குஜராத்தின் ஜூனாகத் மாவட்டம், மங்குரோல் வட்டம், சரிவாடா கிராமத்தில் கரடுமுரடான சாலைகளில் சக்கடா அமைதியான போக்குவரத்தை நடத்தி வருகிறது. இந்த வாகனங்களை குஜராத்தின் கச் அல்லது கிராமப்புற சவுராஷ்டிராவில் அடிக்கடி பார்க்கலாம். மாநிலத்தின் கிராமப்புற பகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு குறைந்த செலவிலான போக்குவரத்தை இது உறுதி செய்கிறது
T


JÅ«nÄgadh, Gujarat
|TUE, NOV 25, 2025
மேற்கு இந்தியாவின் கிராமப்புற வண்டிகள்
பாதி மோட்டார் சைக்கிளும், பாதி மாட்டு வண்டியின் பகுதியையும் கொண்டது தான் ‘சக்கடா’ வாகனம். சவுராஷ்டிராவில் இந்த இணைப்பு வாகனத்தை தவிர்க்க முடியாது
Author
Translator

Gurpreet Singh
டீசலில் இயங்கும் புல்லட்டின் எஞ்சின் கொண்டு முன்பக்கம் மோட்டார் சைக்கிளும், பின்பக்கம் மாட்டு வண்டியும் இணைக்கப்பட்டுள்ளது

Gurpreet Singh
இந்த உள்ளூர் இணைப்பு வண்டி தனித்துவமான வடிவம் மற்றும் அளவைத் தாண்டி பல வகைகளில் உதவுகிறது. பயணிகளை சுமந்து செல்வதோடு விவசாயம் மற்றும் விவசாயம் சாராத உற்பத்தி பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்லவும், குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்துச் சென்று வரவும் உதவுகிறது

Gurpreet Singh
ஏதேனும் எடுத்துச் செல்ல வேண்டுமா? இந்த சக்கடாவை கிக் அல்லது கயிறு கொண்டு ஸ்டார்ட் செய்தால் தனித்துவமான சத்தத்துடன் அது ஓடத் தொடங்கிவிடும்

Gurpreet Singh
1980-கள் வரை சவுராஷ்டிராவின் கிராமப்புறங்கள் பாரம்பரிய மாட்டு வண்டிகளையே நம்பியிருந்தன. ஒருமுறை உள்ளூர்காரர் ஒருவரால் ஜாம்நகர் மகாராஜாவின் கோல்ஃப் வண்டியை மறுவடிவமைப்பு செய்தபோது இந்த வண்டி உருவானதாக கூறப்படுகிறது. இப்படித்தான் கிராமப்புற சவுராஷ்டிரா சாலைகளை சக்கடா ஆக்கிரமிக்க தொடங்கியது

Gurpreet Singh
குறைந்த உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்லவும், வசதி படைத்த டிரக்குகளுக்கு செலவு செய்ய முடியாதவர்களுக்கும் சக்கடா கை கொடுக்கிறது. ஆனால் சக்கடாவில் அதிகளவில் தேங்காய், வைக்கோல், உரங்கள், காய்கறி சரக்குகளையும், பயணிகளையும் சுமந்து செல்ல முடியும். இந்த வண்டி இன்னும் எவ்வளவு பாரத்தை தான் சுமக்கும் என்ற வியப்பு உங்களுக்கு ஏற்படும்…

Gurpreet Singh
சக்கடாவில் ரூ.5 முதல் ரூ.20 வரை கொடுத்து பயணிக்கலாம். நீங்கள் அடுத்தமுறை சவுராஷ்டிரா சென்றால், இந்த வண்டியில் செல்லுங்கள். உள்ளூர் போக்குவரத்தின் அங்கமாக இது இருக்கிறது. சக்கடா வண்டியின் பயங்கரமான பயணத்தை நீங்கள் தவற விடாதீர்கள்
தமிழில்: சவிதா
Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]
Donate to PARI
All donors will be entitled to tax exemptions under Section-80G of the Income Tax Act. Please double check your email address before submitting.
PARI - People's Archive of Rural India
ruralindiaonline.org
https://ruralindiaonline.org/articles/wheels-of-rural-indian-west-ta

