“என் வார்த்தைகள் யாருக்கானவை?” என ஒவ்வொரு எழுத்தாளரும் யோசிப்பதுண்டு.
உலகம் வாசிப்பதற்கு முன், எப்போதும் ஒருவர் முதன்முதலில் அதைக் கேட்பார். ஷ்ரத்தானந்த் அசூருக்கு அந்த நபர் 18 வருடங்களாக மாறவில்லை.
“அத்னாஸுக்கு வாசித்துக் காட்டினேன்,” என்கிறார் அவர். என் வாழ்க்கையில் நான் எழுதிய முதல் பாடலான இயேசு கீதம் அவனுக்காக எழுதியதுதான். நெருங்கிய நண்பரும் முதலில் கேட்பவருமான அவரை பார்க்கிறார். சில நொடிகளில் இருவரும் வெடித்து சிரிக்கின்றனர்.
ஷ்ரத்தானந்தும் அத்னாஸும் ஜார்க்கண்டின் லுபுங்பாத் கிராமத்தை சேர்ந்தவர்கள். பால்யகாலத்தில் அவர்கள் தினசரி ஒன்றாகதான் பள்ளிக்கு நடந்து செல்வார்கள். ஒருநாள் ரோமன் கத்தோலிக் தொடக்கப் பள்ளிக்கு செல்லும்போது, அத்னாஸ் மனம் அழுத்தத்தில் இருந்ததை ஷ்ரத்தானந்த் கவனித்தார். “அது, அத்னாஸ் பாடல் பாட வேண்டிய முறை,” என நினைவுகூருகிறார். வருடத் தேர்வுகளுக்கான மதிப்பெண் கொண்டது அது.
சிறுவர்கள், ஜார்க்கண்டில் அதிகமாக பாதிக்கத்தக்க பழங்குடியாக வரையறுக்கப்பட்டிருக்கும் அசூர் சமூகத்தை சேர்ந்தவர்கள். குறைவாக வளர்ந்த இடது கையுடன் பிறந்தவர் அத்னாஸ். லுலா (ஊனம்) என்றும் துத்தா (உடைந்தது) என்றும் அனைவரும் தன்னை அழைத்ததை நினைவுக்குருகையில் ஷ்ரத்தானந்தின் புன்னகை மறைகிறது.














