பட்டியல் சாதியான மெக்வால்சமூகத்தை சேர்ந்தவர் அவர். பாரம்பரியமாக அவர்கள் கால்நடைகளை வளர்த்து, உடைகளையும் போர்வைகளையும் நெய்து வருகின்றனர். ஆனால் பலநூற்றாண்டு கால சாதியபாரபட்சத்தால், அச்சமூகத்தின் வளர்ச்சியும் படிப்பறிவும் மட்டுப்படுத்தி குறைந்தஅளவில் வைக்கப்பட்டிருக்கிறது.
விமலாவின் கணவரான 36 வயது கன்வர்லால், 32 வயது சகோதரரான போஜராமைபோலவே படிப்பை நிறுத்திவிட்டு, உடன் பிறந்தோருக்கு கல்விகிடைக்கும் பொருட்டு உப்புச்சுரங்க வேலை பார்த்தனர். நிலமற்ற தலித் விவசாயியான கன்வர்லால் தற்போது குத்தகைக்கு எடுத்திருக்கும் 40 பிகா நிலத்தில்கம்பு, வெந்தயம் மற்றும்கடலை போன்றவற்றை விளைவிக்கிறார். நிலையற்ற மழைப்பொழிவு, பஞ்சம், பயிர் விளைச்சலின்மை, குறைந்த அறுவடை போன்றவற்றால் ஃபாலோதியில் விவசாயம் பார்ப்பதேசவாலான காரியம்தான்.
வருடத்துக்கு 200 மில்லிமீட்டர் மழைபொழியும் இந்த வறண்டபகுதியில் நீர் என்பதுகிடைப்பதற்கு அரிதான, விலைமதிப்பற்ற பொருள்ஆகும். பாத்திரங்களிலுள்ள அழுக்கை நீக்கவிமலா பயன்படுத்தும் சிலசொட்டு நீரும், வீடருகே இருக்கும்நிலத்தடி நீர்நிலையான தங்காவிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.
சமீபத்திய ஆழ்துளை கிணறுகள்மற்றும் நீர் பிடிப்புபகுதிகள் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் தார் பாலைவனத்தில் நீர்பஞ்சத்தை எதிர்கொள்ள தங்காஒரு பிரபலமான உத்திஆகும். மத்திய வறண்டமண்டல ஆய்வு நிறுவனம் 19880ல் வெளியிட்ட கையேட்டின்படி, இப்பகுதியின் வாதி கமெலான் கிராமத்தை சேர்ந்தராஜா சுர்சிங்கால் 1607ம் ஆண்டில்தங்கா கட்டப்பட்டிருக்கிறது. பிறகு 1759ம் ஆண்டில், மகாராஜா உதய்சிங்கால் ஜோத்பூரின் மெரான்கர் கோட்டையில் ஒன்றுஅமைக்கப்பட்டது. ஆனால் 1895-96ம் ஆண்டின்பெரும்பஞ்சத்தின்போதுதான் பெருமளவில் தங்காஇப்பகுதியில் அமைக்கப்பட்டது.
“கூரையிலிருந்து வடியும் மழைநீரை சேகரிக்க தங்காக்கள் பயன்பட்டன. அவை சிமெண்ட், கான்க்ரீட் மற்றும் கல்ஆகியவற்றா கட்டப்பட்டன. மேற்கு ராஜஸ்தானில் பரவலாக பயன்படுத்தப்பட்டன,” என்கிறார் விமலாவின்உறவினரான 19 வயது பத்ரிநாராயண் செளஹான். “10 அடி அகலம்மற்றும் 20 அடி நீளத்தில்கட்டப்படும் தொட்டியில் 56,000-லிருந்து 58,000 லிட்டர் நீர்சேகரிக்கப்படும். அதை கட்ட 50-80,000 ரூபாய் ஆகும்.”
விமலாவின் குடும்பத்துக்கு இரண்டு தங்காக்கள் இருக்கின்றன. 2001ம் ஆண்டில்கட்டப்பட்ட பழைய தங்கா, மழை நீர் சேகரிக்கிறது. பிறகு அமைக்கப்பட்ட பெரியதங்கா, வீட்டுத் தேவைகளுக்காக 60,000 லிட்டர் நீரை பிடித்துவைக்கிறது. குடும்பம் வாங்கும்தாங்கிகளிலிருந்து நீர் பெரியதங்காவில் நிரப்பப்படுகிறது. 5,000 லிட்டர் நீருக்கு 500 ரூபாய் வரை ஆகும். இந்தியாவின் நீண்ட கால்வாயானஇந்திரா காந்தி கால்வாய்க்கு அருகே இருக்கும் வடிகட்டும் மையத்தில் இருந்து நீர்தாங்கிகள் நீரை கொண்டுவருகின்றன. சட்லஜ் மற்றும்பீஸ் ஆறுகள் சந்திக்கும் பஞ்சாபின் ஹரிகே தடுப்பணையிலிருந்து கால்வாய்க்கு நீர் வருகிறது.