எங்கள் குழுவில் இருந்த எட்டுப் பேர்களும் நூல்களை ஆச்சரியத்துடன் பார்வையிடுகின்றனர். ஒவ்வொரு புத்தகமும் இலக்கியமாக கிளாஸிக்காக அரசியல் சார்ந்து இருந்தன. மர்மக் கதைகளோ அல்லது மலிவு நூல்களோ இல்லை. அதில் சிலப்பதிகாரத்தின் மலையாள மொழிபெயர்ப்பும் இருந்தது. மற்றும் வைக்கம் முகம்மது பஷீர், எம்.டி.வாசுதேவன் நாயர், கமலாதாஸ் போன்றோர்களின் புத்தகங்களும் இருந்தன. மகாத்மா காந்தியின் புத்தகத்தோடு, பிரபலமான தோப்பில் பாஷீஸ் உடைய நூலான `நீங்கள் என்னை ஒரு கம்யூனிஸ்ட் ஆக்கிவிட்டீர்கள் 'என்ற நூலும் இருந்தது.
வெளியில் வந்து அமர்ந்தபடி நாங்கள், "இதுபோன்ற புத்தகங்களை எல்லாம் இங்கிருப்போர் படிக்கிறார்களா?’’ என்று கேட்டோம். மற்ற ஆதிவாசிகளைப் போல முத்தவான்களும் இந்தியாவில் குறைந்தளவு கல்வித்திறனைக் கொண்டவர்கள். சின்னத்தம்பி பதில்சொல்லும்விதமாக நூலக பதிவுப் புத்தகத்தை புரட்டுகிறார். இது, இங்கிருந்து நூல்களை எடுத்துச்செல்வதும் பின் திருப்பித் தருவதற்குமான பதிவுப் புத்தகமாகும். இப்பகுதியில், மொத்தம் இருபத்தைந்து குடும்பங்கள் இருக்கலாம். ஆனால், 2013ல் 37 புத்தகங்கள் எடுத்துச்செல்லப்பட்டிருக்கின்றன. அது, 160 புத்தகங்களில் ஏறத்தாழ நாலில் ஒரு பங்கு. இந்த நூலகத்தில் சேர ரூ.25 கட்டணம். பிற்பாடு மாதத்துக்கு 2 ரூபாய். அதாவது, புத்தகங்கள் எடுக்கும்போதும்கூட வேறெந்தக் கட்டணங்களும் கிடையாது. கறுப்பாக, சர்க்கரையற்ற டீயும் இலவசம். மக்கள் களைப்பாக இங்கே வருவார்கள். மற்றபடி பிஸ்கெட், மிக்ஸர் மற்றும் இதரப் பொருட்களை காசு கொடுத்து வாங்க வேண்டும். சிலநேரங்களில் வருபவருக்கு ஒரு சாப்பாடுகூட இலவசமாகக் கிடைக்கும்.
நூல்களை கடன் வழங்கும், திரும்பப்பெறும் தேதிகள் மற்றும் அவற்றை எடுத்துச் செல்வோரின் பெயர்கள் எல்லாம் படு கோர்வையாக அதில் எழுதப்படுகின்றன. இளங்கோவின் சிலப்பதிகாரம் ஒன்றுக்கு மேற்பட்ட தடைகள் எடுத்துச் செல்லப்பட்டன. முன்னமே, இந்த வருடம் பல புத்தகங்கள் எடுத்துச்செல்லப்பட்டிருக்கின்றன. இந்த அடர்ந்த காட்டில் ஆதிவாசிகள் குழுக்கள் இலக்கியத்தில் வாழ்கின்றன. நான், என் வாழ்விடத்தில் படிக்கிற பழக்கத்தை எண்ணி மனம் புழுங்கினேன்.
எங்கள் குழுவிலிருந்த சிலருக்கு வாழ்க்கையே எழுதுவதுதான். அவர்களின் ‘தான்’ என்ற கர்வம் படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்தது. எஸ்.விஷ்ணு என்பவர் இளைஞர். கேரளா நிருபர் சங்கத்தைச் சேர்ந்த எங்களுடன் வந்திருந்த மூன்று நிருபர்களில் ஒருவர். அவர், அந்த நூல்களில் வித்தியாசமான ஒன்றைக் கண்டுபிடித்தார். அது, கோடு போட்ட எழுதும் நோட்புக். அதில் தலைப்பிடப்பட்டிருக்கவில்லை. ஆனால், அது சின்னத்தம்பியின் வாழ்க்கை வரலாறு. அதை, தான் இன்னும் முடிக்கவில்லை என வருத்தம் கலந்து சொன்னார். இருப்பினும் அதை எழுதிக்கொண்டிருக்கிறார். "சின்னத்தம்பி அதிலிருந்து சிலவற்றை படித்துக் காட்டுங்களேன்" அது இன்னும் பூர்த்தியாகமலிருக்கிறது. ஆனால், படுநேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கிறது. அது, அவரின் முதல் சமூக மற்றும் அரசியல் விழிப்புணர்வைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. ஆசிரியர், ஒன்பது வயதாக இருக்கும்போது மகாத்மா காந்தி கொலை செய்யப்படுகிறார். அந்த நிகழ்வு ஆழமான விளைவை உண்டுபண்ணுகிறது.