"இந்த அரசின் கண்களுக்கு சுந்தரவனத்தின் காடுகள் மட்டுமே தெரிகின்றன. அங்கு வாழும் மக்கள் அவர்களின் கண்களுக்குப் புலப்படுவதில்லை," என்கிறார் கீதா ம்ரிதா. மீனவரான அவரின் கணவர் பிப்ரவரி 2012ல் புலியால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இழப்பீடுக்கான சாத்தியம் இருந்தும் தனக்கு எதுவும் வழங்கப்படவில்லை என்கிறார் கீதா. புலிகளின் தாக்குதலில் கணவர்களை இழந்த பல பெண்களும் அந்த கிராமத்தில் இழப்பீடு பெறவில்லை என்கிறார்.
“ஆனால் வாக்கு கேட்க மட்டும் தவற மாட்டார்கள்," என்கிறார். தேர்தலில் வாக்களித்துள்ள அவர், "ஒரு குடிமகளாக என் கடமையைச் செய்தேன்," என்கிறார். அவர் சுந்தரவனத்தில் உள்ள ரஜத் ஜூப்ளி என்னும் கிராமத்தில் வசிக்கிறார்.













