பெ. சென்றாயப்பெருமாள் சாதி அமைப்பின் காரணமாக, ராஜா ராணி ஆட்டத்தில் நடிப்பதற்கான கட்டாயத்தில் பள்ளிப் படிப்பைக் கைவிட நேருகிறது. அவரும் அவரது சகோதரர்களும் தங்கள் குழந்தைப் பருவத்தில் பெரும்பாலும் பெண் வேடங்களிலேயே நடித்தனர் - அவதூறுகளையும் பாலியல் துன்புறுத்தல்களையும் பாரம்பரியத்தின் சுமைகளோடு சேர்த்தே தாங்கினர். தனது 23ஆம் வயதில் மீண்டும் கல்வி பயிலும் முயற்சியில் தனி ஒருவனாகக் காலையில் படிப்பும் இரவினில் ஆட்டமும் எனப் பெரும் சவாலை மேற்கொண்டார். முறைப்படி மறுக்கப்பட்ட கல்வியை போராடிப் பெற்றார். உயர்கல்வியால் ஏற்படப் போகும் நல்வினைகளை நம்பி, அவர் அறிந்த நாட்டுப்புறக் கலையின் பாரம்பரியம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு, அதில் முனைவர் பட்டமும் பெற்றார். ஆனால் அந்த நம்பிக்கை கெடுவாய்ப்பாகக் குறுகிய காலம் மட்டுமே நீடித்தது.
T


Madurai, Tamil Nadu
|SAT, JUL 26, 2025
பேராசிரியராக ஒரு கலைஞனின் சித்திரம்
தலித் நாட்டுப்புறக் கலைஞர் ஒருவர், சாதி அமைப்பின் சிக்கல்களிலிருந்து தப்பிக்க விரும்பிக் கல்வி கற்கிறார். ஆனாலும் அந்தச் சிக்கல்களிலிருந்து அவரால் மீள முடியவில்லை. இந்த ஆவணப்படம் அவரது தொடர்ச்சியான போராட்டத்தை வெளிக்காட்டுகிறது
Documentary
Video Editor
Translator
காணொளியைப் பாருங்கள்: தண்டிக்கப்படும் பேராசிரியர்
இந்த ஆவணப்படத்தை உருவாக்குவதற்கு ஆதரவளித்த பி. சாய்நாத் மற்றும் பிரதிஷ்டா பாண்டியா ஆகியோருக்கு திரைப்பட இயக்குனர் நன்றி தெரிவிக்கின்றார்.
தமிழில்: கீர்த்திவாசன். பா
Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]
Donate to PARI
All donors will be entitled to tax exemptions under Section-80G of the Income Tax Act. Please double check your email address before submitting.
PARI - People's Archive of Rural India
ruralindiaonline.org
https://ruralindiaonline.org/articles/portrait-of-an-artist-as-professor-ta

