பலியா ஹசேன்நகருக்கு மெஹ்பூப், ஈத் அல் அதா கொண்டாடும் பொருட்டு ஜூன் மாத தொடக்கத்தில் திரும்பினார். அவர்களின் இரண்டரை தள கட்டடத்தை, கட்டுமான தொழிலாளர்கள் நிறைந்த இக்குடும்பம், பல வருடங்களாக கட்டியெழுப்பியிருக்கிறது. ஐந்து அறைகளும் எதிர்காலத்தில் கடை வைக்கவென தரைதளத்தில் கொஞ்சம் வெளியும் கட்டடத்தில் இருக்கிறது. மெஹ்பூப் தன் 30 வயது மனைவி சுர்ணா பீபி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசிக்கும் பகுதிக்கு இன்னும் பூச்சு போடவில்லை. பள்ளிக்கல்வியை நிறுத்தி விட்ட அவர்களின் மூத்த மகனான 16 வயது பகுல் ஷேக், பக்கத்து கடையில் வேலை பார்க்கிறார். இளைய மகன்களான 12 வயது சாகர் ஷேக் மற்றும் 7 வயது ரேஹன் ஷேக் ஆகியோர் உள்ளூர் பள்ளியில் படிக்கின்றனர். புனித குர்பானி மாதத்தில், மெஹ்பூப் வீட்டுக்கு வந்திருக்கும் நிலையில், அவரின் குடும்பம் தியாக நிகழ்வுக்கும் ஏற்பாடுகள் செய்திருந்தது.
அது நடக்கவில்லை. “தானேவின் கட்டுமான தளத்தில் இருந்து வந்த தொடர் அழைப்புகளால்” அவர் கிளம்பி விட்டார். மகாராஷ்டிராவுக்கு திரும்பிச் சென்ற மெஹ்பூப், கொண்டாட்டங்களையும் குடும்பத்தையும் விட்டு விட்டு, தன் வேலையை தொடர்ந்தார்.
உள்ளூர் கடை ஒன்றில் ஜூன் 9ம் தேதி தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது எந்த விளக்கமும் இன்றி, காவலர்கள் அவரை அழைத்து சென்றனர். தானேவின் மிரா சாலையில் இருக்கும் ஸ்ரீ எல்.ஆர்.திவாரி கல்லூரிக்கருகே இருக்கும் காவல்நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார். இரவில் அவர் கொண்டு செல்லப்பட்ட மிரா சாலை காவல்நிலையத்தில், குடியுரிமையை உறுதி செய்யும் ஆவணங்கள் அவரிடம் கேட்கப்பட்டன.
“‘நீ வங்கதேசத்தை சேர்ந்தவன்தானே?’ அதிகாரிகள் இந்தியில் என்னை கேட்டனர். ‘நான் மேற்கு வங்கத்தை சேர்ந்தவன்’ என்றேன். ஆதார் மற்றும் நிரந்தர கணக்கு அட்டை ஆகியவற்றை காட்டினேன். ‘இவற்றை ஐந்து ரூபாய்க்கு கூட வாங்க முடியும்,’ என்றனர்,” என்கிறார் மெஹ்பூப்.
ஏதோவொரு வகையில் யாருக்கும் தெரியாமல், அவர் குடும்பத்தை தொடர்பு கொண்டார். குடும்பத்தினர், மகிஷஸ்தாலியிலுள்ள பஞ்சாயத்துக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். மிரா சாலை காவல் நிலையத்துக்கு எல்லா ஆவணங்களையும் அனுபவித்து வைத்தனர். “நான்கு முழு நாட்களுக்கு, கடுமையான உளவியல் சித்திரவதையை தாங்கிக் கொண்டேன். மொத்த பகல் வேளையும் காவல்நிலையத்துக்கு வெளியே அமர வைக்கப்பட்டேன். இரவுகளில் நிலையத்துக்குள் வைக்கப்பட்டேன்.”
மிரா சாலை காவலர்கள், மெஹ்பூப் அவர்களை குற்றஞ்சாட்டியதை மறுக்கிறார். மூத்த காவல் ஆய்வாளரான மெக்னா புராடே, தங்கள் மீது எந்த தவறும் இல்லை என சொல்கிறார். மெஹ்பூப் ஷேக் போன்ற பலரும் காவல்துறை ஆணையரின் உத்தரவின்பேரில்தான் பிடிக்கப்பட்டதாகவும் சொல்கிறார்.