“ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சம் 30 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும், ஆனால் இது 27 தாண்டுவதில்லை.”
இந்த மூன்று சக்கர மோட்டார் வாகனம் பழுதாக இருந்தாலும், 34 வயது வசீம் குரேஷி வேலைக்குச் சென்று வர அதனிடம் கெஞ்சிக் கூத்தாடி, அதையே பயன்படுத்துகிறார்.
வயரிங் சிக்கலாக இருப்பதால், பைக்கை ஏற்றும்போது கவனமாக பிரேக்குகளை பயன்படுத்த வேண்டும் என அவர் என்னிடம் சொல்கிறார். அவரது மூன்று சக்கர வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள வசதியான நாற்காலியில் அமர்ந்தபடி அடியில் உள்ள பாட்டரியை குனிந்து என்னிடம் காட்டுகிறார். அதற்குப் பின்னால் சிறிய பெட்டியும் உள்ளது.
வசீம் தனது வாகனத்தை ஸ்டார்ட் செய்து, ஹரியானாவில் உள்ள தனது கிராமமான மண்டிகேராவிலிருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் உள்ள, டெல்லி-அல்வார் தேசிய நெடுஞ்சாலையில் மரங்களுக்கு பின்னால் அமைக்கப்பட்டுள்ள, தனது பழுது நீக்கும் கடையை நோக்கி புறப்படுகிறார். அண்டை வீட்டு பிள்ளைகள் அவரது வாகனத்திற்குப் பின்னால் இருக்கும் சிறிய பெட்டியில் சிரித்தபடி ஓடி வந்து ஏறுவதையும் நான் பார்க்கிறேன். அவர் எதையும் கண்டுகொள்ளாமல் சிரித்தபடி கடக்கிறார்.












