“தேர்வுக்கு தயாராக வேண்டியது எங்களின் கடமை. வினாத்தாளின் பாதுகாப்பை உறுதி செய்வது அதிகாரிகளின் பொறுப்பு,” என்கிறார் கோபமாக அன்ஷு குமாரி.
24 வயதாகும் அவருக்கு போட்டித் தேர்வுகள் தரும் அழுத்தங்கள் தெரிந்திருக்கிறது. பள்ளியில் ஆசிரியராக இருக்கும் அவர், அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுக்கு தயாராகியபடியே திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பி.எட்.டும் படித்து வருகிறார்.
2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில், அரசு வேலை கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் வங்கி போட்டித் தேர்வுகளில் பங்கேற்றார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. எனவே அவர் ஆசிரியர் பணிக்கு திரும்பினார். இரவுகளில் ஆசிரியர் தேர்வுகளுக்காக படிக்கிறார்.













