“கட்டில் நெய்வது என்ரத்தத்திலேயே இருக்கிறது,” என புன்னகைக்கிறார் மூன்றாம் தலைமுறையாக கட்டில்செய்யும் கிருஷ்ணவதி. “இக்கலையை விரும்புவரைத்தான் நான்மணமும் முடித்திருக்கிறேன்!” என்கிறார் 45 வயது தாருபழங்குடியான அவர்.
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக கிருஷ்ணாவதியும் அவரது கணவர் சந்திரபால் சிங் ராணாவும் கயிற்றுக்கட்டில்களை செய்துவருகிறார்கள். கட்டிலின் கால்களைமரத்திலிருந்து வெட்டி வடிவமைத்து பிறகு கயிறு பின்னுவார்கள்.
கோடைக்காலங்களில் வெப்பம் அதிகரிக்கும்போது, படுக்கைகளுக்கு பதிலாககட்டில்களைதான் மக்கள் விரும்புவர். எனவே கைவினைஞர்கள் மேமாதம் தொடங்கி செப்டம்பர் வரை வேலை பார்ப்பார்கள். வருடத்தின் மிச்சக்காலம் விவசாயக்கூலியாக வேலை பார்ப்பார்கள். தினக்கூலியாக கிருஷ்ணாவதி 350 ரூபாயும் சந்திரபால் கூடுதலாக 100 ரூபாயும் சம்பாதிக்கின்றனர். வருடத்தில் 120-150 நாட்களுக்கு அவர்களுக்கு வேலை கிடைக்கும்.















