மேற்கு வங்கத்தின் ஹவுராவில் உள்ள மகர்தா கிராமத்தைச் சேர்ந்த பூர்வண்ணபாரா சமூகத்தினர் ஏறக்குறைய ஆண்டுதோறும், நீண்ட நேரம் ஒளிர்ந்து எரியும் பட்டாசு தயாரிப்பதற்கான போட்டியை நடத்தி வருகின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. துப்ரி எனும் வகை பட்டாசு கிறிஸ்துமஸ் மரம் போல் தோற்றமளிக்கிறது, ரோமானிய மெழுகுவர்த்தி என்றும் கூட இதை அழைக்கலாம். ஆனால் மேற்கத்திய நாடுகளுக்கு இணையாகாது. மேற்கு வங்காளத்தில், கைவினைத் தொழிலில் நிபுணத்துவம் பெற்ற கிராம ஆண்கள் தங்கள் மருமகன்கள் மற்றும் பிற சிறுவர்களுக்கு தீபாவளியின் உள்ளூர் வழிபாட்டு முறையான காளி பூஜையின் போது மற்ற வகை பட்டாசுகளுடன் இதை தயாரிக்கவும் கற்றுக்கொடுக்கிறார்கள். தீபாவளி பண்டிகையின் நீட்சியாக அப்பண்டிகைக்கு ஓரிரு வாரங்கள் கழித்து இந்த போட்டி நடத்தப்படுவது வழக்கம்.
மாலை நேரத்தில், பூர்பண்ணபாராவின் திருவிழாக்கள் அனைத்தும் நடைபெறும் மத்திய முற்றத்தில், இரண்டு மூங்கில் கழிகளை ஒன்றுடன் ஒன்று கட்டுகின்றனர். இந்த ஒற்றை கம்பம், போட்டியிடும் பட்டாசு வேட்டுகளின் உயரத்தை அளவிட உதவும். இது 70 அடி உயரத்திற்கு இருக்கும்.















