கி, முக்கிய உறுப்புகளை இயங்காமல் செய்து, நரம்பு மண்டலத்தை முடக்கி மரணத்தை ஏற்படுத்தும். அமராவதி மருத்துவமனையில் அதற்கு எதிரான மாற்றுகள் இருப்பதாக சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்திருக்கிறது.
யாவத்மாலின் இரு டெசில் தலைநகரங்களிலும், அதாவது வனி மற்றும் புசாதின் துணை மாவட்ட மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்படவேண்டும் என்று விசாரணைக் குழு பரிந்துரைத்திருக்கிறது. யாவத்மால் அரசு மருத்துவமனையின் 30 படுக்கை கொண்ட அவசர சிகிச்சைப் பிரிவுடன், அகோலா மாவட்ட அரசு மருத்துவமனையிலும், அமராவது மருத்துவமனையைப் போலவே பூச்சிக்கொல்லி விஷம் தொடர்புடைய அவசர நிலையில் கையாள்வதற்காக பரிந்துரைக்கப்பட்டது.
அம்மாவட்டத்தின் தொடர்ச்சியான விஷ மரணங்களை கணக்கில் கொண்டு, யாவத்மால் அரசு மருத்துவமனையில், டாக்ஸிகாலகி ஆய்வகம் தொடங்க பரிந்துரைக்கப்பட்டது. 2017 சம்பவத்தின்போது, சுகாதார அலுவலர்கள் ரத்த மாதிரிகளை விரைந்து டாக்ஸிகாலகி பரிசோதனைகளுக்கு அனுப்பவில்லை. விஷ மரணங்கள் தொடர்பான விஷயத்தின் மோசமான மேலாண்மையில் இது மிக முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
மோனோக்டோஃபோக்களை தடை செய்யவேண்டும். மாற்று மருந்துகளை தயார்நிலையில் வைக்கவேண்டும்.
மோனோக்ரோடோஃபோக்களின் மீது முழுமையான தடையைக் கோரியிருக்கிறது சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கை. மனிதர்கள் மற்றும் பறவைகள் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும், பயிர்களின் செயல்பாட்டைத் தடுத்தும் நிறுத்துகிறது. பல நாடுகளில், மோனோக்ரோடோஃபோக்கள் தடைசெய்யப்பட்டுவிட்டன.
மஹாராஷ்ட்ர அரசு, இதன் விற்பனைக்கு 60 நாட்களுக்கான தடையை விதித்தது. முழுத்தடை அறிவிக்கப்படவில்லை. பூச்சிக்கொல்லி சட்டத்தைப் பொறுத்தவரை, மொத்தமாக மோனோக்ரோடோஃபோஸை தடை செய்வதற்கு மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது.
இத்தகைய பூச்சிக்கொல்லி உற்பத்தியாளர்களுக்கும், விற்பனை செய்பவர்களுக்கும் புதிய உரிமம் வழங்காமலும், உரிமத்தை புதுப்பிப்பதை ரத்து செய்தும் மாநில அரசு உத்தரவிடலாம். ஜனவரி 2018-ந் இறுதியில், 20 பூச்சிக்கொல்லி நிறுவனங்களுக்கு புதிய உரிமம் வழங்காமல் இருக்க முடிவெடுத்தது. சர்வதேச உணவு மற்றும் விவசாய நிறுவனம் கூறியிருப்பதைப் போல அபாயகரமானது என அறிவிக்கப்பட்ட மோனோக்ரோடோஃபோஸும் அதில் அடக்கம். கேரளாவும் இதைத் தடை செய்திருக்கிறது. சிக்கிம் எந்த வேதியியல் பூச்சிக்கொல்லி மருந்தையும் அனுமதிப்பதில்லை.
பூச்சிக்கொல்லிகளுக்கு தகுந்த மாற்றுகள் இல்லையென்றால் அதைப் பயன்படுத்த மாநில அரசு அனுமதிக்ககூடாது என்றும் சிறப்பு விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளது. செடி வளர்ப்பில் இத்தகைய வேதியியல் தெளிப்புகள் திடீரென அதிகமாகி இருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கும் இக்குழு, நீண்ட நாள் நோக்கில் ஒரு விஞ்ஞான சோதனையை நடத்தி பூச்சிக்கொல்லிகளை அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.
விவசாய விரிவாக்க அமைப்பின் முழு பிரிவுகளைக் குறித்து இந்த அறிக்கை குறிப்பிடவில்லை - விவசாயப் பல்கலைக்கழகங்களும், மாநில விவசாயத் துறையும் புதிய பூச்சிக்கொல்லி வரவுகளைப் பற்றியும், பூச்சிக் கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்தைக் குறித்தும் எந்த தரவுகளும் வைத்துக்கொள்வதில்லை. முறைப்படுத்தினால்,இவர்கள் முக்கிய செயலாற்றக் கூடியவர்கள்.
இவர்களை நம்ப வேண்டிய விவசாயிகளோ, பூச்சிக்கொல்லி வரவுகளைக் குறித்து கடைக்காரரிடம், விற்பனையாளரிடம் தெரிந்துகொள்கிறார்கள். விற்பனைக்காக அவர்களும் ஆபத்தை விளக்காமல் விட்டுவிடுகிறார்கள். "புதிய பூச்சிக்கொல்லிகளில் கலக்கும் வீரியமான வேதியியல் பொருட்கள், விஷத்தன்மையையும், ஈரம் நிறைந்த சூழலில் மரணம் தரும் விஷத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது" என்று அறிக்கை கூறுகிறது.