நாம்கரின் தரையிலுள்ள அகல் விளக்குகள், வெளிச்சம் கொடுத்து, பார்வையாளர்களுக்கு வழி காட்டுகின்றன. கயான் (பாடகர்) மற்றும் பயான் (மேளம் வாசிப்பவர்) வந்து நிற்கின்றனர். வாத்தியக்காரர், அஸ்ஸாமின் பாரம்பரிய தாள வாத்தியமான கோலை நெஞ்சில் வைத்திருக்கிறார். பெரிய பித்தளை சிம்பல்கள் (போர் தாளம்) இசைஞர்கள் வாசிக்கத் தொடங்கியதும் விளக்கு வெளிச்சத்தில் மின்னுகின்றன.
இந்த மாலை நிகழ்ச்சியின் கதை சொல்லி பேச தொடங்குகிறார். அறை அமைதியாகிறது. பிபுல் தாஸ் வெளிச்சத்துக்கு வருகிறார்.
இரவு முழுவதும் நீடிக்கும் அஸ்ஸாமின் பாரம்பரிய வைணவ மத நாடகம், உற்சாகமாத்துடனும் நிதானத்துடனும் தொடங்குகிறது. பெரும்பாலான நாடகங்கள் ராமாயணம் மற்றும் மகாபாரதங்களை அடிப்படையாக கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட ஓர் அத்தியாயத்தை கதையாக கொண்டிருக்கிறது.
மகாபாரத காதையின் பாண்டவர்களுக்கு தாயாக இருக்கும் குந்தி பாத்திரம்தான் பிபுலுக்கு பிடித்த பாத்திரம். “ஊருக்குள் என்னை குந்தி என அழைப்பார்கள்,” என்கிறார் அவர் புன்னகையோடு. தந்தையின்றி தாயால் வளர்க்கப்பட்ட அவர், தாய்மையுடன் உணர்வுரீதியான பிணைப்பை கொண்டிருக்கிறார். “எனக்குள் ஒரு தாய் இருப்பதாக நான் கருதுகிறேன். அதுதான் குந்தி பாத்திரத்துடன் என்னை இணைக்கிறது.” தனக்கு பிடித்த வரிகளை பாடுகிறார் அவர்:
















