மழையும் மாறிவிட்டது. “இங்கு 30 வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். இது போன்ற மழையை முன்னெப்போதும் பார்த்ததில்லை. தொடர்ந்து ஒரே அடியாக கனமழை அடிக்கிறது. வருடந்தோறும் மலினை இத்தகைய மழை எங்களுக்கு நினைவுபடுத்துகிறது.”
நினைத்துக் கூட பார்த்திட முடியாத ஆபத்து. வானிலை வெப்பமடைந்ததும் வளிமண்டலம் அதிக ஈரத்தை தக்க வைத்துக் கொள்கிறது. “மழை அளவும் மழைக்காலமும் மாறிவிட்டது. மூன்று மாதங்கள் பெய்த மழை இப்போது இரண்டு வாரங்களில் பெய்கிறது,” என்கிறார் புனேவின் கோகலே வளர்ச்சி மைய இயக்குநரான டாக்டர் குருதாஸ் நுல்கர். மாறும் மழைப்பொழிவு மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத கட்டுமானம் ஆகியவைதான் நிலச்சரிவு ஆபத்துக்கான காரணிகள் என விளக்குகிறார். (வாசிக்க: தானேவில் பெய்த பேய் மழை)
பசார்வாடியில் இருக்கும் ஃபாசாப்பாயின் அண்டை வீட்டுக்காரரான ஜவ்ஜி பால்சிம், வீடுகளுக்கு பின் கிடக்கும் பெரிய பாறைகளை காட்டுகிறார். அவற்றில் பல ஜவ்ஜியின் முழங்கால் வரையும் இன்னும் பல தொடை வரையும் உயரத்தில் இருக்கின்றன. “போன வருடத்தில் இந்த பாறைகள் உருண்டு இங்கு வந்தன,” என்கிறார் அந்த 80 வயது விவசாயி. “சிறு பாறைகள் மரத்தில் சிக்கிக் கொண்டன. இந்த பெரிய பாறைகள் கீழே வந்துவிட்டன. இதுவரை எந்த வீட்டையும் இவை மோதவில்லை.”
பசார்வாடியிலுள்ள மெல்லிய செங்கல் வீடுகள், மலினில் இருந்த வீடுகளை போன்ற தோற்றத்தை கொண்டிருக்கின்றன. பத்தாண்டுகள் கழித்தும், இங்குள்ள குடும்பங்களுக்கு வலிமையான கட்டமைப்பு கிடைக்கவில்லை. கற்களை தடுக்க மர வேலிகளைதான் இவர்கள் சார்ந்திருக்கின்றனர்.
“முன்பு, இப்படி இல்லை. சாலை கட்டுமானம் தொடங்கப்பட்ட பிறகு, மொத்த மலைச்சரிவும் இறுக்கம் குறைந்துவிட்டது,” என்கிறார் ஜாவ்ஜி. “தோண்டி மண்ணை கொட்டிக் கொண்டே இருக்கின்றனர்,” என்கிறார் ஜவ்ஜி. அவரின் மனைவில் யமுனாபாய் 2-3 குவிண்டால் அரசியை ஒரு குந்தாவுக்கும் (0.025 ஏக்கர்) குறைவான நிலத்தில் விளைவிக்கிறார். அந்த வருமானத்துடன், விவசாயக் கூலி வேலை வருமானமும் மகன்கள் புனேவிலிருந்து அனுப்பும் பணமும் அவர்களின் வாழ்க்கையை ஓட்ட உதவுகிறது.
யமுனாபாய் பால்சிம் மென்மையாக பேசுகிறார். “எங்களின் குழந்தைகள் புனேவில் வாழ்கின்றனர். பிளவுகள் மற்றும் அச்சம் ஆகியவற்றால் திரும்பி வர விரும்பவில்லை என்கின்றனர் அவர்கள். இந்த இரு அறைகளும் அவர்களுக்காக கட்டப்பட்டவை. ஆனால் நாங்கள் மட்டும்தான் முதுமையால் கைவிடப்பட்டு இருக்கிறோம்.”