“பழங்குடி உணவை நாம் மறந்து விட்டோம்,” என்கிறார் யாவத்மாலில் வசிக்கும் சந்தா கோதம்
கிராமப்புற இந்தியாவில் 75 சதவிகிதத்துக்கு அதிகமான பெண்கள் விவசாயத்தில் இருக்கின்றனர். ஆனால் சிலருக்கு மட்டும்தான் சொந்தமாக நிலமோ கால்நடையோ இருக்கிறது. சிலருக்கு மட்டும்தான் இயற்கை வளங்களை பயன்படுத்தும் உரிமைகள் இருக்கிறது. உணவு தயாரிப்புக்கும் பன்மையச்சூழல் பாதுகாப்புக்கும் மையமாக பெண்கள் விளங்குகின்றனர். எனினும் சமூகக் கட்டமைப்பு அவர்களை விவசாயிகளாக கருதுவதில்லை.
மகாராஷ்டிராவின் பஞ்சம் பாதித்து விவசாயிகள் தற்கொலைகள் அதிகம் இருக்கும் பகுதிகளான மராத்வடா மற்றும் விதர்பா ஆகிய பகுதிகளில் மட்டும், சந்தா போன்ற பெண் விவசாயிகள் விவசாயப் புரட்சியை அமைதியாக நிகழ்த்தி, பாரம்பரிய உணவுகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
”எல்லாமும் இந்த நிலத்தில் விளையும் என பிற பெண்களிடம் நான் சொல்வேன்,” என்கிறார் சந்தா புன்னகையோடு.


