10,000 பெறுவதற்காக லிம்பாஜி லோகன்டே ரூ.1000-க்கு மேல் செலவழித்துவிட்டார். “ஒருமுறை ஆட்டோவில் சென்றுவர 20 ரூபாய் செலவாகிறது,” என்றும் தனது பொர்வாண்ட் கிராமத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் பர்பானி நகரில் உள்ள வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்தல் குழு மையத்திற்கு (APMC) சென்று வருவதை 42 வயது விவசாயி விளக்குகிறார். “ஒரு நாளுக்கு 40 ரூபாய் ஆகிறது. கூடுதலாக நீங்கள் மதிய உணவு, தேநீருக்கும் செலவிட வேண்டும். நான் இங்கு 15 நாட்களாக வருகிறேன். இது பெரும் போராட்டம்.”
மகாராஷ்டிராவில் ஜூன் 1ஆம் தேதி தொடங்கிய விவசாய போராட்டத்தின் விளைவாக இடைக்கால நிவாரணமாக ரூ.10,000 அறிவிக்கப்பட்டது. ஜூன் 14ஆம் தேதி முதலமைச்சர் தேவேந்திர ஃபத்நாவிஸ் இதை அறிவித்தார். கடன் தள்ளுபடிக்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன என்றாலும் சம்பா பருவ சாகுபடிக்கு செலவிட்டவர்களுக்கு உடனடி நிவாரண தொகையாக ரூ.10,000 வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
உற்பத்தி செலவை ஈடுகட்டும் குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் 50 சதவீதம் வழங்க வேண்டும் என்ற சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்துவதுடன், கூடுதலாக ஒட்டுமொத்த கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் ஆகியவை ஜூன் போராட்டத்தின் போது, விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளாகும். விவசாயிகளின் துயரம் குறித்து ஆய்வு செய்ய எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான ஆணையத்தின் விரிவான அறிக்கை 2007ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசிடம் கிடப்பில் உள்ளது.
கடன் தள்ளுபடி, பிரதமரை சந்தித்து உற்பத்தி செலவை பரிசீலிப்பது என ஃபத்நாவிஸ் விவசாயப் பிரநிதிகளை சந்தித்து உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. முந்தைய கடன்களை தீர்க்காத விவசாயிகளுக்கு புதிய கடன்களை வழங்க வங்கிகள் மறுத்ததால் தற்காலிக நிவாரண உதவித்தொகையாக ரூ.10000 வழங்க மாநில அரசு முன்வந்தது.


