தனமதி மாஜியின் ஓய்வூதியத்தில் பாதி, வெல்லம் மற்றும் புகையிலை கொண்ட பற்பசையை வாங்குவதற்கே செலவாகி விடுகிறது.
"எனக்கு 1,000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கிறது. அதில் 500 ரூபாயை, எனக்கு உணவளிக்கும் என் சகோதரரின் மருமகளிடம் கொடுத்துவிடுகிறேன். மீதமுள்ள பணத்தை உப்பு, மிளகாய், சோப்பு, உடலுக்குத் தேய்த்துக்கொள்ள எண்ணெய் மற்றும் 'குடாகு' வாங்க செலவிடுகிறேன்," என்கிறார்
எஞ்சியிருக்கும் ஓரிரு பற்களுக்காக, பற்பசைக்கு அதிகம் செலவிட வேண்டுமா என்று இந்த நிருபர் கேலியாகக் கேட்ட போது, "அது இல்லாமல் எனக்கு சரி வராது. உங்கள் அனைவருக்கும் 'குட்கா' (புகையிலை பழக்கம்) போல, இது அது எனக்கு ஒரு வழக்கம் ஆகிவிட்டது," என்று புன்னகைத்தவாறே கூறுகிறார்.
தனமதி, ஓடுகளைக் கொண்ட மண் வீட்டில் வசிக்கிறார். அந்த ஒற்றை அறை வீட்டுக்குள் நுழைய, ஒருவர் குனிந்துதான் செல்ல வேண்டும். ராகி அரைக்க உரல், டார்ச், மண் அடுப்பு மற்றும் துணிகளுக்கான மூங்கில் கூடை தான் இங்குள்ள முக்கியப் பொருட்கள். வயதான காலத்திலும் அந்த வீட்டின் மண் தரையிலேயே உறங்குகிறார்.
நாட்டின் மிக ஏழ்மையான பகுதிகளில் ஒன்றான ஒடிசாவின் கலஹண்டிப் பகுதியில் வளர்ந்த தனது குழந்தைப் பருவத்தைப் பற்றி உரலில் அரைத்துக் கொண்டே, எங்களோடு உடையாடுகிறார்.












