”முகமூடிகளுக்கு பின் முகங்களை நாங்கள் மறைத்திருப்பதற்கு காரணம் என்னட் தெரியுமா? எங்களின் வலியை அவற்றின் பின்னால் மறைத்துக் கொள்கிறோம்,” என்கிறார் ஷியாமல் மன்னா, வடக்கு 24 பர்கானாஸிலுள்ள தத்தாபுகூருக்கு அருகே உள்ள கிராமத்திலிருந்து வந்திருக்கும் ஷியாமல் மன்னா. “கோபத்தால்தான் இங்கு நாங்கள் வந்திருக்கிறோம்.”
காக்ரோச் ஜனதா கட்சியின் அழைப்பில் ஒன்று கூடிய கூட்டம் நாடு முழுக்க வேகம் பெற்றிருக்கிறது. கொல்கத்தா போராட்டத்தில் வழக்கமான மீம்கள் மற்றும் போஸ்டர்களை தாண்டி பல இளைஞர்கள் ஐயன் மேன், சூப்பர் மேன் மற்றும் பல சினிமா சூப்பர்ஹீரோக்களின் முகமூடிகளை அணிந்து வந்திருந்தார்கள்.
ஜூலை 24 அன்று பிற்பகல் 2.45 மணிக்கு கொல்கத்தா பேரணி சீல்தா ரயில் நிலையத்தில் தொடங்கி எஸ்பலனேடை நோக்கி சென்றது. லட்சக்கணக்கானோர் திரண்டதாக உள்ளூர் செய்தித்தாள்கள் குறிப்பிட்டன. மாலை 6 மணிக்கு, போராட்டக்காரர்களுக்கும் கொல்கத்தா காவல்துறைக்கும் சிறு மோதல் ஏற்பட்டு நீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.


















