நவம்பர் மாத பெளர்ணமி அன்று இரவு 9 மணி. பழவேற்காடின் முகத்துவாரம் அமைதியாக இருக்கிறது. நீரோட்டத்தின் வழியாக ஒரு நீல நிற படகு கடலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
படகில் சரத் குமார், அருண் குமார் மற்றும் செவித் குமார் ஆகியோர் இருக்கின்றனர். ஏழு மரக் கழிகள் அவர்களின் காலடியில், நைலான் வலைகள் சுற்றப்பட்டு கிடக்கின்றன. கடலோரத்திலுள்ள தொனிரெவு கிராமத்தில் வசிக்கும் அவர்கள் பால்யகாலத்தில் இருந்து மீன்பிடித்து வருகின்றனர்.
கடலோரத்தில் வளர்ந்தவன் என்றாலும் கடலுக்குள் செல்லும் விருப்பம் கொண்டவன் என்றாலும் தனி பெற்றோரான என் தாய், என் சகோதரி மற்றும் என் பாதுகாப்பு குறித்த கவனம் கொண்டவர். எனவே நாங்கள் கடலுக்கு செல்ல முடியாது.
16 வயதில் முதன்முறையாக பழவேற்காடுக்கு சென்றிருக்கிறேன். சென்னை காலநிலை குழுவால் ஒருங்கிணைக்கப்பட்டு புகைப்பட பத்திரிகையாளர் பழனி குமாரால் நடத்தப்பட்ட புகைப்பட பயிற்சி பட்டறைக்கு நான் சென்றிருந்தேன். கடலோரத்தை வசிப்பிடமாக கொண்ட மக்களின் வாழ்க்கைகள் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டிருந்தேன்.



























