“அலுமினிய பாத்திரம்!”
“நமக்கு உடம்பிலிருந்து கொடுக்கிற சவுண்ட் தான் நமக்கு பயன்படும். இந்த ஸ்பீக்கர் மாதிரியான விஷயங்கள் எல்லாம் நான் யூஸ் பண்றது இல்ல. என்னோட மூச்சு தான், வாயால தான் சத்தம் போடுவேன்.”
“என் பேரு கணேசன். பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பழைய பொருட்களை வாங்கி கடையில் போட்டு, இத காசாக்கி தான் புள்ளைகள காப்பாத்துறேன். இந்த நாலு கொடத்த வித்துதான் இன்னைக்கு சாப்பிடணும். போகலாம்!”
காரைக்குடி அருகில் உள்ள கானாடுகாத்தானில்தான் 61 வயசு கணேசனை பார்த்தேன். கொத்தமங்கலத்துக்கு போயிட்டு இருந்தார். நான் ஒரு புகைப்பட கண்காட்சிக்காக புகைப்படம் எடுக்க இருக்கிறேன், உங்களை புகைப்படம் எடுத்துக் கொள்ளவா என விளக்கி கூறினேன். அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் தாராளமாக என்னை புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.






















