அவர் ‘அம்மா’ என அவரை அழைக்கிறார். ஆனால் சஞ்சீவனி, அசுந்தாவின் மகன் அல்ல.
தராம்ஜைகர் ஒன்றியத்திலுள்ள மிரிகுடா துணை சுகாதார நிலையத்தில் கிராமப்புற மருத்துவ ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார் அசுந்தா டோப்போ. சில வருடங்களுக்கு முன், ஆபத்து நிறைந்த ஒரு பிரசவத்தை அவர் பார்க்க வேண்டியிருந்தது. தாயின் ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது. ரத்த அணுக்கள், ஏழு கிராமுக்கும் குறைவாக இருந்தது. “எங்களின் மருத்துவ மையத்துக்கு அவர் வந்தபோது, பிரசவ வலி ஏற்கனவே தொடங்கியிருந்தது. அவரை மேஜையில் படுக்க வைப்பதற்கு முன்பே, குழந்தை பிறந்து விட்டது,” என நினைவுகூருகிறார் அசுந்தா.
உப்ஸ்வாதியா கேந்திரா என அழைக்கப்படும் அந்த மருத்துவ மையத்தில் பிறந்த குழந்தையின் நிலை சரியாக இல்லை. “ஆக்சிஜன் வசதிகள் இங்கு இல்லை. தாயின் நிலையும் ஆபத்தில் இருந்தது,” என நினைவுகூருகிறார் அசுந்தா. ரத்தப்போக்கு இருந்தது. தாயை காப்பதா, குழந்தையைக் காப்பதா என தெரியாமல் தவித்தார் அவர்.
“முதலில் அவர்களை நாங்கள் தராம்ஜைகருக்கு கொண்டு சென்றோம். அங்கு மருத்துவர் இருந்தார். அவருடைய பெயரை நான் சொல்ல விரும்பவில்லை. அவர் அதிருப்தியை வெளிப்படுத்தி, ஆபத்தான நிலையில் ஏன் தாயையும் சேயையும் கொண்டு வந்தோமென எங்களைக் கேட்டார்,” என நினைவுகூருகிறார். ஆனால் அசுந்தா, மருத்துவருடன் சண்டை போட்டிருக்கிறார். “உங்களால் செய்ய முடியவில்லை என்றால் விடுங்கள் என்றும் உதவியேனும் செய்யுங்கள் என்றேன். அவருக்கு கோபம் வந்து விட்டது.”
குழந்தையை தூக்கிய அசுந்தா, அவசர ஊர்தி கேட்டு வலியுறுத்தினார். இவற்றுக்கிடையில் மருத்துவம் இரங்கி, ஊசி போட்டார். உடன் இருந்த மருத்துவ செயற்பாட்டாளர், குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து மூச்சு கொண்டு வர முயற்சித்தபோது மிகவும் உதவியாக இருந்ததாக கூறினார் அசுந்தா.











