அம்பதாஸ் காகடே தெரிந்தே ஆபத்தில் இறங்கியுள்ளார். சம்பா பருவத்தில் இரண்டாவது சுற்று நடவு செய்துள்ளார். விவசாயத்திற்கு செய்யப்பட்ட செலவில் சிறிதேனும் கையில் நிற்கும் என்பது அவரது இறுதி நம்பிக்கை
மழைக்காலம் ஓரளவு சிறப்பாக இருந்த காரணத்தால் ஜூன் மத்தியில், பர்பானி மாவட்டம் சைலு வட்டம் மோரிகான் கிராமத்தைச் சேர்ந்த 83 வயது விவசாயி பருத்தி, சோயாபீன், துவரை, பாசிப்பயறு போன்றவற்றை பயிரிட்டார். ஆனால் ஆகஸ்ட் நடுவாக்கில் கூட மராத்வாடாவில் மழை பெய்யவில்லை. பிராந்தியத்தில் பர்பானி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் பயிர்கள் காய்ந்தன அல்லது வளர்ச்சியின்றி காணப்பட்டன. காகடேவின் சோயா, துவரை, பாசிப்பயறு போன்றவைக் கூட சுருங்கிவிட்டன.
“என்னிடம் 10 ஏக்கர் நிலம் உள்ளது,” என்கிறார் காகடே. “ஒரு ஏக்கரில் பருத்தியை பிடுங்கிவிட்டு, முட்டைகோஸ் [ஜூலை இறுதியில்] பயிரிட்டேன்.” அது மூன்று மாத கால பயிர் என்பதால் தண்ணீர் அதிகம் தேவைப்படாது. மழை அப்போது பெய்யாவிட்டால் நான் பிற பயிர்களுக்கு பதிலாக தக்காளி செடிகள் நடுவேன் [தண்ணீர் குறைவாகவே தேவைப்படும் செடி].
ஜூன் மாதம் நடவு செய்த பருத்தி பயிர்களை பிடுங்கிவிட்டு முட்டைகோஸ் பயிரிட்டதில் காகடேவிற்கு ஒரு ஏக்கருக்கு ரூ.15,000 இழப்பு ஏற்பட்டுவிட்டது. வறட்சி நிலை நீடித்தால் அவருக்கு முட்டைகோஸ் பயிரிலும் கூடுதலாக ரூ.15000 இழப்பு ஏற்படும்.“ இந்த பருவத்தில் இலாபம் கிடைக்காது என்று எனக்குத் தெரியும்,” என்கிறார்.






