லக்ஷ்மன் பைதாவின் மைத்துனர். இவரது மனைவி உடல்நிலை சரியில்லை என்று கூறியதும், அவர் உடனடியாக ரயிலில் ஏறி வீட்டிற்கு விரைந்தார்.
50 வயதான, புலம்பெயர்ந்த தொழிலாளியான இவர், பீகாரில் இருந்து ஆந்திராவிற்கு கல் வெட்டும் தொழிற்சாலையில் வேலை செய்ய அடிக்கடி பயணம் செய்பவர். தனது மனைவியின் உடல்நிலை சரியில்லை என்று அறிந்ததும், முன்பதிவின்றி, ரயில் டிக்கெட்டை மட்டும் வாங்கிக் கொண்டு கிளம்பினார். 2,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் இருந்த மேற்கு சம்பாரண் மாவட்ட ஜிம்ரி கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்குச் செல்ல அவருக்கு இரண்டு நாட்கள் ஆனது.
ஒரு வழியாக வீடு திரும்பியவருக்கு, மனைவியின் உடல்நிலை சற்று தேறியிருந்தது நிம்மதி. ஆனால் அவரது மனைவி அவரைக் கண்டதும் கட்டிப்பிடித்து அழ துவங்கிவிட்டார். “எனக்கு எதுவும் புரியவில்லை. என் மனைவியிடம் அழுவதற்கான காரணத்தை கேட்டேன்,” என்று சம்பவத்தை நினைவு கூருகிறார் லக்ஷ்மன்.
“நம் மகன் ராஜ்குமாரை, புலி கொன்றுவிட்டது,” என்று சந்தாவதி தேவி அவரிடம் கூறியதும், அவர் உடைந்து விட்டார். 47 வயதான அவர் மனைவி செய்தி அறிந்ததுமே மயங்கி விழுந்து விட்டார். அதனால் அவரது கணவரை வரவழைக்க வேண்டியிருந்தது.






