“கடற்கரைகள், கேசினோக்களை தாண்டி கோவாவில் சுற்றி பார்க்க இன்னும் ஏராளம் உள்ளன,” என்று உள்ளூர்வாசி ஒருவர் நான் சென்றபோது என்னிடம் கூறினார். நிறைய புது விஷயங்களை நான் அங்கு தெரிந்துக் கொண்டேன். “பேருந்தில் சென்று சுற்றிப் பாருங்கள்!,“ என்று அவர் புன்னகையுடன் பரிந்துரை செய்தது எனது ஆர்வத்தை இன்னும் தூண்டியது
எனவே ஓர் குளிர் நிறைந்த ஞாயிறன்று, இந்து கோயில்களுக்கும், மசாலா தோட்டங்களுக்கும் பெயர் போன கோவாவின் ஹிண்டர்லேன்ட் தாலுக்காவிற்கு சென்றேன். பெருந்தோட்டங்களுக்கு நடுவே போன்டாவிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சஹாகரி மசாலா தோட்டத்தை தேர்வு செய்தேன். இந்த மசாலா தோட்டம் பிற தோட்டங்களைப் போன்றே நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தில் பரவி கிடந்தது. அங்கு மசாலா பொருட்கள், பழங்கள், மூலிகைகள், மருத்துவ குணம் கொண்ட மரங்கள் இருந்தன. கலவையாக அனைத்து பயிர்களையும் வளர்க்கும் இதுபோன்ற பாரம்பரிய முறையை குலாகர் என்று உள்ளூரில் அழைக்கின்றனர். 2000ஆம் ஆண்டுகளில் அவர்கள் இதுபோன்ற பெருந்தோட்டங்களை ’சூழலியல் சுற்றுலா‘ தளமாக மாற்றத் தொடங்கினர்.
மசாலாக்களின் ராஜா
மல்லிகை- சாமந்திப்பூ மாலை அணிவித்து பாரம்பரிய முறையில் என்னை வரவேற்ற பிறகு, அன்றைய நாளுக்கான வழிகாட்டி சிரில், இளநீரும், கிண்ணம் நிறைய முந்திரிகளையும் கொடுத்து உபசரித்தார். இவற்றை கொஞ்சமாக சாப்பிடுங்கள் என்றும் மதியம் புஃபே முறையில் உணவு உள்ளது என்றும் அவர் என்னை எச்சரித்தார். அங்கு ஏற்கனவே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அருகாமை குடிலில் கூடியிருந்தனர். என் கண் முன்னே இருந்த ஆடம்பரமான விருந்தை ருசிப்பதற்கு முன் உணவு மேசையில் அறிமுகமில்லாத ஒருவரிடம் புன்னகைத்தேன். அவர் கோவாவின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு எஸ்.பி.நேற்றைய பரபரப்பான செய்தியாளர் சந்திப்பில் அவரை நான் சந்தித்து இருக்கிறேன்.
மரத்தடியில் மர பெஞ்சுகளில் அமர்ந்தபடி பாரம்பரிய கோவா உணவுமுறையை ருசிப்பது ஒரு பொன்னான தருணம். பாக்கு மட்டை தட்டு, மூங்கில் கரண்டிகள், மண் பானைகளில் பரிமாறியது என ஒவ்வொன்றும் சுகானுபவம். தோட்டத்தில் பறித்த மசாலா கலவையான மஞ்சள், மல்லி, பட்டை, மிளகு ஆகியவை கோவாவின் பாரம்பரிய உணவுகளில் அதிக இடம் பிடிக்கின்றன. இறால் வறுவல், குழம்பு, ரவா கிங்ஃபிஷ், சிக்கன் சகுட்டி- எனும் போர்த்துக்கீச உணவுகள், இந்துக்களின் முறைப்படி வினிகர் சேர்க்காமல் செய்யப்பட்டு இருந்தன. எனக்கு இரண்டு பதார்த்தங்கள் மிகவும் பிடித்தன-ஒன்று சூகா சிப்பி, பனாஜீயில் மதிய உணவில் அது எப்போதும் இடம்பெறும் என்பதால் நினைவில் உள்ளது. ஆனால் இங்குள்ள சிப்பி பெரிதாக, திடகாத்திரமாக உள்ளது, மற்றொன்று சங்கரா மீன்வறுவல். கோகம் சர்பத் கொண்டு அவற்றை அலசிவிட்டு வெனிலா ஐஸ்கிரீம், பழங்களைக் கொண்டு நாங்கள் அவற்றை அலங்கரிப்போம்.
இத்தனை உணவு வகைகள் இருந்தாலும் புகழ்பெற்ற ‘சுசிகாட்‘ உணவின் சுவையை உணர முடியவில்லை. இருந்தாலும் பரவாயில்லை. அடுத்த சுற்று, இரண்டு மணி நேரத்திற்கு பண்ணையை சுற்றிப் பார்ப்பது. பயணத்தை இனிதே தொடங்க, சிரில் கூல்லி எனக்கு ஃபிரெஷ் ஃபெனி பானம் லார்ஜ் ஒன்றை கையில் கொடுத்தார்!
எங்கள் பயணத்தின் நடுவே இலைகளால்செய்யப்பட்ட சிறிய பாலத்தை கவனமாக கடக்கும்போது, அவர்சிறியஇலைகளைஎன்மூக்கில் திணித்தார். மதுபானத்தால் தலை பாரமாக இருந்தது. “என்னால் அந்த இலையை நுகர்ந்து கண்டறிய முடியவில்லை“. “பிரிஞ்சு இலை” என அவர் கூறியபடி மஞ்சள் கிழங்கு தண்டை உடைக்கிறார். நாங்கள் மிளகு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய், பெர்ரிக்கள், பிஞ்சு அன்னாசிகளை அங்கு பார்த்தோம். உயரமான பலா மரங்களையும் கண்டோம். அனைத்தையும் கண்ட பிறகு, அவற்றின் மருத்துவ குணங்களை சிரில் என்னிடம் விவரிக்கிறார். தரமான சமையலறை மசாலா பொருட்கள் என் வாழ்வில் திடீரென வந்துவிட்டது. இந்த தோட்டத்தில் 75 பேர் வேலை செய்கின்றனர். இந்தியாவில் ஒரு சில இடங்களில் மட்டுமே வளர்க்கப்படும் வனிலா இங்கும் உள்ளது.
வெறும் அரட்டையாக இப்பயணம் அமையவில்லை என்பது நல்ல விஷயம் தான். “ஒரே விஷயத்தை தினமும் பேசுவது உங்களுக்கு அலுப்பு தட்டவில்லையா?“ என நான் அவரிடம் கேட்டேன். “அன்றாடம் நாம் சந்திக்கும் வெவ்வேறு மனிதர்கள் நமக்கு வெரைட்டியை தருகிறார்கள். நாங்கள் இறுதியில் சுற்றுலாப்பயணிகளிடம் பல புது விஷயங்களை கற்கிறோம். வெளிநாட்டினருக்கு இதுபற்றிய பொது அறிவு மிகுதியாக உள்ளது. ஆனால் இந்தியர்கள் பலர் தங்கள் உணவில் பயன்படுத்தும் மசாலாக்களில் சிலவற்றின் பெயரைக்கூட அறிந்திருப்பதில்லை,“ என்று பத்தாண்டுகளாக வழிகாட்டியாக வேலை செய்து வரும் மூக்கு கண்ணாடி அணிந்திருந்த அந்த வழிகாட்டி சிரிக்கிறார். எவ்வளவு அவமானம், எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் தென்னை மரங்கள், பாக்கு, முந்திரி மரங்களின் பசுமையில் நனைந்தபடி.
பெருந்தோட்டத்தில் பறவைகள் காணும் இடங்களும் உள்ளன, இங்கு மட்டும் 80க்கும் மேற்பட்ட வகையிலான பறவையினங்கள் தென்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். சிறிது நேரம் யானை சவாரி செய்தோம் . இவ்விடத்தில் நாம் மூன்று யானைகள் கொண்ட ஒரு குடும்பத்திற்கு உணவளிக்கலாம். அவற்றை குளிக்க வைக்கலாம். அதற்கு கைமாறாக அவை நம்மீது தண்ணீரை பீய்ச்சுகிறது. எனக்கு இந்த பயணம் மிகவும் இனிமையாக அமைந்தது. பிறகு ஃபெனி மதுபான சுத்திகரிப்பு ஆலைக்கு சிரில் என்னை அழைத்துச் சென்றார். இங்கு முந்திரிப் பழத்தை ஒரு வாரத்திற்கு புளிக்க வைக்கின்றனர். முதல் சுத்திகரிப்பில் நமக்கு கிடைப்பது உரக்- லேசான மதுபானம், இரண்டாவது சுத்திகரிப்பில் புகழ்பெற்ற ஃபெனி பானத்தை நீங்கள் பெறலாம். பத்து நாட்களுக்கு ஒருமுறை 30 லிட்டர் மதுபானம் இங்கு கடைந்தெடுக்கப்படுகிறது. இப்பெருந்தோட்டத்தில் 75 பேர் வேலை செய்கின்றனர். ஒன்றரை மணி நேரம் ஆகியிருக்கும். திடீரென்று ஒரு குவளை குளிர்ந்த மூலிகை நீர் என் முதுகில் கொட்டியதும் நான் அலறினேன். “ஒன்றுமில்லை, காய்ந்துவிடும்,“ என்று ஊற்றிக் கொண்டே சிரிக்கிறார் ஒரு பெண்மணி.
சிரில் கொடுத்த ஒரு கோப்பை சூடான லெமன்கிராஸ் தேநீரை பருக ஒரு குடிலின் குளிர்ச்சியான நிழலில் நான் அமர்ந்தேன். வீட்டிற்கு கிளம்பும் முன் தோட்டத்தில் பறித்த பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும். மனஅழுத்தம், நீரிழிவு, எடையிழப்பு போன்றவற்றை போக்கும் இயற்கை நிவாரணங்கள்… மட்டுமின்றி, இவை ஆண்களின் பாலியல் குறைபாட்டை போக்கும் எண்ணெய்கள், பெண்களுக்கும் பாலுணர்வை தூண்டி, அவர்களின் உடல் தோற்றத்தை மேம்படுத்தவும் செய்கிறது. பக்கவிளைவுகளோ, போதை மருந்தாகவோ அவை இருக்காது என அவர்கள் உறுதியளித்தனர்.
‘மசாலா‘ பெருந்தோட்டத்திற்கு சென்றுவந்தது தனித்துவமான சிறப்பான அனுபவமாக இருந்தது. என் பையில் இருந்த நறுமணமூட்டும் வனிலா குச்சிகளை நுகர்ந்தபடி அரசு பேருந்தில் அமர்கிறேன்.
உண்மை தகவல்:
அங்கு செல்வதற்கு: பணாஜீயில் இருந்து போண்டாவிற்கு (30 கி.மீ) மாநில பேருந்தில்செல்லவும். போண்டாபேருந்துநிலையத்திலிருந்துஇரண்டுகி.மீதொலைவில்கர்ட்டியில்அமைந்துள்ளமசாலாபண்ணைக்குஒருவண்டி / ஆட்டோ வாடகைக்கு எடுக்கவும். அல்லதுபணாஜீயில்இருந்துநேரடியாகஒருகாரில் செல்லுங்கள். செலவு: மதிய உணவுமற்றும்பண்ணைசுற்றுப்பயணம்ரூ. 400 +. நேரம்: காலை 11 மணி - மாலை 4 மணி வரை, ஆண்டு முழுவதும் திறந்திருக்கும். இப்பகுதியைச்சுற்றியுள்ளபிறமசாலாபண்ணைகள்: சவோய்தோட்டம், அபிஸ்மசாலாபண்ணை, டிராபிக்மசாலாதோட்டம்
இந்த கட்டுரை CSE மானியப்பணிகளின்கீழ்எழுதப்பட்டது.இதன் திருத்தப்பட்ட பதிப்பு 2010 -ல் இந்துஸ்தான் டைம்ஸில்வெளிவந்தது
தமிழில்: சவிதா


